தொடர்கள்
அனுபவம்
சென்னை கூல் இளநீர் !! குடிங்க... வெயிலைக் குறைங்க ! பால்கி

20250324131002928.jpg

உஸ்ஸ்ஸ் அப்பப்பா என்ன வெய்யில்! சித்திரை வெய்யில் மண்டய பொளக்குது.

இளநீர் குடிச்சா நல்ல இருக்குமே என்று எவர் நினைக்க மாட்டார்.

சென்னை இளநீர்

அடையார் காந்தி நகர் இராமச்சந்திர ஆதித்தனார் சாலையில் ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலை பள்ளியின் அருகே தள்ளுவண்டியில் வெண் குடை நிழலில் சீவிக்கொண்டிருந்தார். வெட்டி தள்ளிக்கொண்டிருந்தார். பொளந்து கொண்டிருந்தார்.

20250324131105201.jpg

சதக் சதக் சதக் மண்டை ஓடு பொளந்தது.உள்ளே இருந்து திரவம் பெருக்கெடுத்தது. பொளந்த ஓட்டையில் ஒரு ஸ்ட்ராவைச் சொருகி ஆர்டர் கொடுத்தவரிடம் கொடுக்கிறார்.

வண்டிக்கருகே வந்திருந்து வழுக்கையுடன் அல்லது ஒன்லி இளநீர் என்று கேட்டு வாங்கி குடித்துக்கொண்டும் வழுக்கையை சுவைத்துக்கொண்டுமிருந்தனர் வாடிக்கையாளர்கள் நான் உட்பட. சென்னை வரும்போதெல்லாம் அவரிடம் இளநீர் குடிப்பது வழக்கம்.

திருச்சி துறையூரைச் சேர்ந்தவர் ஷங்கர். அவர் தான் அங்கு இளநீர் தேங்காயை வெட்டிக்கொண்டிருந்தார்.

பத்து வருடங்களாக இங்கு வியாபாரம் நடத்துகிறார். கடை முதலாளி அமைத்துக் கொடுத்த இந்த வியாபாரத்தில் பணியாளாக இருக்கிறார்.

வாரத்துக்கு ஒரு முறை இளநீர் தேங்காய்கள் பாண்டிச்சேரியிலிருந்து தருவிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

சென்னையிலேயே அமைதியான இடம் அடையார் காந்தி நகர். அங்கு அமைதியாக வியாபாரம் நடத்துகிறார். நாளொன்றுக்கு சுமார் 100 இளநீர் விற்கிறார்.

"நல்ல கோடை காலம் அதுவுமாக ரூ 47/- என்ற விலை செம சீப். எந்த காயும் ஒரே விலை தான். நானும் பல்லாவரத்திலிருந்து இந்த வழியாக எனது அலுவலகம் செல்லுகையில் இங்கு கண்டிப்பாக இளநீர் இளைப்பாறல் செய்துவிட்டுத் தான் செல்வேன்" என்று கூறுகிறார் மத்திய அரசாங்க ஊழியர் மணியம்.

20250324131648341.jpg

உடம்புக்கும் காலை வேளையில் நல்லது என்பதால் காலை நடை பயிலும் அன்பர்களுக்கு இந்த இளநீர் கடை வரப்ரசாதமாக இருக்கிறது. ட்ராஃபிக் ஜாம் இல்லை. பொல்யூஷன் இல்லை. அமைதியான நிழல் தரும் மரங்களின் கீழே இளநீருடன் இளைப்பாறிச் செல்பவர்கள் அனேகம் பேரை காண முடிந்தது.

வேர்வை சிந்தி சுய மரியாதையுடன் உழைக்கும் வர்க்கம் ஒருவரைக் காணும்போது அந்த இளநீர் இன்னும் சுவைத்தது.

2025032413172694.jpg

ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் பாட்டில் கூல் டிரிங்கஸை குடித்து தாகம் தீர்க்க முயற்சிக்காது, இந்த இளநீர் குடிப்பதனால், வயிற்றுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்காத தாக சாந்தி இளநீருக்கு மாறுங்கள்.