தொடர்கள்
ஆன்மீகம்
அரிஅரன் சந்திப்பு –ஆர்.ராஜேஷ் கன்னா

20240402215131674.jpeg

பொன்னேரி ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

20240402213828495.jpeg

அகத்தீஸ்வரரும் கரிகருஷ்ண பெருமாளும் பரத்வாஜ் முனிவருக்கு காட்சி அளித்த வைபவம் சந்திப்பு திருவிழாவாக இங்கு நடைப்பெற்றது.

20240402215427707.jpeg

லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த சந்திப்பு திருவிழா உலகில் வேறு எங்கும் இல்லை என்பதோடு இந்த பிரமோற்சவத்தினை பிரம்ம தேவனே நேரில் வந்து நடத்திவிட்டு செல்வதாக ஐதீகம்.

20240402213956827.jpeg

தேர்திருவிழா சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வடம் பிடித்த காட்சி பிரமிக்க வைத்தது.

2024040221402660.jpeg

பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்க காலை, மாலை என இருவேளை ஐந்து கிலோமீட்டர் மாட வீதிகளில் சென்று காட்சி அளிப்பது.

20240402214146276.jpeg

பனிரெண்டு நாள் பிரமோற்சவத்தில் பிட்சைகிண்ணி அலங்காரத்துடன் நகர சோதனை பல்லக்கில் பெருமாள் 5 கிமீ மாட வீதிகளில் சென்று மேலும் பல தெருக்களில் சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

மீண்டும் கோயிலுக்கு பெருமாள் திரும்பும் போது திருக்கோயிலின் நிர்வாகிகள் பெருமாள் உள்ளே வரக்கூடாது என்று கோயிலின் மெயின் டோரை மூடிவிட்டனர்.

பெருமாள் ஊர் சுற்றி வந்தவர் எங்கு சென்றுவிட்டு வந்தாரோ என்று கோயில் சிப்பந்திகள் கதவினை திறக்கவில்லை. பெருமாள் தன் திருப்பாதம் தாங்கிகளுக்கு உத்திரவிட்டு மூடியிருந்த கோயில் கதவினை முட்டி மோதி திறந்து உள்ளே வந்து சேர்ந்தார்.

20240402214413444.jpeg

பெருமாளை எங்கே கூட்டி சென்று ஊர் சுற்றினீர்கள் என்று கோவில் ஸ்ரீநாத் பட்டாச்ச்சாரியர் மகன் கரிகிருஷ்ணன் கையில் வாழை மட்டையுடன் திருப்பாதம் தாங்கிகளை வெளுத்து வாங்கினார். அடித்தாங்க முடியாமல் திருப்பாததாங்கிகள் உங்களால் தானே சுவாமி எங்களுக்கு அடி விழுகிறது காப்பாற்றுங்கள் என்று சொன்னதும் , இனி உங்களுக்கு தெரியாமல் எங்கும் செல்ல மாட்டேன் என்று கோயில் பட்டாச்சாரியர்களிடம் சொல்லவதாக ஐதீகம் . இதன் பின் பெருமாளுக்கு மதிய நேர தடபுடலான நைவேதியம் படைக்கப்பட்டது.

பெருமாளுக்கு பிடித்த டமார் என்ற மேளத்தை கடந்த அறுபது வருடமாக தொடர்ந்து வாசித்து வருகிறார் அரசூர் கோபால்.

20240403103332496.jpeg
டமார் மேளத்தை கோபால் நான் ஸ்டாப்பாக மூன்று மணி நேரத்துக்கு மேல் வாசிப்பது இந்த கோயிலின் சிறப்பு.

20240403103358431.jpeg

காலை ,மாலை என இரு வேளைகளும் 12 நாட்களுக்கும் தவில், நாதஸ்வரம் பெருமாளுடன் மாடவீதியில் ஐந்து கிலோ மீட்டர் நடந்த வண்ணமே இசைக்கச்சேரி செய்வது இங்கு விசேஷம்.

20240403103426612.jpeg

பெருமாளின் அழகிய குடைகளை கோயில் பணியாளர் செல்வம் நிர்வகித்து வருவது சிறப்பு.

20240403104647540.jpeg

அரியும் அரனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்ற பழமொழியே இந்த சிவன் பெருமாள் சந்திப்பில் வந்ததாக இங்கே பேசிக்கொண்டனர்.