ராஷ்மிகா மந்தனா
ரன்பீர் கபீர் நடித்துள்ள படம் அனிமல் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா அனில் கபூர் பாபி தியோல் சக்தி கபூர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் பற்றி ரன்பீர் கபூர் மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ராஷ்மிகா பற்றி இந்தப் படத்தில் மிக அழகாகவும் நேர்மையாகவும் நடித்திருக்கிறீர்கள் என்று பாராட்டி இருக்கிறார். இந்தப் படத்தில் படுக்கை அறை காட்சிகளில் ரன்பீர் கபீருடன் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா.
பிரியக்கூடாது
உலக அழகி ஐஸ்வர்யாராய் ,இந்திப்பட உலகின் முடிசூடாமன்னன் அமிதாப் மகன் அபிஷேக் பச்சனை 16 வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாராய் தனது கணவருடன் கருத்து வேற்றுமை முற்றியுள்ளதாக தெரிகிறது. அபிஷேக் பச்சன் தன் கையிலிருந்த திருமண மோதிரத்தை கழற்றிவிட்டார் என்றும் இனி இருவரும் விவாகரத்து செய்வது என தீர்மானித்துள்ளதாக சமுக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது வதந்தி ஆக இருக்க வேண்டும் ,இருவரும் பிரியக்கூடாது என ஐஸ்வர்யாராய் ரசிகர்கள் வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி ,நித்யா மேனன் நடிக்கும் படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் ஏற்கனவே காதலிக்க நேரமில்லை என்று ஒரு படம் வெற்றிகரமாக பல திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. படத் தயாரிப்பு நிறுவனத்திலும் முறையாக அனுமதி பெற்று இந்த பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.
அக்கா நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில் நயன்தாரா பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்கிறார். ஏற்கனவே இமைக்காத நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நடித்திருக்கிறார் நயன்தாரா.
சாய் பல்லவி
யாஷ் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கிறார். மலையாள நடிகை கீது மோகன் தாஸ் இயக்கும் இந்தப் படம் கோவா மாஃபியா கேங் பற்றிய ஆக்ஷன் படமாம்.
மீனாட்சி சவுத்ரி
வெங்கட் இயக்கத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி தெலுங்கு படம் ஒன்றில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார்.
கனிகா
மிக்ஜாம் புயலால் நடிகை கனிகா வசிக்கும் குடியிருப்பில் சுற்றி தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பேரிடர் மீட்பு குழு நடிகை கனிகா உட்பட 150 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
திரிஷா
நடிகை திரிஷாவுக்கு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சொகுசு பங்களா உண்டு. இது தவிர மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரீகல்பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ரேஞ்ச் ரோவர் இப்படி 80 லட்சம் முதல் 5 கோடி மதிப்பிலான ஐந்து கார்கள் வைத்திருக்கிறார். படப்பிடிப்புக்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சொகுசு காரை எடுத்துச் செல்வாராம்.
அனுஷ்கா
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அமலாபால்
தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக ஆடு ஜீவிதம் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார் அமலாபால் இசை ஏ.ஆர்.ரகுமான்.
Leave a comment
Upload