தொடர்கள்
பொது
கொதிக்கும் ஊட்டி - ஸ்வேதா அப்புதாஸ் .

ஊட்டி என்றாலே ஜில் குளிர் நம்மை அரவணைப்பதை உணரமுடியும் .

மார்ச் மாதம் கோடை துவங்க இதமான கால நிலை நீலகிரி வாசிகளை குஷி படுத்தும் .

இந்த வருடம் மார்ச் மாதமே இதமான காலநிலை இல்லாமல் சற்று சுட்டெரிக்கும் வெயில் ஊட்டியில் நிலவியது .

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் வழக்கமாக இருக்கும் பனி பொழிவு மிஸ்ஸிங் .

எதோ ஒரு சில நாட்களில் மட்டும் பனி கொட்டியது மற்றபடி வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது .

20240402232505923.jpg

மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே உள்ளூர் வாசிகள் ஸ்வெட்டர் , ஜர்கின் தொப்பி அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு டி ஷர்ட் மற்றும் காட்டன் ஷர்டுக்கு மாறிவிட்டார்கள் .

20240402232531766.jpg

இளநீர் நுங்கு பதநீர் ஜூஸ் அருந்துவதை பார்க்கமுடிந்தது .

மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் அன்று சம்மர் ஷவர் வரும் என்று காத்திருக்க 2 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஜோ என்று மழை கொட்டியது ஒரு அரைமணிக்கு உள்ளூர் வாசிகள் ஏகப்பட்ட குஷியில் இருக்க அது April Fool ஆக மாறிப்போனது .

அதற்கு பின் மழை தூறல் கூட வரவில்லை .

வெயிலின் தாக்கம் அதிகரிக்க நீலகிரி சூடாக ஆரம்பித்தது .

தினம் தினம் சூடு அதிகரிக்க கடந்த ஞாயிற்று கிழமை அதிகமான வெயில் ஊட்டியில் பதிவாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் இந்தியாவே ஊட்டியை திரும்பி பார்க்க செய்தது .

20240402232700455.jpg

1951 ஆம் ஆண்டு பதிவாகின வெப்பத்தை விட 73 ஆண்டுகளுக்கு பின் இப்பொழுது 84.20 farenheat அதாவது 29 டிகிரி பதிவாகியுள்ளது என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது .

வாங்க குளு குளு ஊட்டிக்கு போகலாம் என்பது இனி கனவாகி போனாலும் ஆச்சிரியப்படுவதிற்கில்லை என்கின்றனர் பலர் .

ஊட்டியை சேர்ந்த லியோனார்ட் தன் வீட்டில் மதியம் ஃபேன் காத்தில் பேப்பர் படித்து கொண்டிருந்தார் .

20240402232803747.jpg

நாம் அவர் வீட்டினுள் எட்டி பார்த்து , என்ன சார் ஊட்டியில் பேன் னா ? என்று கேட்க

வாங்க காற்று வாங்கலாம் எங்க ஊட்டி இப்படி ஆயிடுச்சி ஏற்கனவே பல வருடத்திற்கு முன் இப்படி தான் வெயிலின் தாக்கம் இருந்தது அப்பொழுது கோவையில் இருந்து தான் இந்த பேன் னை வாங்கி வந்தேன் .

அதற்கு பின் யூஸ் இல்லாமல் இருந்தது தற்போது மீண்டும் இங்கு பேன் தேவைப்படுகிறது .


கடந்த வாரம் 29 டிகிரி ஹீட் எங்க ஊரில் பதிவாகியுள்ளது அதுவும் 73 வருடத்திற்கு பின் இப்படி .பகலில் வெளியே செல்ல முடியவில்லை .

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகி விட்டது . கேரளா கர்நாடக தெலுங்கானா மாநில சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர் .

20240402233016309.jpg

சாதாரணமாக சனி ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகம் வாகன நெரிசல் .

ஏகப்பட்ட கட்டிடங்கள் இது ஒரு கான்க்ரீட் ஜங்க் ஆகிவிட்டது .மரங்கள் வெட்டப்பட்டு மழை பொழிவு குறைந்த விட்டது .எழில் மிகு ஊட்டி மிகவும் மோசமாகிவிட்டது .

வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்க குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு வந்து விட்டது வரும் நாட்களை நினைத்தால் பயமாக இருக்கிறது என்கிறார் .

20240402233141566.jpg

நீலகிரியில் உள்ள பெரிய எலக்ட்ரானிக் கடைகளில் தற்போதைய சேல்ஸ் பேன் கள் தான் .ஊட்டியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக் ஷோ ரூம் லட்சுமி நாரயணன் ஸ்டோர் இங்கு பல மாடல் பேன் விற்பனைக்கு உள்ளது .டேபிள் பேன் , பெடஸ்டல் பேன் , வால் பேன் ஏன் சீலிங் பேன் யும் சேல்ஸ் ஆகிறதாம்

20240403064018806.jpg.

இது வரை அறுபது பேன் விற்பனை செய்யப்பட்டுள்ளது .

இப்படி ஊட்டி , குன்னூர் ,கோத்தகிரி என்று பேன் சேல்ஸ் அமோகமாம் .

இயற்கை ஆர்வலர் கிளவுஸ் பட்டாச்சார்யா கூறும் போது ,

20240402233354592.jpg

"ஊட்டியில் இந்தளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது ஷாக்கான ஒன்று தான் எல்லோருக்கும் என்னை பொறுத்தவரை நோ ஷாக் என் சிறுவயதில் இருந்தே தூர்தர்ஷன் டிவி பார்ப்பது வழக்கம் முக்கியமாக நியூஸ் அதில் வானிலை செய்தியை பார்க்காமல் இருக்க மாட்டேன் .

நியூஸ் ரீடெரஸ் ஷோபனா ரவி , பாத்திமா பாபு மற்றும் சந்தியா ராமகிருஷ்ணனின் இனிமையான குரலில்

ஊட்டியில் கோடை வெப்பம் 31டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என்ற செய்தி இன்னும் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது .

இந்த வெப்ப அதிகரிப்பு ஊட்டி குன்னூரில் 92,93,94,95 ஆகிய வருடங்களில் தொடர்ந்துள்ளது அதுவே 32 டிகிரி செல்சியஸ் கூட உயர்ந்துள்ளது .

தூர்தர்ஷன் ஆவண காப்பகத்தில் இந்த புள்ளிவிவரம் கட்டாயம் இருக்கும் .20240402233555432.jpg

இப்பொழுது 29 டிகிரி செல்சியஸ் என்பது எனக்கு சூடாக தெரியவில்லை என்று கூறும் கிளவுஸ் அன்று மரங்கள் சோலைகள் டீ எஸ்டேட்டுகள் பச்சை பசேலென இருந்தன இன்று அவை அனைத்தும் மிஸ்ஸிங் எங்கு பார்த்தாலும் கான்க்ரீட் ஜங்கிள் இதனால் வெப்பம் 29 டிகிரி செல்சியஸ் தொட்டவுடன் நம்மால் சூட்டை தாங்க முடியவில்லை .

அன்று அடர்ந்த மரங்கள் அதிக வெப்பத்தை கவ்வி கொண்டது .

அதே போல சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைவு இன்று ஏகப்பட்ட கூட்டம் வாகன நெரிசலும் வெப்பத்திற்கு ஒரு காரணம் என்கிறார் கூலாக .

நீலகிரி குடிதண்ணீர் ஆதாரமான அணைகள் குந்தா, அவலாஞ்சி , மார்லிமந்த் , ரெலியா மற்றும் பார்சென்ஸ் வேலி தண்ணீர் அளவு குறைந்து பயமுறுத்தி கொண்டிருக்கிறது .

வியாழக்கிழமை 2 ஆம் தேதி மாலை 3 மணிக்கு பலத்த மழை வந்து தூறலுடன் நின்று போனது ஒரு பெரிய ஏமாற்றம் தான் .

20240402234252764.jpg

காணாமல் போன கின்னஸ் மரங்கள் , சோலை வனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வாகனங்களின் கூட்டம் குறைந்தால் ஊட்டி கூலாக மாறும் .

ஊட்டியில் அடுத்தது ஏர் கண்டிஷன் கடைகள் தோன்ற வாய்ப்புள்ளது.