தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
விகடகவி சந்திப்பு- புத்தக வெளியீடு.

20250325200605617.jpeg

சென்ற வாரம் விகடகவி எழுத்தாளர் குழுவின் சந்திப்பு நடந்தது.

வழக்கம் போல ஆசிரியர் மதன் தலைமையில் தான்.

வெகு சிலரை மட்டுமே ஆலோசனை செய்ய வேண்டும் என்ற அளவில் கூட்டப்பட்ட இந்த விழாவில் கதாசிரியர்கள் சிலரும் இணைய, அவர்கள் தத்தம் நண்பர்களையும் அழைத்து வர திட்டமிட்டதை விட அதிக கூட்டம் கூடியது இனிமையாகவே முடிந்தது.

விழாவில் விகடகவியில் ஏழு வாரங்கள் தொடராக வந்த கைலாஷ் பயணம். சிவனின் காலடியில் ஒரு ஆன்மீக அனுபவம் என்ற நூல் வெளியிடப்பட்டது.

20250326004139640.jpeg

(விகடகவியின் முதல் வெளியீடு)

ஆசிரியர் மதன் வெளியிட நூலாசிரியரின் மகன் ஷங்கர் ஆயுஷ் அதைப் பெற்றுக் கொண்டார். இதில் ஒரு சிறப்பு விகடகவி பதிப்பகத்தில் வெளி வரும் முதல் நூல். அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு சிறப்பாக கொண்டு வந்தவர் வெங்கடகிருஷ்ணன்.

இந்த விழாவில் இன்னொரு சேர்க்கை விகடகவிக்காக நிதி-நிர்வாகத்தை ஏற்றுக் கொள்வதாக நம்மோடு இணைந்திருக்கும் சதீஷ். அவருடைய வங்கிக் கணக்கு தான் இனி விகடகவியின் கண்க்காக செயல்படும்.

வாசகர்கள் மற்றும் இனி வரும் விளம்பரதாரர்களுக்கு இந்த கணக்கு விபரங்கள் தான் கொடுக்கப்படும்.

சந்தா வாங்கும் எண்ணம் இல்லை. விகடகவி தொடர்ந்து இலவச இதழாகவே நடத்தப்படும். ஆனாலும் நிர்வாக செலவுகளுக்காக இந்த முடிவு. விகடகவியை தொடர்ந்து எடுத்துச் செல்லும் பொறுப்பு ஆசிரியர் குழுவை விட வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டுமே அதிகம்.

போதும் இதற்கு மேல் கணக்கு விஷயங்கள் பேச வேண்டாம்.

திரைப்பட இயக்குனர் என்.குமார் வழக்கம் போல் விகடகவி சந்திப்பில் கலந்து கொண்டு கலகலப்பாக பேசினார். தொடர்ந்து இயக்குனர் பணிகள் அதிகம் இருப்பதால் இனி விகடகவி கூட்டங்களில் பங்கெடுக்க இயலாது என்பதை நாசூக்காகவே சொன்னார். அதெல்லாம் சொல்லட்டும். எத்தனை உச்சாணிக் கொம்பில் இருந்தாலும் வாழ்த்தி அவரை வரவழைத்து விடுமோம்.

அதே போல பித்தன் வெங்ட்ராஜும் கலந்து கொண்டு தன்னுடைய புத்தகத்தை ஆசிரியர் மதனிடம் கொடுத்தார். அந்த புத்தகம் 'தமிழுக்கு ஒரு முத்தம்' விகடகவியில் தொடராக வந்தது பாடப்புத்தகமாகவே பரிந்துரைக்கப்படவிருக்கிறது என்ற நல்ல தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

அது போலவே நம் இதழில் தொடராக தி.குலசேகர் எழுதிய திரைநாயகிகள் புத்தகம் வித்துக்களின் கனா என்ற பெயரில் பிரசுரமாகியிருக்கிறது. அதையும் ஆசிரியர் மதன் பெற்றுக் கொண்டார்.

கே.பி.எஸ். நமது ஒவிய அசுரன் "அரஸ்" ஆயுர்வேத மருத்துவர் கார்த்திக் ராமனாதன், மற்றும் ஓவியர் தேவா, எழுத்தாளர்கள், பத்ரி, ரமணி, ஆனந்த் ஶ்ரீநிவாஸ்,அய்யாசாமி, புனேவிலிருந்து சம்பத், மும்பையிலிருந்து சந்திப்புக்காக பிரத்யேகமாக வந்த பால்கி, புதுவை ரா.ரஜினி, சுற்றுப்புற சூழல் எழுத்தாளர் ஒப்பிலி, கலந்து கொண்டனர். நமது மூத்த பத்திரிகையாளர் ஜாசன் நிகழ்ச்சி முடியுமுன்பே பாவம் பெங்களூருக்கு ரயில் பிடிக்க விரைந்தார்.

விகடகவியின் மற்ற எழுத்தாளர்கள் அனைவரும் சந்திப்பில் கலந்து கொண்டனர். (அத்தனை பெயரும் குறிப்பிடவில்லை)

சுருக்கமான காணொளி இங்கே.....

வீடியோ-முத்ரா

மீண்டும் அடுத்த சந்திப்பு வரை இந்த நினைவுகள் வாரந்தோறும் விகடகவியை மெருகேற்ற பலம் தரும்.