விகடகவியார் உள்ளே நுழைந்ததும் ஆபீஸ் பையன் வெயிலுக்கு இதமாக தர்பூசணி ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார்.நாம்......
"அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சுற்றமும் நட்பையும் சோதிக்க ஆரம்பித்து விட்டார்களே "என்று கேட்டோம்
. "பிப்ரவரி 25ஆம் தேதி கோவை வந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா செந்தில் பாலாஜி பெயரை குறிப்பிடாமல் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறிப்பிட்டு அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் அதன் எஃபெக்ட் தான் இந்த சோதனை "என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்
கூடவே "கரூரில் அரசு ஒப்பந்தக்காரர் வீடு உள்பட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்கிறது நான் உம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை சோதனை முடிந்த பாடில்லை.அரசு ஒப்பந்தக்காரர் எம் சி சங்கர் மற்றும் ஆனந்து இது தவிர கொங்கு மெஸ் உரிமையாளர் மணி சக்தி மெஸ் கார்த்தி ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை இவர்கள் மூலம் தான் கொடுக்கல் வாங்கல் எல்லாம் நடந்திருப்பது என்ற ஆதாரங்கள் தற்சமயம் அமலாக்கத்துறை வசம் இருக்கிறது. இது தவிர எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது "என்றார் விகடகவியார்
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தலைமை செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் எடப்பாடி யாரை பாடாக படுத்தினார். இப்போது அரசு அலுவலகங்களில் இவரது ஆட்சியிலும் அமலாக்கத்துறை புகுந்து விட்டது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ன செய்ய?
மதுபான தொழிற்சாலை வைத்திருக்கும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. சோதனை நடத்தும் அதிகாரிகள் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்துகிறது "என்றார் விகடகவியார்.
'சரி அடுத்த விஷயத்துக்கு வாரும்'என்று நாம் சொன்னோம்.
தற்சமயம் திருமா தான் பேசும் பொருள் நான்கு எம் எல் ஏக்கள் இரண்டு எம்பிக்கள் இருந்தும் என்ன பயன் கட்சிக்கொடி கூட ஏற்ற முடியவில்லை என்கிறார்.
2026 இல் விடுதலை சிறுத்தைகள் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்கிறார் அவரைப் பொறுத்தவரை இந்த முறை 25 தொகுதிகள் யார் தருகிறார்களோ அவர்கள் தான் கூட்டணி என்று அறிவிப்பு அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று விகடகவியார் சொன்னதும் அப்படித்தர யார் இருக்கிறார்கள் என்று கேட்டபோது அவ்வளவு தொகுதிகள் இல்லாவிட்டாலும் அதிமுக திமுகவை விட கூடுதலாக தொகுதிகள் தர ரெடியாக இருக்கிறது. அதனால் தான் எடப்பாடி திமுகவை மட்டுமே எங்களுக்கு எதிரி என்று சொல்லி இருக்கிறார் கூட்டணி பற்றி கேட்டபோது இன்னும் ஆறு மாதம் காத்திருங்கள் என்று நிருபர்களிடம் சொல்லி இருக்கிறார்.
மொத்தத்தில் அவரும் ஏதோ ஒரு கணக்குப்போட்டுக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் 'என்றார் என்று சொல்லி சிரித்து விட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload