Heading : அன்பான சரோஜா மாமி.......ஆசிரியர் மதன்
Comment : ஆனந்த விகடன் எம்டியும் அமரர் பாலசுப்பிரமணியனின் மனைவி சரோஜா மாமி மறைவுக்கு, அனைத்து வாசகர்களின் சார்பில் மதன் சார் நமலரும் நினைவுகளை வெளியிட்ட விதம் எங்களை நெகிழ் வைத்தது.
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
Heading : வலையங்கம்
Comment : பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அது, அவர்களுக்கு எதிராகவே திரும்ப கூடும் என்பது சரியான எச்சரிக்கை. ஆனால், தமிழக கட்சிகளின் காதில் ஏறாது.
ரகோத்தமன், பாலகிருஷ்ணன், நாகர்கோவில்
Heading : ஹாய் டியர் மதன்
Comment : அனைத்து கேள்விகளுக்கும் சுவாரஸ்யமான பதில் தருகிறீர்கள்.எனக்கு ஒரு டவுட். கணவர் எந்தவொரு வேலை செய்தாலும் குறை கூறும் மனைவியின் மனநிலையை அறிந்து கொள்வது எப்படி?
பாலாஜி, மனோபாரதி, ஈஞ்சம்பாக்கம்
Heading : மைலாப்பூர் மாட வீதியில் ஒரு புகைப்பட சுற்றுலா பால்கி.
Comment : ஆஹா என்ன ஒரு நவராத்திரி பொம்மை collection.அற்புதம். அபாரம்.கண்நிறைந்து விட்டது.கூடவே பழங்கள் காய்கறிகள் பூக்கள் அழகு சேர்க்கின்றன. செம collection. மைலாப்பூர் போய் வந்த மாதிரி ஒரு feeling.very very nice and beautiful
Chandra Ramakrishna , Chennai.
Heading : மலைகளின் அரசி ஆபத்தில் ! புதிய சுற்றுச் சூழல் சவால். !? லைவ் ரிப்போர்ட் !!
Comment : மலைகளின் அரசியான ஊட்டியில் மினி டைடல் பார்க் வரலாமா வேண்டாமா என்றால், வேண்டவே வேண்டாம்! ஏன்னா, அந்த இடத்தில் ஏற்கெனவே காட்டேஜ் ஆக்கிரமிப்புகளால் காடுகளும் இயற்கை வளங்களும் அழிந்து வருகின்றன. ஏற்கெனவே சென்னை தரமணி டைடல் பார்க் முன்னாள் பளபள, பின்பகுதி வனாந்தரம்! ஊட்டியையும் பாலைவனமா மாத்த வேண்டாமே?!
ஷோபனா திவாகர், புதுவை
Heading : குடைக்குள் மழை ? - முதல்வர் பிரதமர் காட்சிகள் - ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : திண்டுக்கல் விழாவில் பிரதமர் மோடி-முதல்வர் ஸ்டாலின் ஒரே மேடையில் அமைதியாக இருந்தது, கவர்னர் ரவியை அகற்றும் போராட்டத்தில் ஏற்பட்ட புயலுக்கு பின் அமைதியா, வரப்போகும் சூறாவளி மையம் கொள்ளப் போவதற்கான முன்னோட்ட சூழலா எனப் போகப் போகத் தெரியும்!
ராஜேந்திரன், கருப்பசாமி, விருதுநகர்
Heading : ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை- உச்சநீதிமன்றம் தடாலடி!
Comment : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது மனிதாபிமானமே! ஏனெனில், அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டார்களே!
சிவகாமி விக்ரமன், மதுரை
Heading : வாழ்க்கை இது தான்
Comment : அடடே... இந்த குக்கூ கவிதைகூட நல்லாயிருக்கே!
