பாகி
வியாழக்கிழமை திடீரென்று சோமசுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க ஸார்…” என்றேன். “நாராயணா, நேத்து பேசினப்ப ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். போன வாரம் ஹைதராபாத்லே நடிகை ஸ்ரீ ரெட்டி ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் ஆபீஸ் முன்னாடி நின்னு நிர்வாணப் போராட்டம் நடத்தினாங்க தெரியுமில்லே…” என்றார்.
“பரபரப்பான போராட்டம்னு எல்லா ஊடகத்துலேயும் காட்டினாங்க..” என்றேன்.
“அதான் கொஞ்சம் இப்படி நடந்தா போதும் எல்லா சேனலும் கிளுகிளுப்பாக்கிடுவாங்க, நாராயணா.. நீ ஏதாவது ஸ்டோரி உங்க பத்திரிகைக்குப் பண்ணப் போறியா…” என்றார்.
“இதுவரை ஐடியா இல்லேண்ண.. எதுக்கு கேக்கறீங்க…”
“நிர்வாணம்கிறது ஆபாசம் இல்லை.. அதுக்குப் பல அர்த்தம் இருக்கு தெரியுமா..” என்று சொன்னவர், “ இப்ப ஏதாவது வேலையிருக்கா.. கொஞ்ச நேரம் பேசலாமா….” என்றார், கைபேசியைப் பார்த்தேன்.. பாட்டரி 100 சதவீதம் இருந்தது. “பேசலாம்ணே… எடிட்டோரியல் மீட்டிங் சாயந்திரம்தானே…” என்றேன்.
“இப்படி நிர்வாணமா போராட்டம் நடத்தறத்துக்கு பல அர்த்தம் இருக்குன்னு சோஷியாலஜிஸ்ட்லாம் சொல்றாங்க. முதல்லே எல்லோரது கவனத்தையும் ஈர்க்கறது. அடுத்து, எங்க கிட்டே டிரஸ் உள்பட எதுவுமே இல்லாம போயிடுச்சு பாருன்னு கோபமா எக்ஸ்பிரஸ் பண்றது.. மிருகங்கதான் நேக்கடா இருக்கும். எங்களையும் மிருகமா நடத்தறீங்கன்னு வெறுப்பு காட்டறது.. 1914 லே டவுக்ஹோபர் சமூக இயக்கம்தான் (Doukhobor social movement) முதல்லே இந்த வேலைய ஆரம்பிச்சுதுன்னு சொல்றாங்க… ரஷ்யாவிலே இருந்த இந்தக் குழு பலவந்தமா வெளியேற்றப்பட்டு கனடாவுலே குடியேறினாங்க. எல்லா சடங்குகளையும் எதிர்த்த இவங்க அஹிம்சை, சைவ உணவை வலியுறுத்தினாங்க. இதையெல்லாம் குறிச்சுக்க..”என்றார்.
“நான் மொபைலை காதுலே வெச்சிக்கிட்டே கம்ப்யூட்டர்லே நீங்க சொல்றதை கம்ப்போஸ் பண்றேண்ணே…” என்றேன்.
சோமு தொடர்ந்தார்:
“நாராயணா, அதுக்கப்புறம் ஜெர்மனியிலே நிர்வாண சமுதாயம் கூட இயக்கமா நடந்திருக்கு… அதுலே கலந்துகிட்டு கொஞ்ச நேரம் நிர்வாணமா இருந்தவரு நம்ம நாட்டு தலைவர், யாரு சொல்லு…” என்றார். “நான் பெரியார் ஈவெராதானே.. நான் படிச்சிருக்கேன். நீங்களே ஒரு ஸ்டோரி பண்ணியிருக்கீங்க…” என்றேன்.
பெரியார் செய்தது ஒரு வித துறவு நிலைன்னு சமூகவியல் வல்லுநர்கள் சொல்றாங்க. அதுதான் வர்த்தமான மகாவீரர் மேற்கொண்ட மகா நிர்வாணம்.
போன வருஷம் ஜூன் மாசம் அர்ஜண்டினாவிலே பெண்களுக்கு எதிரான பலாத்காரத்தைக் கண்டிச்சு 100 பெண்கள் திடீர்னு காஸா ரோஸாடாங்கிற ஜனாதிபதி ஆபீஸ் முன்னாடி நிர்வாணமாக நின்னு போராட்டம் நடத்தியிருக்காங்க..
