தமிழ் மொழியை பல்லாயிரம் காலமாக வாழ்விக்க பல விஷயங்கள் உதவியுள்ளது. அதில் முக்கியமானது ஆழ்வார்கள் அருளிய ஸ்ரீ திவ்ய பிரபந்தம். கவசம் கனெக்ட் யூடுப் சேனலில் தினமும் ஒரு பாசுரம் என அடுத்து 4000 நாட்களுக்கு நம்மை தமிழுயிலும், பக்தியிலும், ஆன்மீகத்திலும் ஈடுபடுத்த டாக்டர் வெங்கடேஷ் வழங்கும் அந்த தினந்தோறும் பிரபந்தம் காணொளிகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் விகடகவி மகிழ்ச்சி கொள்கிறது.
ஸ்ரீரங்கத்தில்
பெரிய பெருமாள் ரங்கநாதனுடைய திருவாயின் அழகிலே மூழ்கி திளைக்கிறார் திருப்பாணாழ்வார்.
திருப்பாணாழ்வார் அருளிய
அமலனாதிபிரான் ஏழாம் பாசுரம்
கையின் ஆர்
சுரி சங்கனல் ஆழியர்
நீள்வரை போல் மெய்யனார்
துளப விரையார் கமழ் நீண் முடி எம்.ஐயனார்
அணிஅரங்கனார்
அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ!
என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!
- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீரங்கநாதனை நரசிங்க பெருமாளாக காண்கிறார். கண் குளிர்ந்து கடாக்ஷிக்கும் அந்த கண் அழகிலே ஈடுபட்டு பித்தனாகிறார் திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார் அருளிய
அமலனாதிபிரான் எட்டாம் பாசுரம்
பரியன் ஆகி வந்த
அவுணன் உடல் கீண்ட
அமரர்க்கரிய ஆதிப் பிரான்
அரங்கத்தமலன் முகத்து
கரிய ஆகிப் புடை பரந்து
மிளிர்ந்து செவ்வரி ஓடி
நீண்ட அப்பெரிய வாய கண்கள்
என்னைப் பேதைமை செய்தனவே!
- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
திருப்பாணாழ்வார் அருளிய
அமலனாதிபிரான் ஒன்பதாம் பாசுரம்
அமலனாதிபிரான் ஒன்பதாம் பாசுரம்
ஆலமா மரத்தின் இலைமேல்
ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான்
அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணி ஆரமும்
முத்துத்தாமமும் முடிவில்லதோர் எழில்*
நீல மேனி ஐயோ!
நிறை கொண்டதென் நெஞ்சினையே!
- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
பெருமாளை இதுவரை ஞானக் கண்ணில் சேவித்த திருப்பாணாழ்வார்
10-ம் பாசுரத்தில் விஷமக்கார கண்ணனாக பிரத்யக்ஷமாக சேவிக்கிறார்!
திருப்பாணாழ்வார் அருளிய
அமலனாதிபிரான் பத்தாம் பாசுரம்
கொண்டல் வண்ணனைக்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணி அரங்கன்
என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்றொன்றினைக் காணாவே.
- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்
Leave a comment
Upload