தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் கடிதம்

20240123180623308.jpg

Heading : விரும்பியதை தந்தருளும் சிறுவாபுரி முருகன்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சிறுவாபுரி முருகன் கோவிலின் சிறப்புகள் பற்றியும் அக்கோயிலுக்கு செல்லும் வழித்தடங்கள் பற்றியும் விரிவாக விளக்கி, அங்கு செல்லும் ஆவலைத் தூண்டிவிட்டீர். ஆனால், கோயில் கோபுரத்தின் புற்றீசல் போல் முளைத்துள்ள நடைபாதை கடைகளையும் செவ்வாய்க்கிழமைகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் இல்லாததையும் சீரான பேருந்து வசதி இல்லாததையும் சொல்ல மறந்துவிட்டீரே!

அகிலாண்டேஸ்வரி, பார்வதி, மாயா, ஊத்துக்கோட்டை

*****

Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

Comment : என்னய்யா நீர்‌... ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யாவுடன் அமிதாப் படத்தை போட்டுவிட்டு, சவுந்தர்யாவின் அடுத்த படத்துக்கு ரஜினி ஓகே சொல்லிட்டார் என்கிறீர். சோதனை காலம் ஆரம்பிடுச்சு டோய்! நடிகைகள் படத்தை போட்டு கிளுகிப்பாக்கிட்டீர்!

பாலகுரு, சிமியோன், கார்த்திக், நவிமும்பை

*****

Heading : பாராளுமன்றத் தேர்தல் திணறும் அரசியல் கட்சிகள் -விகடகவியார்

Comment : தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை பாமக, தேமுதிக, தமாகா உள்பட பல்வேறு சின்னஞ்சிறு லெட்டர் பேடு கட்சிகள் திமுக, அதிமுக, பாஜ போன்ற பெரிய கட்சிகளிடம் தொகுதியை குறைத்தாலும் அதிகளவு 'சி'யையும் மாநிலங்களவை எம்.பி பதவியையும் எதிர்பார்க்கின்றன. ஜெயித்தாலும் தோத்தாலும் வரும்படி வேணும்ல!

சுபத்ரா, கேசவன், கிறிஸ்டோபர் , செங்கல்பட்டு

*****

Heading : மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்? - விகடகவியார்

Comment : விவசாயிகள் மற்றும் அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்றாலே மத்திய-மாநில அரசுகள் கிள்ளுக்கீரையாக நினைக்கின்றன. அவர்களின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை பன்னாட்டு வணிக நிறுவனங்கள் பேக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை ஊக்குவிக்கின்றன. ஏர் பிடிக்கும் விவசாயிகளை மறக்கும் நாடு உணவு பஞ்சத்தில் அடிபட்டு சோமாலியாவாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கணேசன், கோகுல், மணிகண்டன் , திருச்செங்கோடு

*****

Heading : மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விவசாயிகள் போராட்டம்? - விகடகவியார்

Comment : ஒவ்வொரு நாடா மன்றத் தேர்தலுக்கு முன் பஞ்சாப், அரியானா மாநில பணக்கார விவசாயிகள் போராடுவதும், அதை பாஜ உட்பட மத்திய ஆளுங்கட்சி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் பின்னர் தங்களுக்கு சாதகமாக மத்திய அரசு ஒருசில வெயிட்டான சலுகைகள் அளித்ததும் வாபஸ் பெறுவதும் வாடிக்கை. கோவணம் கட்டிய உண்மையான விவசாயி போராடினால், அவன் நிலைமை கேலிக்கூத்துதான்! உண்மைக்கு மதிப்பில்லை. விவசாயியை மதிக்காத நாடு உருப்படாது.

ஆனந்த கிருஷ்ணன், கிஷோர் , மஸ்கட்

*****

Heading : '...என்றான் அவன்!' (6 )- என் குமார்

Comment : அருமையான வார்த்தைகள் குமார்

சவுபர்னிகா, விஷ்ணு, மனோகர் , செகந்திராபாத்

*****

Heading : வலையங்கம் - வேடிக்கை பார்க்காதீர்கள்

Comment : என்ன கொடுமை சார்... இத்தகைய குழந்தை திருமணங்களை ஒரு ஆளுங்கட்சி அரசால் தடுக்க முடியாதா? எல்லாம் 'ஜாதி ஓட்டு' அரசியல்தான்! ஏன்யா இப்படி.... ஒரு அரசு அதிகாரிக்கு கூடவா தைரியம் இல்லே... இதே உங்க வீட்டு பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? இது எப்படின்னா, ஆக்சிடென்ட்ல அடிபட்டவனை காப்பாத்தறதை விட்டுட்டு, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவனை வீடியோ படம்பிடிச்சு சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தற மாதிரி இருக்கு! மனிதநேயம் செத்துப் போச்சு...

கோமதிநாயகம், பார்த்திபன், நாகர்கோவில்

*****

Heading : வாழ்க்கை இது தான்

Comment : Fantastic and accurate true words

Hruthaya, Shankar, Ayush , Goa

*****

Heading : தாவி குதிக்கும் தலைவர்கள் - பால்கி

Comment : ஏன்னா... இப்படி சிண்டு முடிச்சு விடுறீர்? பிரதமர் மோடி நோக்கு என்ன பண்ணார், தெரியாதா? இந்த தேர்தல்ல இண்டி கூட்டணில காங்கிரஸ் ஒரு இடமுமின்றி அம்பயரா தான் நிக்கப் போகுது! நின்னு அசிங்கப்படறதைவிட, இது எவ்ளோ மேல். இனிமே அவாளோட இவாளை 'கம்பேர்' பண்றதை விடுங்கோ!

உதயசந்திரிகா, சாவித்திரி, கிச்சா, நவிமும்பை

*****

Heading : பஞ்சு - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

Comment : அருமையான கதை. சக மனிதர்களை ஏமாற்றாமல் இன்னும் நல்லவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர வைக்கும் கதை

ச.ஆனந்தகுமார் , சென்னை

*****

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 56 - பரணீதரன்

Comment : Very informative, Balki.

N Sankar , Auckland

*****

Heading : மூடு விழா காணும் திரையரங்குகள் -மரியா சிவானந்தம்

Comment : அருமையான பதிவு. ஆனால் நாம் இதில் முக்கியமாக தெரிந்துக்கொள்ளவேண்டிய விஷயம் திரையரங்குகளை நடத்துவது அரசாங்கமா.சமூக சேவை செய்ய.இல்லையே தனியார் முதலாளிகள்.அவர்கள் பணத்தை இரட்டிப்பாவதைத்தான் யோசிப்பார்கள்.மால் கட்டி நூறுகடை கட்டினால் வருமானம்.திரையரங்கு மூனுநாளுக்கு மேல் கூட்டம் வருவதில்லை.அதன் படத்தின் முக்கியகாட்சிகளை ரீல்ஸ் போன்ற சோசியல் மீடியாவில் போடுகிறார்கள் அதெல்லாம் திரையரங்கில் முடியுமா.அதன் பிறகு ஓடிடி .இதற்கு ஒரே தீர்வு உண்டு சொன்னா யார் கேப்பாங்க சன் டிவி.விஜய் டிவி இவங்க அப்பறம் முன்னனி நடிகர்கள் திரையரங்குகள் கட்டி பெரிய லாபம் எதிர்பார்க்காமல்.மக்களிடம் இவர்கள் சம்பாதித்தை மக்களுக்கே போகட்டும்.என்று செய்தால் இதற்கு தீர்வு கண்டிபாக கிடைக்கும். தயாநிதி. சென்னை..