கௌரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின்.
ஆமா இந்த மாசம் இத வச்சு தான் சமாளிக்கணும் !!
இப்தார் விருந்து விஜய் பங்கேற்பு.
ஆமாம், இந்த அரசியல் பாயாசம் பாசிசம் இதெல்லாம் மறுபடி அங்க பேசணுமே !!
திமுக அரசின் திட்டங்களை ஒவ்வொரு வாக்காளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் நிர்வாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்.
அண்ணே வாக்காளர்களிடம் நம் கொண்டு சேர்க்க வேண்டிய விஷயமே வேற அதெல்லாம் காந்தி நோட்டு விஷயம் விடுங்க !!
நம்பர் ஒன் கடன்கார மாநிலமானது தமிழகம் அண்ணாமலை விமர்சனம்.
ஓ தமிழகம் முதன்மை மாநிலம் சொல்றாங்க அது இதுதானா !!
கல்வி 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள் அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதில்.
அவங்க வாங்கி தந்தா நீங்க ஸ்டிக்கர் ஒட்டிப்பீங்க அப்படித்தானே !!
பாஜக ஆட்சியாளர்கள் அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர் முதல்வர் ஸ்டாலின்.
சட்டசபை தேர்தல் வரைக்கும் தலைவர் பாவம் இதே தான் திரும்பத் திரும்ப சொல்லணும் !!
போக்சோ வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்கள் குறைவால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.
ஆக இப்ப நீதிமன்றம் தான் குற்றவாளி !!
நீட் தேர்வு ரத்து ரகசியத்தை முதல்வர் கூற வேண்டும் பழனிச்சாமி வலியுறுத்தல்.
அண்ணே விடுங்கண்ணே தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா !!
எங்களுடையது கருத்தியல் கூட்டணி கருத்து மாறுதல் வந்தாலும் விரிசல் வராது முதல்வர் ஸ்டாலின்.
விரிசலையெல்லாம் சரி பண்ண நீங்க தான் 'பணம் 'பேஸ்ட் வச்சிருக்கீங்களே !!
எந்த சக்தியாலும் திமுக ஆட்சியை வீழ்த்த முடியாது ஆளூர் ஷாநவாஸ்.
நீங்க இப்படி சொல்றீங்க உங்க தலைவர் திருமா விடுதலை சிறுத்தை கட்சிகள் 2026 தேர்தலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் அப்படின்னு சொல்றாரு !!
பெரியாரின் பொய் முகத்தை சிதைத்ததால் தான் சீமானை சிரம படுத்துகின்றனர் எச்.ராஜா
அப்போ அந்த விஜயலட்சுமி வீடியோ எல்லாம் பொய்யா கோபால் !!
தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பு இதற்கு நீங்கள் பதில் சொல்லனும்னு டெய்லி கேட்டுட்டு இருக்காங்க அக்கா !!
நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர் நியமனம் அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு.
நோயாளிகள் அதிகரிக்கனும்னு கூடவா போராட்டம் நடத்துவாங்க !!
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு.
தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்திருப்பார்களோ !!
உலகம் வழக்கத்தை விட சுவாரசியமாக உள்ளது மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
எப்ப பாத்தாலும் வெளிநாட்டில் சுத்திக்கிட்டு இருக்கீங்களா அதனாலதான் இந்த கண்டுபிடிப்பு !!
பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி ராகுல்காந்தி.
உங்களுக்கு பாவம் தேர்தலில் தொடர் தோல்வி !!
Leave a comment
Upload