தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2023010401103998.jpg

Heading : சீனப் புத்தாண்டு... - முயல் வருடம்! நீங்கள் எந்த மிருகம்...? -ராம்

Comment : நான் dragon😃 Very nice article

Anu, Hong Kong

Heading : வலையங்கம்

Comment : இரண்டாவது பத்தி: எதோ விஷமத்தனமான வேலை என சந்தேக பட சாத்தியமானதுதான் பார்க்கவன்,Reston VA, USA

Heading : வாங்காதே படிக்காதே - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

Comment : சிறப்பாக எழுதியுள்ள இந்த கட்டுரை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பார்க்கவன் Reston VA USA

Heading : வாழ்க்கை இது தான்

Comment : Superb words touchable with our life cycle. Superb Vikatakavi. Interesting articles. Keep it up in future. You've got more readers all over world. Congrats.

Swarna balachander , California, USA

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - இதழ் 1

Comment : தமிழ் பற்றிய முதல் தொகுப்பு ரொம்ப நல்லாயிருக்கு. அதுவும் பரணிதரன் வரைந்த ஓவியம் அனைத்தையும் உள்ளடக்கியது. அற்புதம்.

ராமானுஜதாசன், திருச்செங்கோடு

Heading : பத்ம விருதுகள் பட்டியல் - மாலா ஶ்ரீ

Comment : மத்திய அரசு பத்ம விருதுகள் அறிவித்த வேகத்தில், தமிழகத்தில் பாம்புபிடி வீரர்கள் முதல் விருது தமிழகத்தில் விருது பெற்றவர்களின் பட்டியலை சுடச்சுட விகடகவி வாசகர்களுக்கு சுவையாக வழங்கி அசத்திவிட்டீர்களே!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : பாலபுரஸ்கார் விருது வென்ற தமிழக மாணவி! - மாலா ஶ்ரீ

Comment : பாலபுரஸ்கார் விருது பெற்றவர்களின் விவரங்கள் நாளிதழ்களில் பார்த்தே ரொம்ப நாளாச்சு. ஆனால், இம்முறை பாலபுரஸ்கார் விருதுபெற்ற கோவை மாணவி உட்பட பல்வேறு குழந்தைகளின் படங்களுடன் விகடகவி விரிவான, சூடான செய்தி வெளியிட்டதற்கு பாராட்டுகள்.

தமன்னா சிவபிரபு, நீலகிரி

Heading : வாங்காதே படிக்காதே - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

Comment : வாங்காதே, பிடிக்காதே என்ற தலைப்பில் அருமையான கருத்துகளை நளினமான முறையில், யார் மனதும் புண்படாமல், சுவையான உரையாடல் கதை போல் உருவாக்கி தருவதில் எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர் சமர்த்துதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

மாயா குப்புசாமி, நூர்ஜஹான், ஊத்துக்குளி

Heading : நாராயணா!! - சத்தியபாமா ஒப்பிலி

Comment : சத்தியபாமா ஒப்பிலியின் கதையில் இத்தனை உரையாடலும் கற்பனையிலா... அட, ராமா, ராமச்சந்திரா... நாரதர் கற்பனை அபாரம்!

ஜமுனா பிரபாகரன், வடபழனி

Heading : பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 13 பழனி மலை, தமிழ்நாடு!! தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை டிவிக்களில் நேரலையில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் விகடகவியை பிரித்து பார்த்தபோது, பழனி கோவில் தல வரலாறுடன் கும்பாபிஷேகம் பற்றிய செய்திகளை பிரமாண்ட படங்களுடன் போட்டு அசத்திவிட்டீர்கள் சுந்தரமைந்தன்!

குரு, ரமணி, சுசித்ரா, கோவை

Heading : வாழ்க்கை இது தான்

Comment : ஆழமான நம்பிக்கை தரும் பதிவு.

Chandra Ramakrishna , Chennai.

