தொடர்கள்
இசை
பட்டையக் கிளப்பிய ரா-கா-ரசம். டாக். கர்னல் கே.எம்.ஹரி கிருஷ்ணன்

பட்டையக் கிளப்பிய ரா(Ra)கா(Ga) ரசம்

17 மார்ச் 2024 அன்று பெங்களூரில் உள்ள சவ்டய்யா மெமோரியல் ஹாலில் ரஞ்சனி மற்றும் காயத்ரியின் கச்சேரியைத்தான் சொல்கிறேன்.

20240221085443334.jpg

சில சமயங்களில் ஒரு கலைஞர் (அல்லது ஒரு ஜோடி, ஒரு குழு, ஒரு க்ரூப்) நமக்கு ஒரு அலாதியான அனுபவம் வழங்குகிறார்கள்.

அது நம் மனதை மிகவும் திருப்திப்படுத்துகிறது. அதை எடுத்துச்சொல்ல வார்த்தைகள் சுலபமாக வருவதில்லை.

ஒவ்வொரு கச்சேரியிலும் இந்த சகோதரிகள் பட்டையக் கிளப்புகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

கச்சேரி தொடங்கும் முன் கொஞ்சம் கவலையாக இருந்தது. பட்டை நிச்சயமாக இப்போது உச்சவரம்பை தொட்டிருக்க வேண்டுமே? இன்று என்ன செய்யப்போகிறார்கள்? ‘Easy-peasy’ என்று சகோதரிகள் தங்கள் அசத்தலான பாட்டுத்திறமையால் சொன்னார்கள். ‘கூரையைத் தகர்ப்போம், வானத்தை எட்டுவோம்!’

வீட்டிற்குத் திரும்பும் வழியில் கச்சேரியைப் பற்றி நாங்கள் விவாதித்ததில், சில விஷயங்கள் தெளிவாயின.

இந்த இரண்டு இளம் பெண்கள், மேடைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒரு செஞ்சுரி விளாசுகிறார்கள்! மேடை தானேஅவர்களுக்கு சொந்த கிரிக்கெட் ஆடுகளம்? கச்சேரி விட்டு கச்சேரி விட்டு கச்சேரி, செஞ்சுரி, செஞ்சுரி,செஞ்சுரி! டெண்டுல்கர் கூட இப்படி செய்து காட்டியதில்லை. த்தோ ஐபிஎல் சீசன் வருதே. அது தான் முழுவதுமாக விற்றுத் தீர்ந்த ஆடிட்டோரியத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலிருந்தும் வரும் தன்னிச்சையான கைதட்டல்களுக்கும் காரணம் என்றுதானே சொல்லவேண்டும்?, அத்தகைய பாராட்டுக்கு வேறு எந்த தகுதி தேவை ? வேறு எந்த பரிசு ஈடுஇணையாக முடியும்?

இதைக் கவனியுங்கள்.

தொடக்கத்தில் விநாயகப் பெருமானுக்கு ஒரு ஆவாஹனம் . இதை நாம் பாரம்பரியமாக நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக செய்கிறோம். பாரம்பரியம் மற்றும் "புதுமை" (இந்த வார்த்தை வேறு சிலரால் தற்பொழுது ஆணவத்துடன் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது) கைகோர்க்க முடியுமா? ஆமாம் கண்டிப்பாக! ரஞ்சனியையும் காயத்ரியிடம் கேளுங்கள். அவர்கள் கம்பீர நாட்டையில் "ஞான விநாயகனே" என்ற பாட்டை எடுத்து (ஷரவணபவானந்தா இயற்றியது, ஆதி தாளம் ) அதே ராகத்தில், ஊத்துக்காடு மகாகவியின் தலைசிறந்த படைப்பான "ஸ்ரீ விக்னராஜம் பஜே" (கண்ட சாபு தாளம்) பாட்டில் அலட்சியமாக தாவுகிறார்கள். ஒரு தமிழ் இசையமைப்பிலிருந்து சமஸ்கிருத பாடல் வரிகளை எளிதாகப் பாய்ச்சுவதையும், முந்தையதில் சதுஸ்ர நடை மற்றும் இரண்டாவதில் சிட்டஸ்வரத்தை கண்ட நடையில் பாடும்போது இரண்டு வெவ்வேறு வேகங்களைப் பயன்படுத்துவதிலும் அவர்கள் தங்கள் திறமையை காட்டினார்கள்.