எல்லாத்தையும் விட நம்ம நாட்டுலே நடந்த ரெண்டு நிர்வாணப் போராட்டங்கள்தான் பரபரப்பானவை.
ஒண்ணு போன வருஷம் தமிழ்நாட்டு விவசாயிங்க தில்லியிலே நடத்தின நிர்வாணப் போராட்டம். அடுத்தது 20 வருஷத்துக்கு முன்னாடி வடகிழக்கு மாநிலங்கள்லே ராணுவத்தின் பாலியல் கொடுமையைக் கண்டிச்சு பெண்கள் நடத்தின நிர்வாணப் போராட்டம். என்ன நாராயணா நோட் பண்ணிக்க எப்பவாச்சும் ஸ்டோரி பண்ண உதவும்…” என்றார் சோமசுந்தரம்.
எல்லாவற்றையும் விட உலுக்கிப் போட்ட நிர்வாணப் போராட்டம் மணிப்பூர்லே நடந்துச்சு.
மணிப்பூர்லே ராணுவத்தினர் அட்டூழியம் செய்யறாங்கன்னு காலம் காலமா எதிர்ப்பு வந்துக்கிட்டே இருக்கு. அதுக்காகத்தான் ஐரோம் சர்மிளா தொடர் உண்ணாவிரதம் இருந்தாரு.
அப்படி ராணுவத்தை எதிர்த்துப் போராடின மணிப்பூர் தங்ஜம் மனோரமாங்கிற பெண்ணை 2004 ம் வருஷம் ஜூலையிலே 17வது ரைபிள்ஸ் ஆர்மிகாரங்க விசாரணைன்னு சொல்லி கடத்திட்டு போய் பாலியல் பலாத்காரம் செஞ்சு கொன்னுட்டாங்கன்னு பரபரப்பா செய்தி வந்தது.
அப்பதான் பெண்கள் கொதிச்சுப் போனாங்க.. ராணுவ முகாம் முன்னாடி பல பெண்கள் குவிஞ்சு நிர்வாணமா நின்னு, “உங்களுக்கு வேண்டியது இந்த உடம்புதானே…”ன்னு கோபத்தோட போராட்டம் நடத்தினாங்க. இது பெரிய அதிர்வலை ஏற்படுத்திச்சு.. கடைசிலே அசாம் ரைபிள் படையை வித்ட்ரா பண்ணிட்டாங்க.. ராணுவச் சட்டத்தை எடுக்கலே.. மனோரமாவுக்கு நீதியும் கிடைக்கல்லே..” என்று சொல்லி கட் பண்ணினார் சோமு..
நான் அதற்குள் பெரிய ஸ்டோரிக்கு விவரங்களை கம்ப்யூட்டரிலே சேவ் செய்துவிட்டேன். அவரை மீண்டும் நானே அழைத்தேன்.
“கட் ஆயிடுச்சுண்ணே…” என்றேன். “பேலன்ஸ் இல்லேப்பா…” என்றவர், “நாராயணா, நிர்வாணமா இருக்கச் சொன்ன கடவுள்களையே அசத்தின கற்புக்கரசியை தெரியுமா… “ என்று கேட்டுவிட்டு அவரே தொடர்ந்தார்.
“அனுசுயான்னு கற்பரசி அத்ரி முனிவரோட மனைவி. அவளை சோதிக்க சிவன், விஷ்ணு, பிரம்மா மூணு பேரும் சன்னியாசி வேஷத்துலே வந்து, நீ பிறந்த மேனியோட சாப்பாடு போட்டாதான் சாப்பிடுவோம்னு அடம் பிடிச்சாங்க. அதுக்கு அந்த அம்மா, சிரிச்சிக்கிட்டே அவங்களைக் குழந்தையாக்கி, மடியிலே வெச்சு சோறு ஊட்டினாங்க.. கடவுள்ங்களுக்கே அவ தாயாயிட்டா…” என்று கூறி, “வெச்சுட்டுமா..” என்றார்.
மனம் நிறைவாக இருந்தது. சோமு அண்ணன் நார்மல் ஆகிவிட்டார் என்றும், நிறைய விஷயம் கிடைத்தது என்றும்..!

Leave a comment
Upload