தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

20221017174517173.jpg

1.புது கரன்சியின் வாசம் ,புது புத்தகத்தின் வாசம், அழகிய மங்கையின் அருகாமை வாசம் ?எது பெட்டர்?

20221019071215361.jpeg

20221017172537141.jpg

அழகிய மங்கைக்கு வாசனை இருக்கும் என்பது எதிர்பார்க்க முடியாது.! புது கரன்சி வாசனையை நுகர்ந்து விட்டு, அதில் புது புத்தகம் வாங்கி, அதன் வாசனையை ரசிப்பேன்!

2.இரண்டு வரியில் உங்கள் காதலை சொல்லச் சொன்னால் எப்படி எழுதுவீர்கள்?

20221017172743549.jpg

அது தெரியாததால் தான் என்னுடைய காதல் வெற்றி பெறவில்லை!

3.பீதோவன் காது கேளாமல் சிம்பொனி வாசித்ததை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

20221017173305188.jpg

என்னால் எப்படி கற்பனை செய்ய முடியும்? ஆனால் "நான் முழு சிம்பொனியையும் என் மனசுக்குள் கேட்டேன் "என்றார் பீதோவன். அது முடியும் என்று தோன்றுகிறது!

4.ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

20221017173823156.jpg

அவரது நம்பிக்கை. அவர் பழையபடி ரோல் பண்ணாமல், வேறு மாதிரி முதிர்ச்சியான ('முதல் மரியாதை' படம் போல) படத்தில் நடித்தால், பார்க்க நான் தயார்!

5.பிரபாகரனோடு ஆமைக்கறி மன்னிக்கவும்,ஆமை வடை சாப்பிட்ட அனுபவம் உண்டா?

20221017174349492.jpg

காபி சாப்பிட்டதுண்டு! என் கார்ட்டூன்களை பார்த்து தானும் வரைவது ஒரு ஹாபி என்றார் என்னிடம். நான் சும்மா சொல்லாதீர்கள் வரைந்து காட்டுங்கள் பார்ப்போம் !?என்றேன். உடனே ஒரு பேப்பரில் ஒரு கொக்கு காலை தூக்கிக் கொண்டு காத்திருப்பது போல வரைந்து காட்டினார். அதை நைசாக எடுத்துக் கொண்டு வந்து விகடனில் அவர் பேட்டியோடு வெளியிட்டு விட்டேன்! (இதெல்லாம் நடந்திருக்கிறது ,நீங்கள் என்னடா வென்றால் ஆமை வடை சாப்பிட்டீர்களா? 'என்கிறீர்கள் 'சரியான சாப்பாட்டு ராமன்!)

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in