தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 23 - ரேணு மீரா

குடிஆண்மை யுள்வந்து குற்றம் ஒருவன்

மடிஆண்மை மாற்றக் கெடும் குறள் -609

தன் குடும்பத்திற்கு உண்டாகிய குற்றம்,சோம்பலை நீக்கிவிட்டால் நீங்கிவிடும்.

ஒரு இலக்கை நோக்கி செல்வதற்கு திட்டமிடுதலின் அவசியம் பற்றி பார்த்து வருகிறோம். இப்போது அதை செயல்படுத்தும் காரணத்தையும் முறையையும் பார்ப்போம். பொதுவாக நாம் குழந்தைகளுக்கு எப்படி ஒரு விஷயத்தை பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டும் என்று தொடர்ந்து முந்தைய கட்டுரைகளில் பார்த்து வருகிறோம்.

20240409150138158.jpg

இந்த நேரத்தில் நாம் ஒரு சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். Leon Battista Alberti (1404-1472) என்ற இத்தாலிய நாட்டை சேர்ந்த 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஒரு உளவியல் நிபுணர், ஓவியர், எழுத்தாளர், கவிஞர், மனித உரிமை போராளி, இப்படி பன்முகத்திறன் கொண்ட இவரின் கடிதங்கள் பிற்காலத்தில் கண்டெடுக்க பெற்றன, அந்த கடிதங்களை படித்த போது அதில் அவர் எழுதி இருந்தவற்றை பார்த்த பின் இவர்தான் “ நேர நிர்வாகத்தின் முன்னோடி” என்று இவ்வுலகம் அறிந்து கொண்டது.

இவர் எழுதியுள்ள ஒரு சில கட்டுரைகளின் தலைப்பு கீழ் வருவதாவது :

•நான் காலையில் எழுந்தவுடன். •இன்றைய பொழுதின் என் வினாடிகள்.

•நான் என்ன செய்ய வேண்டும்?

•எனக்கான வேலைகள் என்ன?

•மனதின் திட்டங்கள் இன்று.

•செயலின் முடிவுகள் இன்று.

ஒரு வேலைக்கு ஆரம்ப நேரம், நிமிடம், நொடி மற்றும் அந்த வேலையின் முடிவு நேரம், நிமிடம், நொடி இப்படி லியான் ஆல்பர்டி தனது நேரத்தை மிகவும் கவனத்துடன் கண்காணித்து கணித்து வைத்திருந்தார். ஒவ்வொரு பணிக்கும் நேரத்தை ஒதுக்கி அதன்படியே முடித்து வந்தார், அவரது வாழ்க்கையில் ஒரு மணி நேரத்தை கூட வீணாக்கவில்லை.

இப்படி அவர் எழுதிய பல கட்டுரைகளும் கால அட்டவணைகளையும் இன்று டைம் மேனேஜ்மென்ட் கோர்சஸ் என்று பல இடங்களில் புத்தகமாகவும் சிலபஸ் ஆகவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கதை போல் விளக்கி சொல்லுங்கள், ஒரு வரலாற்று கதை யையும் ஒரு நபரையும் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வது நேரம் பற்றி அதிகம் கவனம் செலுத்த தூண்டுகோலாக இருக்கும்.

20240409150348640.jpg

Frederick winslow Taylor (1856-1915) இவர் ஒரு American, மெக்கானிக் இன்ஜினியரிங் படித்த இவர், பொருளாதார ரீதியாக தொழில் மேம்பாட்டு திட்டங்களை வகுத்தவர். (The principles of scientific management) இதற்கான நேர திட்டமிடுதலை பற்றியும் அவற்றின் அட்டவணை அமைத்தல் பற்றியும் இவர் எழுதிய புத்தகங்கள் இன்றும் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவை இத்தகைய செய்திகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் இந்த விடுமுறை நாட்களில் வாரம் ஒரு பிரபலம் என்று எடுத்து குடும்பத்துடன் கூடி சாப்பிடும் போதோ தூங்குவதற்கு முன்போ கலந்து பேசி செய்தி பரிமாறும் போது குழந்தைகளுடன் நெருக்கம் அதிகரிப்பதுடன் அவர்களுக்கு நேரம் பற்றிய விளக்கமும் கிடைக்கும்.

தொடர்ந்து பேசுவோம்…..