தொடர்கள்
கவர் ஸ்டோரி
காஷ்மீரில் கோழைத்தனம்

20250325183452807.jpeg

பாரத பூமி தர்மத்தின் தலைகாக்கும் பூமி.

தீவிரவாதத்திற்கு மதமில்லை. உண்மைதான். ஆனால் தீவிரவாதிகளுக்கு மதம் இருப்பது தான் கவலை.

இந்த பூமியில் சத்தியம், தர்மம், தவிர வேறெதுவும் இல்லை.

இராமாயண யுத்தத்தில்...
நிராயுதபாணியாக நிற்கிறான் இராவணன்.
இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். ஆனால் அவனுக்கு அறிவுரை சொல்கிறார்.
அறத்தின் துணை இன்றி வெறும் படை பலத்தால் யாரும் வெல்ல முடியாது என்று பலப் பல அறிவுரைகள் கூறுகிறார்.
கடைசியில், "இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்று போய் போருக்கு நாளை வா" என்றார்...
காரணம் தன் மனைவியையே கவர்ந்து வைத்திருந்தாலும், இராவணன் நிராயுதபாணியாக நிற்கிறான்.
அந்த சத்தியமும் தர்மமும் நிலை நாட்டப்பட்ட பூமியில், சுற்றுலா செல்வதற்காக ஆயுதம் என்ற எண்ணம் கூட இல்லாது சென்ற அப்பாவி மக்களை, இந்துக்களை, கிறிஸ்துவர்களை தீவிரவாதிகள் கொன்றது வீரமா ??
அவர்கள் வீரர்களாக இருந்தால் போரிட வேண்டியது எம் இராணுவத்திடம். அங்கு மோதியிருந்தால் அது வீரம். இது அக்மார்க் கோழைத்தனம்.
அதிலும் ஒரு குதிரை வீரர், இளைஞர், இஸ்லாமியர் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயன்று அவர்களாலேயே கொல்லப்பட்டிருக்கிறார். அவர் அக்மார்க் வீரர்.
மற்றபடி, கொன்றவர்கள் அனைவரும் கோழைகள் மட்டுமே.
இறைவன் (என்ன பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்) அவர்களை மன்னிக்க மாட்டார்.
உறுதி.