Heading : உறவுகள் வேண்டும்...! உறுதி எடு...!! பாலா கோவை

Comment : அருமையான எழுத்து பாலா . இன்றைய உலகத்தின் யதார்த்தத்தை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். உங்கள் பேனாவிலிருந்து மேலும் பல கவிதைகள் வர வாழ்த்துக்கள்

Sriram V, Chennai

Heading : பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 13 பழனி மலை, தமிழ்நாடு!! தடைகள் நீக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : பழைய வாழ்க்கை வரலாறு, புராண செய்திகளை குறைத்துவிட்டு, இதுபோன்ற லேட்டஸ்ட் செய்திகளை அதிகரிக்கலாமே... இளம் வாசகர்களும் நாளிதழுக்கு பதிலாக விகடகவியை படிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சண்முகசிகாமணி, பாலகுரு, திண்டுக்கல்

Heading : சிவகார்த்திகேயன் அக்காவுக்கு விருது - மாலா ஶ்ரீ

Comment : நடிகர் சிவகார்த்திகேயன் சகோதரிக்கு சிறந்த மருத்துவர் விருதா?! கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஒருசில நடிகர்களை போல் இவரும் கப்ஸா அடிக்கிறார் என நினைத்தோம். ரியலி கிரேட்! பெற்றோர் கஷ்டப்பட்டு, அதை குழந்தைகள் உணர்ந்து படித்து முன்னேறுமே தவிர சோடை போகாது!

சிதம்பர முருகேசன், வெள்ளக்கோவில்

Heading : கூலிவேலை செய்தாவது கல்வி பெறு ! - மாலா ஶ்ரீ

Comment : கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கியும் கல்லூரியில் படித்தபடியே குடும்பத்தை காப்பாற்றி வரும் மாணவன் வினோத் பாராட்டுக்கு உரியவர். இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில் விகடகவி முன்னுரிமை அளிப்பது மிக்க மகிழ்ச்சி.

தாட்சாயணி பாலமுருகன், சிதம்பரம்

Heading : உறவுகள் வேண்டும்...! உறுதி எடு...!! பாலா கோவை

Comment : கோவை பாலாவின் உறவுகள் கைகோர்த்தல் கவிதை நெகிழ் வைத்தது. ஒருசில உறவுகள் மட்டுமே அத்தகைய நிலைப்பாட்டை கொண்டாடுகிறது. மற்றவை, 'ஐயோ... இவன் வந்தால் நம்மை பார்த்து பொறாமைப்படுவானே'னு பழகாமலே பொருமுகிறது. சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு.

சந்தோஷ், ராமசுவாமி, அலகாபாத், உ.பி

Heading : அண்ணாமலையார் கோயிலில் சிவதாண்டவம் ஆடிய துருக்கி பெண்! மாலா ஶ்ரீ

Comment : திருவண்ணாமலையில் துருக்கி நாட்டு சிவதாண்டவமா?! கேட்கவே நல்லாயிருக்கு. நம்ம ஊரு சிட்டி பெண்கள் பாப் பாரிலும் திருமண மண்டபங்களிலும் மேற்கத்திய நடனம்னு கன்னாபின்னா டிரஸ் போட்டு ஆடுதுங்க. இந்த வீடியோவை பார்த்தாவது திருந்தட்டும்!

நந்தினி சுகுமாரன், சிவகாசி

Heading : மிஸ்டர் ரீல்

Comment : ஓபிஎஸ்-ஸையே குழப்பிவிட்டீரே மிஸ்டர் ரீல்! அவர் பாட்டுக்கு அம்மா சமாதியில் போய் உட்கார்ந்து அழப்போறாரு. அதுக்குள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிஞ்சிடும். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாழ்த்து சொல்வதோடு ஓபிஎஸ் வேலை முடிஞ்சிடும்!

சீனிவாசன், இந்திரா கோகுலன், அண்ணாநகர்

Heading : மகத்தான பெண்மணி -லலிதா பாரதி, மரியா சிவானந்தம்

Comment : பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தி லலிதா பாரதி குறித்து எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவரை பற்றியும் அவரது ஆளுமை குறித்து மருமகள் சாந்தலட்சுமி கூறியதை மரியா சிவானந்தம் அழகாக தொகுத்து வழங்கிய விதம் மிகச் சிறப்பு!

ரேணுகா ஹரி, மீனா பார்த்திபன், சென்னை

Heading : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறக்க முடியாத அவதாரம்

Comment : சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி குறித்தும், அதற்கு முன் நடைபெற்ற சுதந்திர போராட்ட வெற்றிகள் ஆங்கிலேயரால் இருட்டடிப்பு செய்த விதம், நேதாஜிக்கு பிரதமர் மோடி சிலை கவுரவித்து, அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர வலியுறுத்தல் என வரலாறு சிறகு விரிக்கிறது. ரசிக்கத்தக்க கட்டுரை!

