தொடர்கள்
தொடர்கள்
இசைக்கவியின் இதயம் - வாழ்க்கைத் தொடர் - 2 - வேங்கடகிருஷ்ணன்

20231018104031123.jpg

இந்த தொடரின் இரண்டாவது நிகழ்வில் நாம் கேட்க இருப்பது அவரோட அப்பாவை பத்தி. "சேச்சு" என்கிற பெயரிலேயே அவரின் அப்பாவைப்பற்றிய இசைக்கவியின் புத்தகம் 60 லிருந்து 90 வரையிலான ஒரு வாழ்க்கை வரலாறு மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார மாற்றம் குறித்த ருசியான தகவல் பெட்டகம் என்றும் சொல்லலாம். படிக்கப் படிக்க மீண்டும் அந்த காலத்திற்கே போய்விட மாட்டோமா என்று எங்க வைக்கும் புத்தகம்.

20231018105801826.jpg 20231018105846133.jpg

சேச்சு இப்படித்தான் ரமணனுடைய நண்பர்களுக்கும் ஏனைய பலருக்கும் அவர் அறிமுகம்.

2023101810494024.jpg 2023101810503799.jpg

அனந்த ராமசேஷன் என்கிற இந்த மாபெரும் ஆளுமை தமிழ் மொழி வடமொழி ஆங்கிலம் மூன்றிலும் சரளமாக பேசி பழக எழுதக்கூடியவர் வடமொழியில் ஆசுகவி. தேவியின் அருளை பரிபூரணமாக பெற்றவர். நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில் நிறுவ மிகப்பெரிய காரணமாக இருந்தவர். அதனுடைய தந்திரியாகவும் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். தேவியோடு நேரில் பேசக்கூடிய பாக்கியம் பெற்றவர். மிகப் பெரிய ரசனையாளர் அதுதான் இங்கே மிகவும் முக்கியம். ரமணன் அவருடைய இளமைக்கால் அனுபவங்களின் தொடர்ச்சியாக அப்பாவுக்கும் அவருக்கும் இருக்கிற அனுபவங்கள், அப்பாவை பற்றிய முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகிறார். இவர் ஹிந்து பத்திரிக்கையில் எடிட்டராக இருந்தவர். எடிட்டோரியல் எழுதக்கூடிய திறமையும் ஆங்கில புலமையும் அவரிடம் இருந்தது மேலும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். நிறை வாழ்க்கை வாழ்ந்தவர் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. அவர் உருவாக்கி விட்டுப் போன மாணவச் செல்வங்கள், அடுத்த தலைமுறை கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இன்றும் அவரை நினைவு கூறுகிறார்கள். அவர் மறைவுக்குப் பின்னர் இசைக்கவி ரமணன் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சேஷன் சம்மான் என்கிற விருது ஒன்றை உருவாக்கினார்கள். அதில் அவர்கள் திறமையான கலைஞர்கள் பிரபலங்கள் ஆகியோருக்கு வருடா வருடம் அந்த விருது கொடுக்கிறார்கள் முதல் முதலாக இந்த விருதை பெற்றவர் வில்லுப்பாட்டு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.

20231018105202737.jpg

அதைக் குறித்தும் ரமணன் இங்கே நினைவு கூறுகிறார் அந்த காணொளி வாசகர்களுக்காக இதோ...