தொடர்கள்
வலையங்கம்
யோசித்து ஓட்டு போடுங்கள்

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் முடிந்து மொத்தம் 39 தொகுதிகளுக்கு இப்போது இறுதியாக 950 பேர்கள் களத்தில் இருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் தேர்தல் தேதி அறிவிப்பின் போது தேர்தல் திருவிழா என்று தேர்தல் பற்றி குறிப்பிட்டார். உண்மையில் இந்த கருத்து தவறானது தேர்தல் என்பது கூடினோம் கலந்தோம் என்று ஒரே நாளில் முடியக்கூடிய திருவிழா அல்ல.

​தேர்தல் என்பது வாக்காளரின் பொறுப்பும் கடமையும் மக்களாட்சியில் ஒரு நாட்டின் வளர்ச்சி வேலை வாய்ப்பு விலைவாசி இவற்றையெல்லாம் சரிவர எதிர்கொள்ளக் கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கும் வாக்காளருக்கு எப்படி தேர்தல் திருவிழாவாக பார்க்க நினைக்கக்கூடும்.

​நம்மைப் பொறுத்தவரை வாக்காளர்கள் பெரும்பாலும் வேட்பாளர் யார் அவர் பின்புலம் என்ன ஏற்கனவே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மீண்டும் தேர்தலில் அவர் நிற்கவாய்ப்பு கிடைத்து ஓட்டு கேட்க வந்தால் அவர் அந்த தொகுதிக்கு என்ன என்று அவரிடம் கேளுங்கள். அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்து கொண்டு அவருக்கு ஓட்டு போடுவதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.அதை விட்டுவிட்டு சென்ற தேர்தலில் ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் தந்தார்கள். இப்போது எவ்வளவு தருவார்கள் என்று கணக்கு போடாதீர்கள். இந்தியா என்பது முதிர்ச்சி அடைந்த ஒரு ஜன நாயக நாடு ஜனநாயகத்தின் முதல் படி தேர்தல் பணம் எல்லாம் வேண்டாம் இந்த நாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டு அந்த வேட்பாளர் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவருக்கு உங்கள் வாக்கை அளியுங்கள். அப்படி இல்லை என்றால் உங்கள் தொகுதியில் தகுதியான வேட்பாளர் யார் என்று தேடிப் பார்த்து கட்சி எல்லாம் பார்க்காமல் அவருக்கு வாக்களியுங்கள் யாருமே பிடிக்கவில்லை என்றால் இங்கு இருக்கும் எல்லா வேட்பாளர்களையும் நான் புறக்கணிக்கிறேன் என்று தைரியமாக நோட்டா பட்டனை அழுத்துங்கள். ஆனால், ஓட்டு போடாமல் மட்டும் இருக்காதீர்கள். ஓட்டு போடவில்லை என்றால் அது ஜனநாயக துரோகம் அந்த துரோகத்தை செய்யாதீர்கள்.