2008ல் பத்து டீம்களோடு ஆரம்பித்தது இந்த ஐபிஎல்.
லலித் மோடி இந்த ஐபிஎல் சம்பந்தமான பண மோசடி செயலின் கீழ் ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட 2010ல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.
கடந்த பத்து ஐபிஎல் சீசன்களில் பதின்மூன்று அணிகள் விளையாடியுள்ளன. இவற்றில், மூன்று அணிகள் இந்த வருடம் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
2011 ஆம் ஆண்டில், ஒப்பந்த மீறலுக்காக கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவின் உரிமையை (இந்திய கிரிக்கெட் வாரியம்) பிசிசிஐ நீக்கியது.
2012 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் உரிமையை பிசிசிஐ தனது உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியதற்காக நீக்கியது. இத்தனைக்கும் இந்த அணி 2009ல் ஐபிஎல் கப்பை வென்றிருக்கிறது. அந்த முறை இன்றைய நமது அதிரடி அட்டக்காரரான ரோஹித் ஷர்மா அந்த அணியில் ஆடியுள்ளார். அந்த தொகுதி உரிமையை சன்ரைசர்ஸ் வாங்கி இன்றும் ஆடிக் கொண்டிருக்கின்றது. 2016ல் ஐபிஎல் கப்பையும் வென்றிருக்கிறது.
2013 ஆம் ஆண்டில், பிசிசிஐயுடன் உரிமையாளர் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் புனே வாரியர்ஸ் இந்தியா ஐபிஎல்லில் இருந்து வெளியேறியது.
மேட்ச் ஃபிக்சிங்க் சர்ச்சையைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இடைநீக்கம் செய்யப்பட்டன. இருப்பினும், ஜூலை 2017 இல், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டும் 2018 சீசனில் இருந்து ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்ததிலிருந்து அவ்வணிகள் போட்டிகளில் ஆடிக்கொண்டிருக்கின்றன.
2022ல் புதியதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அந்த ஆண்டே கப்பையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
டெல்லி டேர் டெவில்ஸ்
என்று ஆரம்பித்த அணி சில ஆண்டுகளுக்கு முன்னம் தனது பெயரை டெல்லி கேப்பிடல்ஸ்
என்று மாற்றிக்கொண்டுள்ளது. பெயர் மாற்றம் அதிர்ஷ்டம் தருகிறதா என்று பார்ப்போம். .
41 மேட்சுகளில் எட்டுக்கு ஆறு மேட்சுகளில் வெற்றி கண்டு முதலிடத்தில் நிற்கிறது
அக்சர் படேலும், கே எல் ராஹுலும் ஒரு லட்சியத்தோடு தான் ஆடிக்கொண்டு வருகிறார்கள். பஞ்சாப், லக்னௌ, குஜராத் அணிகள் களையுடன் ஆடி வருகின்றன.
விராட் கோலி இருந்தும் கடந்த 17 வருடங்களில் கப்பை வெல்ல முடியாது தவிக்கிறது பெங்களூர் அணி.
மும்பை அணி கருப்பு ஆடு.
சென்னை ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் தலையெடுப்பது கஷ்டம் தான். இதில் சென்னை இருப்பதோ கடைசி ரேங்க்கில்.
இன்னும் 30 மேட்சுகளில் அரை இறுதிக்குள் யார் நுழைவார் என்று தெரியும்.
அடுத்த வாரம்.
Leave a comment
Upload