காயத்ரி ஆரம்பத்தில் அறிமுக சொற்பொழிவில் சொன்னாற்போல், கர்நாடக இசையின் வரம்பற்ற சாத்தியத்தையும், அளவிலா அழகையும் எடுத்துக்காட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கச்சேரிக்கு உண்மையிலேயே குறிப்பிடத்தக்க தொடக்கம் இதுதான் என்று மகிழ்ச்சி அடைந்தேன் நான்.

ஆனால் அன்று நாங்கள் பார்த்தது இந்த மாஸ்டர் பீஸ் அசத்தல் கச்சேரி, அழகுக்கு அழகு சேர்த்தாற்போல் இருந்தது எனலாம்.

ஒரு அமைதியான ஆஹிரி -சியாமா சாஸ்திரியின் "மாயம்மா" என்று தொடங்கும் பாட்டு அடுத்ததாக. எந்த வித கோணங்கிகளும் (தற்காலத்தில் கவுரவப்படுத்தப்பபடும் பாடகர் போல்) இல்லாமல், ஆற அமர பாடினார்கள் தமக்கையர்கள்.

அப்படியானால் மிகவும் உற்சாகபூர்வமான இசை விருந்திற்கு ரசிகர்களை தயார் படுத்துகிறார்கள் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

கிரிக்கெட் ஸ்லாங்க்ன சொல்லணும்னா, இன்ஸ்விங்கர்கள் மற்றும் கூக்லிகள் சரமாரியாக ஒன்றன் பின் ஒன்றாய் பொழிந்தன.

சான்ஸே இல்ல. தவிர்க்க முடியாத தடுக்கவே முடியாத அமர்க்களம் தான் போங்கள்!

காயத்ரி ஸ்ருதி-பேதம் (கர்நாடக மொழியில் கிரஹ-பேதம் அல்லது ஸ்வர-பேதம் என்றும் ஹிந்துஸ்தானியில் மூர்ச்சனா என்றும் அழைக்கப்படுகிறது) பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம் கொடுத்தார். அத்வே அவர்களின் பாடலில் அமைந்தது.

ஹம்ஸானந்தியில் டி. வைத்தியநாத ஐயரின் மிகவும் பொருத்தமான தில்லானாவில் தொடங்கி (ஹிந்துஸ்தானியில் சோஹினி மற்றும் கர்நாடக பாணியின் ராகம் பூர்வியைப் போலவே இருக்கும் இந்த ராகம்), சகோதரிகள் ஹம்ஸாநந்தி என்ற அடிப்படை ராகத்தில் ஷட்ஜத்தை ஒரு ஸ்வரத்தில் இருந்து அடுத்ததாக மாற்றுவதன் மூலம் எப்படி மற்றோரு ராக அனுபவம் கிடைக்கும் என்பதை மிகத்திறமையாக காட்டினார்கள்.

ஹிந்தோளம் (ரி=ஸா), சுத்த சவேரி அல்லது துர்கா (கா=ஸா), சுத்த தன்யாசி (ம=ஸா), மோஹனம் (தா=ஸா), மற்றும் மத்யமாவதி (நி=ஸா) ஆகியவற்றின் அடிப்படையில் நம்மால் உணரமுடிகிறது. மிகவும் சுத்தமாக அழகுடன் செய்யப்பட்டது. சராசரி ஆர்வலர்கள் கூட ஸ்ருதி பேதம் என்ன என்பதை பின்பற்றலாம். அதை விளக்குவதற்கு இந்த ராகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள பிரபலமான பாடல்களைப் பாடிக்காட்டினர், அதே நேரத்தில் சுருதியின் மாற்றத்தை தெளிவாக நிரூபிக்க ஸ்வரங்களைப் பாடினர். மத்யமாவதியில் பாக்யதா லக்ஷ்மி பாரம்மா பாடியது சகோதரிகளின் மேதைக்குக் காணிக்கையாகும் - இது பெரிய அளவில் இருந்த கன்னட ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்தது பற்றி எதுவும் சொல்ல தேவையில்லை.

