தொடர்கள்
தேர்தல் திருவிழா
" தேர்தல் ஜுரமா ஜாலியா " ஒரு சிறப்பு நேரடி பேட்டி . - ஸ்வேதா அப்புதாஸ் .

ஐந்து வருடத்திற்க்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் கொடுப்பது 543 எம் பி களை தான் .

20240310122351947.jpg

அதே வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி எவரும் நினைத்து கூட பார்ப்பது இல்லை .

தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் நாடே களை கட்டிவிடுகிறது .

20240310122426846.jpg

ஒரு காலத்தில் எல்லா ஊர்களிலும் தனியார் பொது சுவர்கள் கட்சி சின்னங்கள் வேட்பாளர்களின் முகம் வாக்குறுதிகள் என்று எழுதப்பட்டு போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு ஒரே போட்டி தான் .

டி .என் .சேஷன் தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பெற்று அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஒரு ஒழுக்கத்தை கொண்டுவந்து இது நாள் வரை அது ஆணித்தரமாக பின்பற்றப்படுகிறது .

நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தேர்தல் திருவிழா மூட் வந்துவிடுவது சகஜம் .

20240310122626586.jpg

அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றால் சொல்லவா வேண்டும் நாடே திருவிழா கோலம் தான் .

இந்த தேர்தல் திருவிழா ஜுரமா , ஜாலியா என்று சிலரிடம் கேட்ட போது சுவாரஸ்யமான தேர்தல் தகவல் கிடைத்தது .

20240310131448659.jpg

சுற்றுசூழல் ஆர்வலர் கீதா ஸ்ரீநிவாசன் கூறும்போது ,

20240310122703141.jpg

" எலெக்க்ஷின் வந்தாலே ஒரு வித ஜாலி தான் நம் நாட்டில் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிக பெரிய ஜனநாயக தேர்தல் . இதை ஒரு திருவிழாவாக தான் பார்க்கிறேன் .

எங்கு பார்த்தாலும் கலர்புல் கட்சி கொடிகள் மேள வாத்திய சப்தம் , பழைய பாடல்கள் பிரச்சார பேச்சுகள் என்று வித்யாசமாக கேட்க முடிகிறது .

அரசியல் கட்சிகளுக்கு எப்படி கொண்டாட்டமோ அதே கொண்டாட்டம் தான் எனக்கும் இந்த தேர்தல் திருவிழா .

மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் ,

20240310122842116.jpg

" நம் நாட்டின் மிக பெரிய தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது ஒரு வித ஜாலி தான் .

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தெடுக்க படும் வேட்பாளரை நம்பி இருக்க வேண்டும் முன்னேற்றம் என்றால் ஜாலி அதே சமயம் எந்த வேலையும் செய்யவில்லை என்றால் ஜுரம் தான் .

தேர்தல் என்றால் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் மிக பெரிய திருவிழா என்பதில் மாற்றமில்லை .

நம் நாடு உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு ஒரு பெரிய தேர்தல் திருவிழா ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நம்மை தேடி வரும் வேட்பாளர்கள் நம் எதிர்பார்ப்பு நிறைய அவர்களிடம் எதுவும் சொல்லுவது போல நடப்பது இல்லை .

ஒரு விதத்தில் இந்த தேர்தல் நாட்கள் ஜாலியான திருவிழா மட்டும் தான் .

கோவில்பாளையத்தை சேர்ந்த முருகாத்தா அம்மா கூறும்போது ,

20240310123216626.jpg

" என்னக்கண்ணு தேர்தல் வரும்போது ஜாலி தானுப்பா .நம்ம நாடு மிக பெரிய ஜனநாயக நாடு .

நாடு முழுவதும் தேர்தல் நடப்பது அருமை தானே கண்ணு .

யாரு வெற்றி பெற்றாலும் நலத்தை செய்யணும் அது தான் வேணும் .

