தொடர்கள்
மக்கள் கருத்து
வெயிலை எப்படி சமாளிக்கிறீர்கள்?

சுலோச்சனா மணி

20240401192011166.jpeg
முன்பு எப்போதும் அனுபவிக்காத கடுமையான வெப்பம் சென்னை அதன் சுற்று புறங்களில் தற்போது நிலவி வருகிறது. நம்முடைய தேவைக்களுக்காக மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டோம் . இப்போது நாம் சுட்டெரிக்கும் வெப்பத்தில் தகிக்கிறோம். இன்னும் இரண்டு வாரத்திற்கு பிறகே கோடை மழை வாய்ப்பு அதுவும் கத்திரி பின் பகுதியில் என்று தகவல் வருகிறது. காலை எட்டு மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. விடுமுறை நாட்களில் கூட கோவிலுக்கு செல்ல முடியவில்லை .வீட்டிலே பதுங்கி கொள்ள வேண்டிய சூழ்நிலை. அத்யாவசிய தேவைக்கு வெளியே செல்லவேண்டும் என்றால் குடையுடன் கூடிய தண்ணீர் மற்றும் அதில் உப்பு சர்க்கரை கலந்து இருந்தால் எலுமிச்சையும் சாறு எடுத்து ஜுஸ் செய்து எடுத்து செல்கிறோம்.சுட்டெரிக்கும் வெய்யில் கடுமையான அனல் வெளியே போகவே அச்சமாக உள்ளது.

லட்சுமி ராஜா, நங்கநல்லூர்

20240401192220251.jpeg
வெயிலை சமாளிக்க ஏ.சி போடறேன்... .EB bill ஐ நினைச்சா BP ஏறுது என்ன செய்யறது. இரண்டு வேலையும் குளிக்க தோணுது Boreல தண்ணீ ஏற மாட்டேங்குது...என்ன செய்யறது எப்படியாவது இந்த வெயிலை சமாளிச்சாகனும்... ஒன்னும் புரியல?

KR. கிருஷ்ணமூர்த்தி Deputy Treasurer RBI (Retd) பவழந்தாங்கல்

20240401192612517.jpeg
பிரிட்ஜ் தண்ணீரை தவிர்த்து மண் பானைத் தண்ணீரை தான் குடிக்கிறேன்.
நிறைய நீர் சத்து உள்ள காய் கனிகளை தான் வாங்கி சாப்பிடுகிறேன்..
எப்படியாவது இந்த வெயிலை சமாளிச்சாகனும்.

தயாநிதி ,சென்னை

20240403162408609.jpeg

வெயிலை சமாளிப்பதை விட சகித்துக் கொள்ளவே வேண்டியுள்ளது . முடிந்தவரை வெளியில் செல்லாமல் தவிர்த்து விடுகிறேன் . அப்படி அவசியம் செல்ல வேண்டி இருந்தால் குடை ,கேப் போட்டுக் கொண்டு செல்கிறேன்.

கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவு படுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் .எனவே ,காலையில் நீராகாரம் அருந்துவதுடன் ,பகல் முழுவதும் எலுமிச்சை ஜூஸ் , தண்ணீர் என்று திரவ உணவை அதிகம் சேர்த்துக் கொள்கிறேன். அதிக காரம் ,மசாலா உணவுகளை இக்காலத்தில் உண்ணுவதில்லை . முடிந்தவரை ஏசியை அணைத்து விட்டு, ஜன்னல்களை திறந்து வைத்து வெளிக்காற்றை அனுபவிக்கிறேன்.

எப்படியும் இக்கோடையை கடந்தே ஆக வேண்டும்.