விஷ்ணு ராம், கார்த்திக், ஐதராபாத்

Heading : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறக்க முடியாத அவதாரம்

Comment : சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி குறித்தும், அதற்கு முன் நடைபெற்ற சுதந்திர போராட்ட வெற்றிகள் ஆங்கிலேயரால் இருட்டடிப்பு செய்த விதம், நேதாஜிக்கு பிரதமர் மோடி சிலை கவுரவித்து, அவரது அஸ்தியை இந்தியா கொண்டுவர வலியுறுத்தல் என வரலாறு சிறகு விரிக்கிறது. ரசிக்கத்தக்க கட்டுரை!

விஷ்ணு ராம், கார்த்திக், ஐதராபாத்

Heading : காலத்தை சிறைப்பிடித்தல் -மகா

Comment : பழைய கறுப்பு-வெள்ளை புகைப்படத்தின் பின்னணி விவரங்களை மிக அழகான கவிதையாக மாற்றிவிட்டாரே மகா! சூப்பர்ப்.

ராஷ்மிகா, யாஸ்மின் , புதுக்கோட்டை

Heading : செங்கல்பட்டு...... இன்னொரு சாத்தான் குளம் !

Comment : தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்ட அரசு சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் இதே அவலநிலை தான்! தற்போது இன்னொரு சாத்தான்குளமாக செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்ல அதிகாரிகள், ஊழியர்களின் அராஜகம் தெரியவந்துள்ளது. இதேபோல் மற்ற கூர்நோக்கு இல்லங்களில் கொலை நிகழ்ந்தால் மட்டும் வெளிவரும். பிறகு மறந்துவிடும். நடவடிக்கையும் இருக்காது.

இளவேந்தன், பாரிவள்ளல், திருநெல்வேலி

Heading : இடைத்தேர்தல் நாடகம்- ஜாசன்

Comment : எங்க சொந்த ஊரு ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கு. அங்கு நடைபெறும் இடைத்தேர்தல் நாடகம் குறித்து எங்களின் நண்பர் விகடகவியின் கட்டுரையை அனுப்பினார். படித்த எங்களுக்கு தலை சுற்றியது. ஓட்டு போட ஊருக்கு வரலாம்னு நெனைச்சோம்... இப்ப, அதுவும் கேன்சல்!

கேசவன், கிருஷ்ணமூர்த்தி, போர்ட்பிளேர், அந்தமான்

Heading : வலையங்கம்

Comment : பிராந்திய மொழிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை வெளியிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கைக்கு பாராட்டு. குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியின் பங்கு என பிபிசி ஆவணப் படம் வெளியிட்டால் எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு ஆதாயம். சீனாவில் கொரோனா படுகொலை வெளியாகாமல் தடுத்தால் எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடை குவியும் என்பதை பாமர மக்கள் அறிந்ததே! இதை விகடகவி வலையங்கம் விளக்கிய விதம் அருமை!

பத்மாவதி ராஜ்குமார், சூரத், மகாராஷ்டிரா

Heading : மொராக்காவில் நடிகர் மோகன்லால் !- கேரவன் M அருணாச்சலம்

Comment : மொராக்கோ நாட்டு பயணம் குறித்து அருணாசலம் விவரிக்கையில், மணலும், மணல் சார்ந்த கட்டாந்தரையும்தான் என்கிறார். எங்க ஊரிலும் அதே நிலைதான். 'மோகன்லால் படம் போட்டீங்களே, ஏதோ சுவாரஸ்யமா இருக்கும்'னு நெனைச்சோம். இதுவும் தேர்தல் வாக்குறுதிதானா? தொடருமா?!

தல்பீர் ரிஸ்வான், செந்தில்குமார் , விருதுநகர்

Heading : வாங்காதே படிக்காதே - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

Comment : அப்டேட்டடாயிரு. இல்லாட்டி அவுட்டேட்டடாயிடுவ.

Heading : காசி – தமிழ். இலக்கியமும் வரலாறும்

Comment : காசி இராமேஸ்வரம் தமிழ் இலக்கியமும். வரலாறு பதிவு நல்ல Messages உள்ளது. அடுத்த பதிவில் இன்னும் புதிய message களுடன் எதிர்பார்க்கிறேன்.🙏🙏💐👍

Chandra Ramakrishna , Chennai.

Heading : மகத்தான பெண்மணி -லலிதா பாரதி, மரியா சிவானந்தம்

Comment : திருமதி லலிதா பாரதி அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ஃ🙏🙏

Chandra Ramakrishna am, Chennai.