அடி மேல அடி
ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் எல் எஸ் ஜி அணி தலைவர் ரிஷப் பாண்டேவை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள். 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தும் இதுவரை அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார். ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் கூட ஆகியிருக்கிறார். 27 கோடி இவருக்கு அதிகம் தான் என்கிறார்கள்.
வெட்கப்பட்டார் சுப் மன் கில்
குஜராத் அணி கேப்டன் சுப் மன் கில்லை டாஸ் போடும்போது வர்ணனையாளர் டேனியல் மோரிஷன் "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க திருமணம் செய்யும் திட்டமெல்லாம் இருக்கிறதா என்று கேட்க வெட்கப்பட்ட கில் இப்போது அப்படி எதுவும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் பாராட்டிய வீரர்
ஐபிஎல் தொடரில் அதகளம் செய்து வருகிறார். குஜராத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சன் எட்டு போட்டிகளில் விளையாடி ஐந்து அரை சதம் விளாசி ஆரஞ்சு தொப்பியை தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார். சாய் சுதர்சன் அருமையாக விளையாடுவதாக சிவகார்த்திகேயன் பாராட்டியிருக்கிறார். கூடவே அவர் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
Leave a comment
Upload