உஷா பார்த்திபன், சோழிங்கநல்லூர்
Heading : தமிழ் தகராறு ! பாஜகவுக்குமா ?? மாலா ஶ்ரீ
Comment : டாஸ்மாக் தண்ணி போட்டு எழுதினா, தமிழ் இப்படித்தான் தமாஷா இருக்கும். இதுவரை பாஜக்காரங்க மட்டும் யோக்கியமானவங்களா தெரிஞ்சாங்க. இப்ப அவங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை ஆயிட்டாங்க!
சடகோபன் ராஜகோபால், சீர்காழி
Heading : நோட்டா ரன்னர் அப் - மும்பையிலிருந்து பால்கி
Comment : மும்பை இடைத்தேர்தலில் இத்தனை உள்குத்து அரசியலா? தலை கிர்னு சுத்துதுபா... ஒண்ணுமே புரியல! கடைசியா சுயேட்சைக்கு போட்டியா நோட்டா ரன்னர்-அப்னு சொன்னியே... எதுக்கு, யாருக்கு? ஆள் வுடு... ஜூட்!
மாயாவதி ராமன், திருவெண்காடு
Heading : நட்பே ! நட்பே !! - சிறுகதை - பா அய்யாசாமி
Comment : ஒரு பெண்ணின் இளம்பருவ ஆணின் நட்பு ஆழத்தை, அன்பின் இலக்கணத்தை மிக அழகான சிறுகதையாக தந்திருக்கிறார் அய்யாசாமி. வெல்டன்!
ரேணுகா ஹரி, விருகம்பாக்கம்
Heading : மனிதம்-மகா
Comment : இதென்ன வினோத கவிதையா?! காய்க்காத மரத்துக்கு காலணி மாலையா? அப்ப, பிள்ளை பெங்கால் பெண்ணுக்கு என்ன சொல்வீங்க?
கலா கார்த்திக், வடபழனி
Heading : மனிதம்-மகா
Comment : மரம் காய்க்காத குற்றத்துக்காக காலணி மாலையா?! இதில் மனிதம் எங்கே இருக்கு? ஊக்குவிக்காதீர்!
ராகவேந்தர், ஜெயராமன், காளஹஸ்தி
Heading : விகடகவி நியூஸ் ரூம்
Comment : விகடகவி நியூஸ் ரூபின் அனைத்து செய்திகளும் அதிரிபுதிரியா இருக்கே... மற்ற நியூஸ் சேனல்களை விட, இதுக்கு டிஆர்பி ரேட்டிங் எகிறிடும் போலிருக்கு!
ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை
Heading : மைலாப்பூர் மாட வீதியில் ஒரு புகைப்பட சுற்றுலா பால்கி.
Comment : வாதாடி வெங்கட்ராமனின் மயிலாப்பூர் மாடவீதி கொலு பொம்மைகள் விற்பனை புகைப்படங்களின் கேலரியை பார்த்து பிரமித்தேன். இவர், நவீன கால பிலிம் நியூஸ் ஆனந்தனின் புகைப்பட வாரிசா இருக்குமோ?!
சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை
Heading : கருத்துக்கதிர்வேலன்
Comment : நச்
(வாசகர்கள் தயவு செய்து உங்கள் பெயரையும் ஊரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். - ஆ.குழு)
Heading : மைலாப்பூர் மாட வீதியில் ஒரு புகைப்பட சுற்றுலா பால்கி.
Comment : Miga sirappaana arumaiyana padangal. Nandri.
Deepika, Rocklin, USA
Heading : நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : வேதங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான்கு வேதங்கள் பற்றி நிறையவே விஷயங்கள் உள்ளன.ஆசிரியருக்கு நன்றி.இது மாதிரி இன்னும் நிறைய தகவல்கள் தர வேண்டும். ஃ 🙏🙏👌
Chandra Ramakrishna , Chennai.
Heading : மைலாப்பூர் மாட வீதியில் ஒரு புகைப்பட சுற்றுலா பால்கி.
Comment : Athimbar, very well captured as always. Very colourful indeed
Shankar Ramakrishnan, Mumbai
Leave a comment
Upload