ஒரு இடையிசையின் அவசியத்தை மனதில் கொண்டு, சகோதரிகள் நவரச கன்னட ராகத்தில் ஸ்ரீ தியாகராஜரின் "நினுவினா நாமதி ஏந்து" என்ற பாடல் பாடினர். ஏற்கனவே கச்சேரி நடக்கும் விதத்தை மனதில் கொண்டு பாபநாசம் சிவனின் அபாரமான ரசனையான "நான் ஒரு விளையாட்டு பொம்மையா" என்ற தமிழ் பாட்டும் இத்துடன் சேரும் என்று எதிர்பார்த்தேன், அவர்கள் சேர்க்காததால் சிறிது ஏமாற்றம் அடைந்தேன்.

அன்றைய முக்கிய அம்சம் ஸ்ரீரஞ்சனியில் ஒரு விரிவான ஆலாபனை – (இரு சகோதரிகளும்), அதன் பிறகு தற்போதைய தலைமுறையின் வயலின் கலைஞர்களின் மிகவும் முன்னணியில் உள்ள ஒருவரான சாருமதி ரகுராமன் ஆலாபனையில் தன் கைவரிசையை காட்டினார். அவர் தனது புகழ்பெற்ற குரு TN கிருஷ்ணன் கொடுத்தை கொடுக்க வேண்டிய அனைத்தையும் உள்வாங்கிஇருக்கிறார் என்பதை சந்தேகமற நிரூபித்தார்.

20240221085630289.jpg

காயத்ரி பாடலின் திட்டத்தை விளக்கினார்: தேஷாதி தாளத்தை பயன்படுத்திய பாடல்களின் கலவையாக இது இருக்கும், என்றார். தியாகராஜரின் "புவனி தாசடனே" யில் தொடங்கி, அவர்கள் "இக்கனைன" (புஷ்பலதிகா ராகம் , டி. நாராயணசுவாமி இயற்றியது ), "கமலாப்தகுல" (பிருந்தாவன சாரங்கா, தியாகராஜா), மற்றும் "நிகேலனா" (தேவமனோஹரி, பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார்) ஆகியவற்றில் முழுமையடையும் பாடல் கலவையை அலக்ஷியமாக, அதே சமயத்தில் அற்புதமாக பாடினர் சகோதரிகள். கச்சேரி முடிந்த பிறகும் புஷ்பலாதிகாவில் அனுபல்லவியில் அவர்கள் இருவரும் செய்த புத்திசாலித்தனமான நிரவல் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.

பிருந்தாவன சாரங்கத்தின் சரணம் பகுதியில் ஸ்வரங்கள் நிரம்பி வழிந்தன, மேலும் தேவமனோஹரி க்ரிதியில் உள்ள தனித்துவமான சிட்டஸ்வரத்தால் லய அம்சம் மெருகேற்றப்பட்டது.

கர்நாடக சங்கீதத்தின் விழுமியங்களை எந்த விதத்திலும் நீர்த்துப்போகச் செய்யாமல் புதுமை எப்படி பார்வையாளர்களைக் கவரக்கூடும் என்பதற்குத் தொடர்ந்து வந்த தனி ஆவர்த்தனம் மற்றொரு உதாரணம். மிருதங்கம் (சாயி கிரிதர்) மற்றும் கடம் (ஸ்ரீ கிருஷ்ணா) ஆகியவற்றில் தங்கள் தேர்ச்சியைக் காட்டிய பிறகு, அவர்கள் கொன்னக்கோல் லயத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

சாயி கிரிதரின் மைக் இதற்கிடையில் கொஞ்சம் ஓவராகவே உற்சாகமாக - அதாவது மௌனமாக, இருந்தது! அது உயிருடன் வருவதற்கு கொஞ்சம் ஹெல்ப் தேவைப்பட்டது. இளம் சாருலதா டக்கென்று கொன்னக்கோலுடன் ஜாயின் செய்தது அவரது விறுவிறுப்பை காட்டியது.

ஒரு கச்சேரியில் இவ்வளவு துல்லியமான குழுப்பணியை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. சபாஷ்!

தாள வாத்திய இரட்டையர் தங்கள் கொன்னக்கோலைத் தொடங்கியபோது, ரஞ்சனி காயத்ரி சகோதரிகளும் கலந்துகொண்டனர். இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இரண்டு தாள வாத்தியக்காரர்களும் கொன்னக்கோலின் ஒரு பகுதியாக நடைமுறையில் ஒருவருக்கொருவர் "பேசிக்கொண்டார்கள்" என்றே சொல்லலாம்! அவர்களின் விரல்கள் செய்த விளையாட்டை பார்வையாளர்கள் தங்கள் கரங்கள் மூலம் கோஷித்தனர் எக்கச்சக்கமாய்.

