எண்பதுகளில் நீங்கள் காஷ்மீருக்கு பயணம் சென்றால் அங்கு பாகிஸ்தான் தொலைக்காட்சி தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள் காஷ்மீர் மக்கள். வீட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் படம் இருக்கும். நம்மைப் பார்த்து நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா என்று கேட்பார்கள். இதே கேள்வி என்னிடம் ஒருவர் கேட்டபோது நான் இந்தியாவில் இருந்துதான் வருகிறேன். நீங்களும் இந்தியாவில் தான் இருக்கிறீர்கள் என்று பதில் சொன்னேன். ஆனால் அதை அவசர அவசரமாக அவர் மறுத்து விட்டார். நாங்கள் இந்தியர்கள் இல்லை என்றார் அவர். இதுதான் அப்போதைய உண்மையான காஷ்மீர்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது அவசர அவசரமாக கொடியை ஏற்றி அதே வேகத்தில் கொடிய இறக்கி மடித்து வைத்து விடுவார்கள். தீவிரவாத அமைப்புகள் அவர்களுக்கு தந்த அனுமதி நேரம் அவ்வளவுதான். காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இருந்தார். ஆனால் அவர் முதல்வர் பணியை மத்திய அமைச்சராக அவரது தந்தை பருக் அப்துல்லா டெல்லியில் இருந்த வீட்டில் தங்கி முதல்வர் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அல்லது தீவிரவாதிகளுக்கு இவர்களின் மறைமுக ஆதரவு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் இதுதான் அந்த காலத்து உண்மையான காஷ்மீர்.
இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. காஷ்மீர் கான சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு நீக்கப்பட்ட பிறகு பெரிய அளவு எதிர்ப்பு குரல் எல்லாம் வரவில்லை. அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் பாஜகவை அப்போது விமர்சனம் செய்து பேசியது அவ்வளவுதான். அதன் பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது தீவிரவாதிகள் தேடித்தேடி சுடப்பட்டார்கள். குறிப்பாக அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி பறந்தது. சுதந்திர தினம், குடியரசு தினம் இவையெல்லாம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதெல்லாம் பாஜகவின் சாதனை. சட்டசபை தேர்தல் நடந்தது ஒரு பகுதியில் பாஜக பெரும்பான்மை பெற்றது இன்னொரு பகுதியில் பருக் அப்துல்லா கட்சி வெற்றி பெற்றது. இப்படி அமைதி பகுதியாக காஷ்மீர் மாறியது பொறுக்க முடியாமல் தான் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீண்டும் தங்களது வாலாட்டத்தை தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி 19-ஆம் தேதி காஷ்மீர் வர இருந்தார். உண்மையில் இந்த தாக்குதல் அவருக்கு வைத்த குறி என்ற பேச்சும் உண்டு. உளவுத்துறை இப்போது நிலைமை சரியில்லை என்று பிரதமர் வருகையை தடுத்து நிறுத்தியது. அதனால் தான் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பாரதிய ஜனதாவை பொருத்தவரை இதை நம் நாட்டின் கௌரவ பிரச்சனையாக பார்க்கத் தொடங்கி இருக்கிறது. இதற்கான விலையை பாகிஸ்தான் நிச்சயம் தந்து தான் ஆக வேண்டும் விடமாட்டார் மோடி.
Leave a comment
Upload