தொடர்கள்
வலையங்கம்
 வலையங்கம்

ஆபத்தானது

2022101906540608.jpg

"மத சுதந்திரம் இருக்கலாம் ஆனால் கட்டாய மதமாற்றங்கள் அதிகமாக நடக்கின்றன இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் கிரிமினல் குற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை பல நேரங்களில் அறிந்திருப்பதில்லை. அளவுக்கு அதிகமான மத சுதந்திரம் கூடாது. கட்டாய மதமாற்றம் தீவிரமான பிரச்சனை இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் "இப்படி ஒரு எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சொல்லி இருக்கிறது.

கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் இந்த கருத்தை சொல்லி இருக்கிறார்கள். இப்போது சில மாநிலங்கள் கட்டாய மதமாற்றத்தை தடுப்பதற்காக கண்டிப்பான சட்டத்தை இயற்றி இருக்கிறது. கட்டாய மதமாற்றம் என்பது குற்ற நடவடிக்கை தண்டனைக்கு உரியது என்று அந்த சட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கொண்டுவந்துள்ள கட்டாயம் மதமாற்ற அவசர சட்டத்தில் மதமாற்றம் செய்ய முற்படுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பத்து ஆண்டு சிறை 10 லட்சம் ரூபாய் அபராதம் என்று அந்த அவசர சட்டத்தில் உத்தரகாண்ட் அரசு குறிப்பிட்டுள்ளது . சில மாநிலங்களில் மதமாற்ற சட்டம் கொண்டு வந்த பிறகு கட்டாய மதமாற்றம் செய்தவர்களை கைது செய்தும் இருக்கிறார்கள். கட்டாய மதமாற்றம் இந்தியா அளவில் பல இடங்களில் நடக்கிறது என்பதற்கு இந்த அவசர சட்டங்களும் உச்சநீதிமன்ற எச்சரிக்கையையுமே ஆதாரம்.

ஒரு பக்கம் இந்தியா மதசார்பற்ற நாடு என்று மதசார்பின்மை பற்றி பேசிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு அவர்களின் வறுமையை தங்களது சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மதமாற்றம் செய்வது கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய குற்ற செயல்தான் இவர்களின் நடவடிக்கை மதசார்பின்மையை கேலி படுத்துவது போல் இருக்கிறது. கட்டாய மதமாற்றம் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பது உண்மைதான் எனவே எல்லா மாநிலங்களும் கட்டாய மதமாற்றத்தை தடை தடை செய்ய கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்.