20240221085735895.jpg

பொழிந்து வரும் அமிர்த மழை துளிக்கூட குறைவதாயில்லை.

அடுத்த ஐயிட்டம் தமிழ், மலையாளம், கன்னடம், போஜ்புரி மற்றும் தெலுங்கு மொழி அடிப்படையிலான கலவையானது. பாரதியாரின் என்றுமே அழியாத பாட்டான "எங்க முத்துமாரி" யை நாதநாமாக்கிரியாவில் தொடங்கி, குறிஞ்சியில் "முத்துகரே யசோதை" யுடன் முடிந்தது.

பார்வையாளர்களிடம் காயத்ரி, “பாடியது போதுமா” என்று கேட்டபோது, ஊஹூம், போதவே போதாது! என்றே பதிலே ஏகோபித்தன.

எனவே சகோதரிகள் மற்றொரு கலவையான - இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் இருந்து சுத்தமான சிந்துபைரவியில் அமைந்த சினிமா பாடல்களை இசைக்க இணைந்தார்கள். இந்த ரிப்போர்ட் மிக நீண்ட அறிக்கை ஆகிறது என்று பயந்து, சகோதரிகள் தேர்ந்தெடுத்த பாடல்கள் பாரம்பரிய இசை சார்ந்த திரைப்படப் பாடல்களை விரும்புவோருக்கு எப்படியும் தெரிந்திருக்கும் என்று நம்பி, டீடெயில்ஸ் விட்டுவிடுகிறேன்.

அவர்களின் கைதேர்ந்த அபங்க் பாடல் இல்லாமல் ரஞ்சனி காயத்ரி கச்சேரி எப்படி முடியும்?

கடந்த முறை இங்கு வந்திருந்தபோது, "பண்டரிச்சா பூத் மோடே" பாடுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று பார்வையாளர்களில் ஒருவர் நினைவூட்டினார். வழக்கமாக சந்திரகவுன்ஸ் அடிப்படையிலான இப்பாடலையும் ஒரு கலவை வடிவத்தில் பாடிவிட்டார்கள் பாருங்களேன்! இந்த முறை 'கவுன்ஸ்' என்று முடிவடையும் ராகங்களில் - ( சந்திரகவுன்ஸ், மால்கவுன்ஸ், மதுகவுன்ஸ்) இது இன்னும் இவ்விருவரின் மேதைத்தனத்திர்ற்கு அணி சேர்த்தது.

புதுமையும் பாரம்பரியமும் எப்படி குரங்குத்தனமின்றி மகிழ்ச்சியுடன் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை அவர்கள் தெளிவாக காட்டினார்கள். அப்படிச் செய்வதன் மூலம் என் மனைவியும் நானும் அன்று காலை சென்னை மியூசிக் அகாடெமி அறிவித்திருந்த செய்தியை இன்னும் தீவிரமாக நினைவு படுத்திக்கொணடோம்.

கச்சேரி முழுவதும், பாடல் வரிகளின் அழகு, வாக்கேயக்காரர்கள், மற்றும் இசையமைப்புடன் தொடர்புடைய புராணக்கதைகள் பற்றிய சிறு சிறு குறிப்புகளை அவர்கள் உதாரணம் சொல்லிக்கட்டினார்கள் . இது கிட்டத்தட்ட மூன்று மணிநேர கச்சேரியில் பார்வையாளர்களை முழுமையாக கட்டிப்போட்டுவிட்டது.

கச்சேரி முடிந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் வீட்டில் இரவு உணவிற்கு அமர்ந்திருந்தபோது, ரஞ்சனியும் காயத்ரியும் தங்களை பார்க்க ஆவலுடன் காத்திருந்த ரசிக மக்கள் எல்லோரையும் பார்த்துப்பேசி முடித்து விட்டிருப்பார்களா என்று நினைத்துப்பார்த்தேன் . பெரும்பாலும் இருக்காது என்றுதான் தோன்றியது. அது தான் ‘த பிரைஸ் ஆப் பாப்புலாரிட்டி’ என்று முணுமுணுத்துக்கொண்டேன்.

த த ரி ந....அ..ம்