தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

புஷ்பா - தி ரூல்

அல்லு அர்ஜுனா ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புஷ்பா இரண்டாம் பாகம் படத்திற்கு புஷ்பா -தி ரூல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியீடு என்று உறுதியாகி விட்டது. இந்த முறை வங்க மொழியிலும் வெளியாக இருக்கிறது.

ரசவாதி

20240403155939611.jpg

அர்ஜுன் தாஸ் தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் ரசவாதி மே பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

இலியானா

20240403160258760.jpeg

நான் இந்தி படங்களில் மட்டும் நடிக்க விரும்புவதாக ஒரு தவறான தகவல் தென்னிந்திய பட தயாரிப்பாளர்கள் இடையே பரவி இருக்கிறது. அது உண்மை இல்லை. தென்னிந்திய படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பம் தான் என்கிறார்.

கயல்

20240403160417677.jpeg

கயல் ஆனந்தி நடித்த மங்கை படம் மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால்,தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால் அந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. சமூக வலைதளங்களில் தனது படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களை கவர முயற்சி செய்கிறார் கயல் ஆனந்தி.

கீர்த்தி சுரேஷ்

20240403160633726.jpg

தமிழில் இப்போது கீர்த்தி சுரேஷ்க்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் இல்லை. தற்போது தெறி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாக ஹிந்தியில் நடிக்கிறார். அங்கு சினிமா பிரபலங்கள் தினம் ஏதாவது விழா கொண்டாட்டம் என்று அழைத்து வருகிறார்கள். அங்கெல்லாம் கிளாமர் உடையில் தான் கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார்.

நயன்தாரா

மும்பையில் ' கியூ 35 ' என்ற பெயரில் மிகவும் செல்வாக்கு மிக்க இளம் இந்தியர்கள் விருது வழங்கு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்ட நயன்தாராவின் கவர்ச்சி உடை எல்லோரையும் வைத்த கண் மாறாமல் பார்க்க வைத்து விட்டதாம்.

ஸ்டார்

20240403161315128.jpg

' பியார் பிரேமா காதல் ' படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஸ்டார். இதில் ஹீரோ கவின் கதாநாயகி அதிதி நடிக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாபால்

20240403161817389.png

நடிகை அமலாபால் தனது நீண்ட கால நண்பர் ஜெகத் தேசாய் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணி. கர்ப்பிணிப் பெண்களுக்கான பேஷன் ஷோ மே 12-ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்ள இருக்கிறார் அமலாபால்.

மே 16

20240403162149831.jpg

மே 16-ஆம் தேதி இந்தியன் 2 படம் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. கமலஹாசன் உட்பட பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.