சமந்தா
விவாகரத்துக்கு பிறகு நடிகை சமந்தாவுக்கு சில நடிகர்கள் காதல் தூது அனுப்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் தனித்து வாழ்வே விரும்புகிறேன் என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் சமந்தா.
மாதவன் நயன்தாரா ஜோடி
சமீபத்தில் ஓட்டிட்டியில் வெளியான டெஸ்ட் படத்தில் மாதவன் நயன்தாரா ஜோடிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் இணைந்து நடிக்க இருவரும் முடிவு செய்து இருக்கிறார்கள்.
காதல் நாயகி
மமீதா பைஜூ காதல் நாயகி என்ற பட்டத்தை பெற விரும்புகிறார். தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் மமீதாவுக்கு நிறைய ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறதாம்.
ஸ்ருதி ஹாசன்
ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி, விஜய் நடித்து வரும் ஜனநாயகன், விஜய் சேதுபதியின் டிரெயின் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாரகாமில் பகிர்ந்திருக்கிறார். 24 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ் இருப்பது இவருக்கு மட்டுமே.
பிரியங்கா மோகன்
நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு எடுத்த தனது கிளாமர் படங்களை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்திருக்கிறார். துருக்கி கனவு இப்போதுதான் நினைவாகி இருக்கிறது என்றார். துருக்கியில் பல மாயாஜாலங்கள் உள்ளன. அற்புதமான கடற்கரை என்று துருக்கி புகழ் பாடுகிறார் பிரியங்கா.
Leave a comment
Upload