தொடர்கள்
கதை
 மகளானவள் -  சிறுகதை -- பா அய்யாசாமி

2022102917475650.jpg


நீ அவரோட ஒரே மகன்தானே ? என்று கேட்ட கோபால், ஆம் என்ற சுந்தரைப் பார்த்து அப்படி என்றால் உங்கள் அப்பா என்ன முடிவு எடுத்தாரோ அதுதான் சரி என்றார்.

அவர் சுயமாக சம்பாதித்து வாங்கிய சொத்துகளை உன் மனைவியின் பெயரிலோ, வேறு யார் பெயரிலும் எழுதி வைப்பது அவர் உரிமை என்று கூறிட, அவர் பெற்ற பிள்ளை நான், என்னை நம்பாமல் அந்த வீட்டை, என் மனைவியின் பெயரில் எழுதுவதை என்னால்பொறுத்துக்கொள்ள முடியலை என்று நண்பனான வக்கீல் கோபாலிடம் புலம்பிக்கொண்டு இருந்தான் மது அருந்தியபடி.

பொழுது விடிந்து, மணி ஒன்பதிருக்கும், நேற்று அடித்த சரக்கின் வேதனை தந்த தலைவலியோடு எழுந்த சுந்தர், முகம் கழுவிஅமர்ந்தபோது , ஒன்பதாவது படிக்கும் மகன் பரத் அருகில் வந்து தனது மார்க் ஷீட்டைக் காண்பித்தான்.

ஏண்டா, எல்லா பாடத்திலும் மார்க் குறைஞ்சு இருக்கு? என்று கேட்டதற்கு,

எல்லாம் எனக்குத் தெரியும், நீ கையெழுத்தைப் போடு, என்ற மகனை கோபத்தில் அடிக்கத் துவங்கினான்.

தாயுள்ளம் பதிறியபடி வந்து அரவனைத்து மகனை உள்ளே அழைத்துச் சென்றது.

“ ஏண்டா சுந்தர், நீ குடித்து குடித்து குடும்பத்தையை கவனிக்கிறதில்லே, அவன் கண் முன்னாடியே அவன் அம்மாவைஅடிக்கிறாய், திட்டுகிறாய், பின்னே அவன் எப்படி உன்னை மதிப்பான் ? உன்னால் அவன் படிப்பும் பாழாகிறது என்றுகடிந்துக்கொண்டார் சுந்தரின் அப்பா மூர்த்தி.

ஏற்கனவே வீட்டை மருமகள் பெயரில் எழுதுவதைக் கேள்விபட்டு கடுப்பின் உச்சத்தில் இருந்தவன், சட்டையை எடுத்துமாட்டியபடி வீட்டிலிருந்து வெளியேறி சென்றான் சுந்தர்.

வேலைக்கும் சரியாக போறதில்லை, இதிலே குடி பழக்கம் ரோசம் வேற இவனுக்கு என்று அவனைக் கண்டித்தார்.

என்னங்க, இன்னும் என் பிள்ளையை கறிச்சுக் கொட்டிகிட்டே இருக்கீங்க! அவன் கோபித்துக்கொண்டு போறான் பாருங்கஎன பதறியது ஒரு தாய் மனம்.

அவன் இப்படியானதற்கே நீதான் காரணம், ரொம்ப செல்லம் கொடுத்து அவனை குட்டிச்சுவராக்கினதே நீதான் என்று தன்மனைவியை திட்டத் தொடங்கினார்.

அவனுக்குப் பிடித்தவளையே கல்யாணம் பண்ணியிருந்தால் ஒரு வேளை நல்லபடியா இருந்திருப்பானோ? என்னவோ சாதி,குலம்,கோத்திரம் என சொல்லி, பிரித்துவிட்டோம் என்று வருத்தப்பட்டார் அம்மா.

கல்யாணம் பண்ணினால் பொறுப்பு வந்திடும், சரியாகி விடுவான் என்று நினைத்து அதையும் செய்து பார்த்தாச்சு, என்னபுண்ணியம்,
பதினைந்து வருடம் ஆனதுதான் மிச்சம், திருந்த மாட்டேங்கிறான் என வருத்தமடைந்தார்.

“ அதற்காக நீங்களும் வீடு, சொத்தையெல்லாம் மருமகள் பெயரிலே எழுதினால் என்னங்க அர்த்தம்?

இவனை, நாமதான் பெற்றோம்,வளர்த்தோம், நாம சகித்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒரு பாவமும் அறியாத இந்த பிள்ளை நம்மை நம்பி இங்கே மருமகளாக வந்து பதினைந்து வருடமாக இவனோடகுடும்பம் நடத்துகிறாளே, நமக்கு ஏதாவது குறை வைத்து இருக்காளா? அவர்கள் வீட்டின் நிலையை மனத்தில் வைத்து,இவனைச் சகித்துக்கொண்டு அத்தனை ஆசாபாசங்களையும் ஒடுக்கிக்கொண்டு,மகனை நல்வழிப்படுத்துவதில்அக்கறையோடும், பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பாலமாய் இருந்து பெருமை கெடாமல் பொறுத்து இருக்கிறாளே நம்மருமகள்.

அவளுக்கு நாம உயிரோடு இருக்கிறவரை ஒரு பிரச்சனையும் இல்லை, நமக்குப் பிறகு அவளுக்கு என்ன வாழ்க்கைஉத்திரவாதம்? இப்படி ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது புகுந்த வீட்டில் உள்ளநம்மைப் போன்றவர்கள் தான் என்று மூர்த்தி சொன்னபோது,

“ மருமகளாக வந்தவள்தானே என்று பாராமல் மகளாக பாவித்து அவள் வாழ்க்கைக்கும் சேர்த்து கவலைப்படும் உங்கள் மகனாக நான் பிறந்தேன் என சந்தோஷப்படுவதாக கூறி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான் உள்ளம் திருந்தி இல்லம்திரும்பிய சுந்தர்.