தொடர்கள்
வலையங்கம்
சூடு பத்தலை ?? வலையங்கம்

20230502170939128.jpg

பாரதிய ஜனதா எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் கைது செய்ய வேண்டும் கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் தர்ணா பேரணி என்று நடத்தி பாராளுமன்ற திறப்பு விழா அன்று ஊர்வலமாக அவர்கள் சென்றபோது இந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பல பதக்கங்களை வாங்கிய வீரர்களையும் வீராங்கனைகளையும் தரதர என்று இழுத்துச் செல்வதும் குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் போடுவது என்று யாரையோ திருப்திப்படுத்த டெல்லி போலீஸ் நடத்திய அராஜகம். இதனால் வெறுத்துப் போனவர்கள் தங்கள் வாங்கிய பதக்கங்களையும் கங்கையில் வீசுவதற்கு முடிவு செய்து அறிவித்த போது விவசாயிகள் சங்கம் தற்சமயம் அதை தடுத்து நிறுத்தி இருக்கிறது.

இதன் நடுவே டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷனை கைது செய்ய போதிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று முதலில் ட்விட்டரில் பதிவு செய்துவிட்டு அதை அவசரமாக நீக்கிவிட்டு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன விரைவில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ட்விட்டரில் பதிவு செய்தது டெல்லி போலீஸ்.

பாரதிய ஜனதா எம்பி பிரிஜ் பூஷன் என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும் நீதிமன்றம் தரும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று புத்திசாலித்தனமாக சொல்வதாக நினைத்து சொல்லி இருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியை மாநகராட்சி தேர்தலில் கூட தோற்கடிக்க முடியாமல் போன கோபத்தில் மத்திய பாரதிய ஜனதா அரசு மதுபான ஊழல் என்று சொல்லி டெல்லி துணை முதல்வரை அவசர அவசரமாக கைது செய்து சிறையில் வைத்திருக்கிறது பாரதிய ஜனதா எம்பி பிரிஜ் பூஷன் சொல்வது போல் டெல்லி துணை முதல்வர் மீதும் மத்திய புலனாய்வு அமைப்புகள் நீதிமன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பித்து அதன் பிறகு அவருக்கு தண்டனை வாங்கித் தராமல் அவசர அவசரமாக ஏன் கைது செய்தார்கள் என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் பாரதிய ஜனதாவின் கருப்பு புள்ளிதான் இந்த எம்பி பிரதமர் மோடியை உலகத் தலைவர்கள் பாராட்டியும் ஆட்டோகிராப் கேட்டால் மட்டும் போதாது உள்ளூர் மக்களும் அவரை கொண்டாட வேண்டும் அதுதான் முக்கியம். தேர்தலில் உலகத் தலைவர்கள் வாக்களிக்க முடியாது .உள்ளூர் மக்கள் தான் வாக்களித்து பதவிக்கு அனுப்ப முடியும் இதை ஏற்கனவே கர்நாடக சட்டமன்றத் தேர்தல் சுட்டிக்காட்டி விட்டது. அந்த சூடு இன்னும் போதவில்லை போலும்.