இப்புவி வாழ்வில் நமது மிகப்பெரிய சொத்து நல்ல உடல் நலம்தான் .
இங்கு எதையும் சம்பாதிக்க முடியும் , எதையும் விலை தந்து வாங்க முடியும் .ஆனால் பணத்தால் வாங்க முடியாதது நல்ல ஆரோக்கியம் .
இளமை முதலே ஒருவர் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடற்பயிற்சி போன்றவையே ஆரோக்கியமான,கட்டுகோப்பான உடலைத் தருகிறது.
'Fit as a Fiddle " என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு.இந்த "fitness fever" எக்காலத்தையும் விட இப்போது அதிகமாக பரவி வருகிறது . அதற்காக ஜிம் சென்று பயிற்சிகள் மேற்கொள்ளுவது பரவலாகி விட்டது .
உரிய பயிற்சிகள் வழியாக உடல் பருமனைக் குறைக்க , அல்லது உடலை ஏற்ற கொழுப்பைக் கரைக்க ,உள்ளுறுப்புகளை பலப்படுத்த, தம் தோற்றத்தை என்று பல்வேறு பயன்களை பெற உபகரணங்களின் உதவியோடு , ஒரு பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யும் முறையான உடற்பயிற்சிகள் நல்ல பலனைத் தருகிறது .
'ஜிம்' என்பது ஆண்கள் மட்டும் செல்லும் பயிற்சிக்கூடம் என்ற நிலை இன்று இல்லை. பெண்கள் அதிக அளவில் சென்று முறையாக பயிற்சி செய்து 'பிட்'டாக இருக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்கள் . இன்றைய வாழ்க்கை முறை, துரித உணவுகள் , அதிக உடல் இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல் எல்லாமே பெண்களின் உடல் நலனை பாதிக்கிறது பெண்களுக்கென்று பிரத்தியேக ஜிம் இருந்தாலும் , ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்லும் Unisex ஜிம்களும் இப்போது பெருகி விட்டன .
Be Fit என்ற Unisex ஜிம் நடத்தி வரும் அரவிந்த் அவர்களை இந்த பிட்னஸ் சிறப்பிதழுக்காக சந்தித்தோம் . பெண்கள் ஜிம்முக்கு வருவதால் அதிகம் பயன் பெறுகிறார்களா , அவர்களுக்கு அதில் ஏற்படும் மனத்தடைகள் பற்றி அவர் கருத்தை அறிய விரும்பினேன் .
அர்விந்த் கூறுகிறார்
"நான் அடிப்படையில் ஒரு பாடி பில்டர் . Mr .வேலூர் , Mr.தமிழ்நாடு பட்டங்களைப் பெற்றவன். தேசிய அளவில் போட்டிகளில் கலந்துக் கொண்டவன்.இந்த துறையில் பத்தாண்டு கால அனுபவம் பெற்றுள்ளேன்.
எனது ஜிம்மில் ஏராளமான பெண்கள் பயிற்சிக்கு வருகிறார்கள் .காலை 6 மணி முதல் இரவு பத்து மணி வரை அவரவருக்கு விருப்பமான நேரத்தில் வந்து உடற்பயிற்சி செய்கிறர்கள் .இளம் வயதினர் மட்டுமல்ல,நடுத்தர வயதினரும்.,அறுபது வயதை தாண்டியவரும் இங்கு பயிற்சிக்கு வருகிறார்கள்.
ட்ரெட் மில் , எலிப்டிக்கல் ட்ரைனர் போன்ற பல உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள் . அத்துடன் புரோட்டின் ,நார்ச்சத்து மிக்க உணவுமுறைகளை பரிந்துரைக்கிறோம். மூன்று .மாத அளவில் அவர்களிடம் நல்ல வித்தியாசம் காண முடிகிறது. அதனால் அவர்கள் தொடர்ந்து ஜிம்முக்கு வந்து பலன் பெறுகிறார்கள் " என்றார் .
அந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறும் வினோதினி என்பவரை நமக்கு அறிமுகப்படுத்த அவர் நம்முடன் உரையாடினார் .
வினோதினி பேசுகிறார் :
"நான் ஒரு ஹோம் மேக்கர் .இங்கு மூன்று வருடங்களாக பயிற்சிக்கு வருகிறேன் .என்னைப்போல பல இல்லத்தரசிகள் இங்கு வருகிறோம்.உடல் எடை குறைக்கவும், நல்ல தோற்றம் பெறவும், முறையான பயிற்சி வழியாக ஆரோக்கியமான , வலுவுள்ள உடலை பெறவும் இங்கு வருகிறோம் . வீட்டு வேலைகளே சிறந்த உடற்பயிற்சி என்பது உண்மை இல்லை
நாள் முழுவதும் வீட்டில் இருந்து ஒரு அதிகம் செயல் படாத (sedentary life) வாழ்பவர்களுக்கு இந்த ஜிம் ஒரு வரம் .நமக்கான நேரத்தை நாம் எடுத்துக்கொண்டு நம்முடலை கவனித்துக் கொள்கிறோம் . முதல் மாதத்தில் ட்ரைனர் நம்முடனே இருந்து உடம்பின் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி பயிற்சி தருகிறார் , warm up , stretch exercises, workout எல்லாமே முறையாக கற்றுத்தருவார் . எல்லா சந்தேகங்களையும் உடனுக்குடன் சரி செய்வார் ..
இந்த பயிற்சி வழியாக மன அழுத்தம் , சோர்வு ,கவலை போன்றவற்றில் இருந்து விடுபட்டு , இங்கு இருக்கும் ஓரிரண்டு மணி நேரத்தில் ஒரு விடுதலை உணர்வும் , புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது .என் மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது .
ஆணும்,பெண்ணும் ஒன்றாக பயிற்சி எடுக்கும் ஜிம் என்றாலும் இங்கு பாதுகாப்பாக உணர்கிறோம். எவ்வித பயமுமில்லை . நமக்கான டயட் சார்ட் தருகிறார்கள் .அது மேலும் பயனைத் தருகிறது .என் நண்பர்கள் பலரை இங்கு சேர நான் ஊக்குவித்துள்ளேன் "என்றார் வினோதினி
ஜிம்மில் சேர்ந்து பயிற்சி பெறுவது இன்று சாதாரணமாகி விட்டது. பாடிபில்டர்கள் , நடிகர்கள் ,விளையாட்டு வீரர்கள் பணம் படைத்தவர்கள் மட்டுமே செல்லும் இடமாக இருந்த ஜிம் இன்று எல்லா தரப்பினரும் ,குறிப்பாக பெண்கள் அதிக அளவில் சென்று பயிற்சிகளை மேற்கொள்ளும் கூடமாக மாறி விட்டது .
நல்ல உடல்நலத்தை நமக்கு பெற்று தருவதுடன் தன்னம்பிக்கை நிறைந்தவர் களாக நம்மை நடை போட வைக்கிறது .
வலுவான உடலைப் பெற 'ஜம்'மென்று 'ஜிம்'முக்குப் போவோம்
Leave a comment
Upload