குறள் -607
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர்
மடிபுரிந்து மாண்ட உஞற்றுஇ லவர்.
சோம்பல் விரும்புபவர், சிறந்த முயற்சி இல்லாதவர், ஆகிய இருவரும் மற்றவர்களால் இடித்துக் கூறப்படுவர். பிறரால் இகழ்ந்துரைக்கும் சொற்களையும் கேட்பார்.
இந்த குறளில் திருவள்ளுவர் கூறும் படி, இலக்கு என்று ஒன்றை மனம் நாடினாலும் அதை அடைய நாம் ஆரம்பத்தில் இருந்தே, நம்மை தயார் ஆக வேண்டும் என்பதை குழந்தைகளிடத்தே சொல்லி விளக்குவது பெற்றோரின் கடமை.
இதை எப்படி செய்வது?
உதாரணத்திற்கு ஒரு பேப்பரை எடுத்து வைத்து நல்ல சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு சக்தி வாய்ந்த பூத கண்ணாடியை (லென்ஸை) அதை மீது அசைத்துக் கொண்டே இருந்தால் அந்த காகித தாள் தீ பற்றி எரியாது. ஆனால் அதை ஒரே இடத்தில் மையப்படுத்தி பிடித்து கொண்டிருந்தால் அந்த காகித தாள் தீ பற்றி எரியும் இதுவே இலக்கு நோக்கி பயணிப்பதாகும் இதை ஒரு முகப்படுத்தி உங்கள் எண்ணங்களை சீர் செய்வது என்றும் அர்த்தம் கொள்ளலாம். இப்படி உங்கள் குழந்தைகளுக்கு செய்முறை எடுத்துக்காட்டுடன் விளக்கி சொல்லும் போது அவர்கள் மனதில் ஆழ பதியும்.
இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு லட்சிய பிடிப்பு தெளிவாக இருக்கும். இதனை நேரம் மற்றும் இடத்திற்குள் சுருக்கி செயலாக்கிட இலக்குத் தெளிவு அவசியமாகிறது.
குழந்தைகளை அவர்தம் நிறை குறைகளை உணர்ந்தவராய் அதாவது, அவர்களுக்கு எது முடியும், எது முடியாது, என்பதை அவர்களே தெரிந்து புரிந்து ஏற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட குறுகிய கால கெடுவிற்குள், செய்ய வேண்டியவற்றை முறைப்படி திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி பெறுவது… இதனை “குறுகிய கால இலக்குத் தெளிவு” என்று கூறுவர். ( குழந்தைகள் அவர்தம் அன்றாட கால அட்டவணையை அவர்களோ அல்லது பெற்றோர்களின் உதவியுடனோ அதனை நடைமுறைப்படுத்துவது)
குழந்தைகளின் அவர் தான் படிப்பு நிலையை எடுத்துக்கொண்டு நீண்ட காலத்தை அதாவது தனது பிற்கால வாழ்வை மனதில் நிறுத்தி அதனை அடையும் நோக்கில் திட்டமிட்டு அதனை மனக்கண் ( vishwalization) கொண்டு பயணிப்பது…. “ இதனை தொலைநோக்கு இலக்குத் தெளிவு” என்று கூறுவர்( குழந்தைகளுக்கு ஒரு அறிவியல் விஞ்ஞானியாகவோ, அல்லது google போன்ற நிறுவனம் ஒன்றின் சிஇஓ ஆகவோ ஆக எண்ணி அதை நடைமுறைப்படுத்த தனது படிப்பில் கவனம் செலுத்துவதுடன் அதற்கான விஷயங்களை ஆராய்ந்து அவர்களே ஆர்வத்துடன் கற்று தெரிந்து முயற்சித்தல் ஆகும்)
“இலக்கு இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகு போன்றது”
இலக்குகளை அமைத்துக் கொள்வதில் தயக்கம் ஏன்?
ஒரு பேப்பரில் இவற்றை பட்டியலிட்டு எழுத வேண்டும்…உதாரணத்திற்கு
இலக்கு அமைத்தல் பற்றிய அறிவின்மை.
தோல்வி பற்றிய பயம்.
c) ஒத்திப் போடும் பழக்கம்.
e) எதிலும் ஆவல் இன்மை.
f ) புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம்.
g) தாழ்ந்த சுயமதிப்பு.
h) நம்பிக்கை அற்ற மனநிலை.
இப்படி உங்கள் தயக்கங்களை வரிசைப்படுத்தி, இவை தனித்தனியாக எடுத்து எழுத வேண்டும். ஒவ்வொரு தயக்கத்தையும் தலைப்பாக மேலே எழுதி அதற்கு கீழே ஏன்? என்ற கேள்வியை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி உங்களின் பதில்களை எழுதுங்கள்.
இந்த தயக்கம் ஏன் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளும் போது விளையும் பதில்களுக்கு எப்படி? இதிலிருந்து உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க போகிறீர்கள் என்று மறுபடியும் உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்வதைப் போல் எழுத வேண்டும்.
இப்படி கேள்வி கேட்டு பதிலை நீங்களே எழுதி வரும்போது உங்களுக்கு இலக்கை பற்றிய தெளிவும் அதை நோக்கி செல்லும் வழியும் பிறக்கும். ஏதேனும் ஒரு சிறிய இலக்கை எடுத்து அதை உங்கள் குழந்தைகளின் முன் இப்படி அட்டவணைப்படுத்தி நீங்கள் ஒரு activity செய்யும்போது அவர்களையும் இப்படி செய்யச் சொல்லிக் கொடுக்கலாம்.
“நான் என் இலக்கை அடைய போகிறேன்” என்று சொல்லி,குழந்தைகளை அவர்களின் ஏதேனும் ஒரு இலக்கை எடுத்து எழுதச் செய்யுங்கள் அவர்களையும் ஒரு அட்டவணை சேவித்து.
WHY?
HOW?
என்ற கேள்விக்கு பதில் அளிக்க செய்யுங்கள் அவர்களும் இலக்குத் தெளிவு பற்றிய சிந்தனை கொள்வர்.
“பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக வேண்டும்”
இலக்கத் தெளிவு பற்றி தொடர்ந்து பேசுவோம்……….
Leave a comment
Upload