தொடர்கள்
அழகு
ஜப்பானில் கண்ணாடி கழிவறை - மாலா ஶ்ரீ

20231018084411196.jpg

எல்லாவற்றையும் புதுமையாக கண்டுபிடிக்கும் ஜப்பான் நாட்டில் பொது கழிவறை பயன்பாட்டுக்கு, பளிச்சென காட்டும் கண்ணாடியால் ஆன அறையை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

'டோக்கியோ டாய்லெட் ப்ராஜெக்ட்' என்ற தனியார் தொண்டு நிறுவனம்தான், இந்த நவீன கண்ணாடியால் ஆன 4 தடுப்புகளுடன் கூடிய பொது கழிவறைகளை அமைத்துள்ளனர். இந்த கழிவறையை சுற்றியுள்ள கண்ணாடிகள் சாதாரணமானவை அல்ல… நவீன தொழில்நுட்பத்தினால் ஆன 'ஸ்மார்ட் கிளாஸ்' ஆகும்.

இந்த 'ஸ்மார்ட் கிளாஸ்' கழிவறையை பயன்படுத்த விரும்புவோர் 'சுத்தமாக உள்ளதா?' என்பதை வெளியே நின்றபடி, பளிச்சென காட்டும் கண்ணாடி வழியாக ஆராய்ந்து கொள்ளலாம். நுழைந்து கதவைப் பூட்டியதும், பளிச்சென இருந்த கண்ணாடி சுவர்கள் இயல்பை மாற்றிக் கொண்டு, இரும்பு திரை போல் மூடிக்கொள்ளும். அதன்பிறகு கழிவறைக்குள் சென்றவர் கதவைத் திறந்து வெளியே வரும்வரை, அந்த இரும்பு திரை விலகவே விலகாது. இதனால் ஒருவர் அச்சமின்றி இந்த பொது கழிவறையைப் பயன்படுத்த முடியும்.

'இந்த நவீன கழிவறை நம்மூருக்கு வந்தால் எப்படி இருக்கும்?!' என்று யோசித்து பார்த்தால், 'எழும்பூர் உள்பட பல்வேறு பறக்கும் ரயில் நிலையங்களில் உரிய பராமரிப்பின்றி பழுதாகி, பரிதாப நிலையில் காட்சியக்கும் ஏராளமான தானியங்கி நகரும் படிக்கட்டுகளைப் போல் இதுவும் மாறிவிடும்'

பாதி வேலையில் இருக்கும் போது கண்ணாடி வேலையைக் காண்பித்தால் சுற்றிலும் கூட்டம் கூடி விடாதா ??