குற்றச்சாட்டுக்கு முன்னும் பின்னுமான பேச்சுகளை அரசும் அதிகார வர்க்கமும் கவனித்திருக்க வேண்டும்.
ஒரு மாவட்ட ஆட்சியரை மாற்றுவதற்கு முன்பு மக்களின் கருத்தையோ அல்லது அந்த பகுதி அரசு ஊழியர்களையோ, ஏன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை கூட விசாரி்த்திருக்கலாம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றவுடன் ஏராளமானப் பணிகளை ஆரம்பித்து வைத்து கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
மாவட்டம் வளர்ச்சி நோக்கி மெல்ல நகரத் தொடங்கியது.
வழக்கமான ஊழல், நிர்வாக குறைபாடுகள்என குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தபோதிலும் எளிய மக்களின் வலியறிந்தவராய் இருந்தார்.
சிக்கலான சமயங்களில் கூட நிதானமாய்,சிரித்த முகத்துடன் அணுகி தீர்வுக் கண்டுள்ளார். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர்.
அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளை சற்று கடின வார்த்தைகளைக் கொண்டு கண்டிப்பார் ,
அதில் ஒருவித அக்கரைதானிருக்கும் வெறுப்பிருக்காது என்று சக ஊழியர்களே கூறுவர்.
இப்படி எத்தனையோ பாசிட்டிவ் விசயங்களிருக்க ஒரே ஒரு தவறான சொல் அவரைப் பற்றிய பிம்பத்தையே தவறாக கட்டமைத்து அவரை தவறானவராக காட்டிவிட்டது. அவர் பேசிய வார்த்தைகளில் தவறு இருக்கலாம், ஆனால் அவர் அப்படி தப்பாக சிந்திப்பவரில்லை என மயிலாடுதுறை மக்களுக்கு நன்கு தெரியும்.
நடவடிக்கைகளில் அரசியல் காரணங்களும் இருப்பதாக பலர் பேசுகிறார்கள். உங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளில் அதிகாரிகளை பலிகடாவாக்காதீர்கள்.
மாவட்ட வளர்ச்சிக்குத் தற்போதைய தேவை இவர்களைப் போன்ற திறமையான ஆட்சியர்கள்.
மிகச்சிறந்த மனிதநேயர் திரு மகாபாரதி அவர்கள். மக்கள் எளிதில் அணுகும்படி இருப்பவர். இலக்கியத்தையும், இயற்கையையும் ரசிப்பவர்கள் ஒரு பொழுதும் நிச்சயமாக தீங்கு செய்ய மாட்டார்கள் என சொல்வார்கள். அது போல வாழ்ந்து காட்டியவர் அந்த சிறுமிக்கு எதிராகவோ, இளைஞனுக்கு ஆதரவாகவோ எங்கு பேசினார் ? காவலர்களுக்கான குற்றங்களை தடுக்கின்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசினார்.
மக்களுக்கான அவர் சொல்ல வந்த செய்தி அல்ல அது. பணி ஓய்விற்கு குறைந்த மாதங்களே இருக்கின்ற நிலையில் அவர் வாழ்வில் இச்சம்பவம் நிரந்தர வருத்தத்தை ஏற்படுத்திவிடக்கூடாது, அவர் இங்கு பணிபுரிந்த காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் திகழ்ந்தார் .
அருள் மிகு மயூரநாதரின் பரிபூரண அருளால் மீண்டும் அவரை இங்கேயே நியமித்து ஓய்வுபெறும் நாள் வரை தொடர அரசு ஆவண செய்யவேண்டும் என்பதும்,
தமிழ்நாடு அரசு அவர் மீதான நடவடிக்கையை மீண்டுமொருமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே மயிலாடுதுறை மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.
Leave a comment
Upload