தொடர்கள்
தொடர்கள்
மக்கள் அரங்கம்

2023110817280376.jpg

சென்ற வாரம் நாம் துவக்கிய புதிய பகுதி இந்த "மக்கள் அரங்கம் "

சமூகம் சார்ந்த கேள்விகளுக்கு வாசகர் பதில் கூறும் இப்பகுதி , மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்

நாம் தொடுத்த கேள்வி :

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யலாம் ?

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு பலவித முயற்சிகளை மேற்கொள்கிறது.

விலையில்லா சீருடை, புத்தகங்கள் , மிதிவண்டி , செருப்பு, காலை, மதிய உணவு என்று பல சலுகைகளை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சியும் தரப்படுகிறது .இருப்பினும் நகர்ப்புறங்களில் மக்கள் இன்னும் தனியார் பள்ளிகளை நாடி செல்கிறார்கள். தரமான கல்வி, ஆங்கில மொழிப் பயிற்சி என்று தனியார் பள்ளிகள் தருகையில் அதிக கல்விக் கட்டணத்தையும் பொருட்படுத்தாது தனியார் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்க்கிறார்கள்

இதுபற்றிய நமது வாசகர் சீனிவாசன் பார்கவன் கருத்து

நல்ல திறமை ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் தாம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு சேர வசீகரிக்க இயலும்.

1.ஆசிரியர்கள் தகுதி, திறமை,கற்பித்தலில் ஆர்வம் போன்ற அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படவேண்டும் .எல்லா இடத்திலும் ,தகுதி திறமை உண்டு ...ஒதுக்கீடு முறை இதற்கு எதிரியாக, தடையாக இருக்க தேவை இல்லை ...

2.ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் குறைந்த பட்சம் 3 முதல் 6 மாதங்கள் வரை பயிற்சியில் இருக்க வேண்டும் ,.வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றுத் தரவும் மற்றும் தனியாக விவாதங்கள் முறையில் , தங்களது திறமைகளை சிறப்பித்து கொள்ளவும் இது உதவி புரிய வேண்டும் .

****** ******* *****

இந்த வாரத்துக்கான கேள்வி

இப்போது வெளிவரும் திரைப்படங்களில் வன்முறை அதிகமாக உள்ளது .இது பற்றிய உங்கள் கருத்து என்ன ?

உங்கள் கருத்துக்களை எங்களுக்கு புகைப்படத்துடன் அனுப்புங்கள்..அடுத்த இதழில் வெளியிடுகிறோம்.

vikatakavi.weekly@gmail.com