நல்லா ரோடு போடணும் குடிநீர் கொடுக்கணும் நல்ல ஆட்சி நடக்கணும் அது தான் நல்லது .

தேர்தல் பிரச்சாரம் ஜாலி தான் கண்ணு ஒரு கலகலப்பான கூட்டம் டான்ஸ் வாத்ய சப்தம் இதயெல்லாம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் கேட்க முடியும் சரியா கண்ணு "

கோவையை சேர்ந்த ஸ்டான்லி கூறும்போது ,

2024031012400507.jpg

" தேர்தல் வந்தாலே ஒரு ஜாலி மூட் தான் ஆட்டம் பாட்டம் பிரச்சாரம் என்று களை கட்டுவது சூப்பர் தான் .

இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு மிக பெரிய தேர்தல் என்றாலும் ஒட்டு மொத்த நாட்டை அச்சுறுத்தும் தேர்தலாக தான் பார்க்கப்படுகிறது .

யாரோ மத தலைவர்களின் அறிவுறுத்தலின் படி முக்கிய கட்சி பிரமுகர்கள் செயல் படுவது .மத ரிதியாக தேர்தல் நடப்பது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் புதுமையாக ரோடு ஷோ என்பது ஒரு பக்கம் திருவிழாவாகவும் ஜாலியாக இருந்தாலும் எதோ ஒரு பயம் இருக்கிறது .

இ .வி. எம் யில் ஏகப்பட்ட குழப்பம் என்ற தகவல் இந்த தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் ஒரு பக்கம் .

மாநில முதல்வர்களின் கைது நடவடிக்கை எல்லாம் சாமானிய மக்கள் மத்தியில் ஜுரத்தை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் ஏப்ரல் 19 தேர்தல் முடித்தாலும் 45 நாட்கள் காத்திருக்கும் நிலைமை .என்ன நடக்குமோ என்ற பயம் .

ஜூன் 4 வரை தேர்தல் கட்டுப்பாடு இருக்க கோவை போன்ற தொழில் நகரங்களில் ஐம்பதாயிரம் பணம் கூட எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை .

20240310130413466.jpg

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நிலைமை மிக மோசம் தேர்தல் பணிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து அடிமைகள் போல வேலை வாங்குவது அவர்களுக்கு ஜுரம் தானே .

அன்னுரை சேர்ந்த கோவிந்தராஜ் ,

20240310125417372.jpg

" ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தல் திருவிழா ஒரு ஜுரம் தான் என்னை பொறுத்தவரை .

தேர்தல் பிரச்சாரத்திற்கு மேள தாளம் நடனம் என்று வேட்பாளர் வலம் வர ஏகப்பட்ட கூட்டம் எல்லா கட்சிகளிலும் ஒரே மாதிரி கூட்டம் .ஒரே ஆட்களை எல்லா கட்சி கூட்டத்திலும் பார்க்க முடிகிறது பணம் தாராளமாக உலவுகிறது அவர்களுக்கு தேர்தல் ஒரே ஜாலி .

நமக்கு ஜுரம் தான் இவர்களின் கூட்டத்தால் போக்குவரத்து இடைஞ்சல் சப்தம் ஏகப்பட்ட தொல்லை என்ன செய்ய சகித்து கொள்ளவேண்டும் .

20240310131301335.jpg

இவர்கள் எம் .பி .ஆனால் என்ன செய்யப்போகிறார்கள் ஒன்றும் இல்லை இவர்களால் காலத்துக்கும் ஜுரம் தான் ".

20240310130345289.jpg

ஒரு பக்கம் தேர்தல் என்பது அனல் பறக்கும் வெயில் கொடுமையில் ஜூரமென்றாலும் .அரசியல் காட்சிகள் வேட்பாளர்களின் ஆடல் பாடல் காமடி ஆக்ட்டிங் ஒரு சூப்பர் ஜாலி தான் .

என்ன எல்லோரும் என்ஜாய் தேர்தல் திருவிழா.