ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா நடித்துள்ள " சாவா' படத்திற்கு மத்திய பிரதேசம், கோவாவில் மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் விஜய்
விஜய் வாரிசு ஜாசன் சஞ்ஜய் இயக்கும் ஒரு படத்தில் சந்திப் கிஷன் நடிக்கிறார். அவரிடம் நிருபர்கள் " விஜய் மகன் படத்தில் நடிக்கிறீங்களாமே" என்று கேட்டதற்கு விஜய் மகன் படத்தில் அல்ல ஜோசப் விஜய் மகன் என்று சொல்லுங்கள் என்று இயக்குனருக்கு டானிக் தந்திருக்கிறார்.
ஜோதிகா
தமிழ்நாடு கல்வி செட் ஆகாது என்று குழந்தைகளுக்காக மும்பையில் செட்டிலான சூர்யா, ஜோதிகா தம்பதிகள் அங்கே இருந்து தான் வந்து போய் சினிமாவில் நடிக்கிறார்கள். இப்போது நடிகை ஜோதிகா 'டப்பா கார்டெல் என்ற வெப் தொடரின் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜோதிகா சிகரெட் பிடிக்கும் படம் தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது. கூடவே குடும்பத்தில் முணுமுணுப்பு.
கீர்த்தி சுரேஷ்
அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ
சுரபி லஷ்மி
மலையாள பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் இயக்கி உள்ள படம் வீரவணக்கம். இதில் சமுத்திரக்கனி, பரத் ,சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதைவிட முக்கியம் கேரளாவில் புகழ்பெற்ற 96 வயதான பி.கே.மேதினி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜன்
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் இணைந்திருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
குஷ்பூ
மீண்டும் வெப் தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார் நடிகை குஷ்பு. தாமரைக் கட்சியில யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க பாவம்.
நயன்தாரா
இந்தியில் நடிக்கும் முடிவில் இருக்கிறார் நயன்தாரா. தற்போது மும்பை பாந்த்ரா பகுதியில் அழகான உடை அணிந்து ரசிகர்களை பார்த்து கையசைக்கும் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
திரிஷா
திரிஷாவின் பழைய வீடியோ ஒன்று தற்சமயம் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ' நீங்கள் படிக்கும் போது எந்த ஆணுக்காவது லவ் ப்ரொபோஸ் செய்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "நான் அப்படியெல்லாம் செய்ததில்லை ஏனெனில் முழுக்க முழுக்க பள்ளிக் கல்லூரியில் என்னை படிக்க வைத்து எனது அம்மா ரொம்ப தவறு செய்துவிட்டார் என்று ஜாலியாக குறிப்பிட்டிருக்கிறார் நடிகை திரிஷா.
அனுஷ்கா
அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள 'காதி' டிரெய்லர் வெளியாகி உள்ளது.
Leave a comment
Upload