பொது மேடையில் எப்போதும் ஹிந்தியில் பேசும் பிரதமர் மோடி நேற்றைய முன் தினம் பீகார் நல திட்ட விழாவில் பஹல் காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசும் போது ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். பஹல் காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை தேடி கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம் .எந்த ஒரு தீவிரவாதியும் தப்ப முடியாது. பூமியின் கடைசி வரை அவர்களை துரத்துவோம். தீவிரவாதிகளிடம் மீதமிருக்கும் நிலத்தை அழிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. அவர் நிலம் என்று குறிப்பிட்டது பாகிஸ்தானை தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
உடனடி நடவடிக்கையாக ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சவை கூட்டம் ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் அமித்ஷா ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் தான் அந்த ஐந்து முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி.
1. எல்லை தாண்டி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பாகிஸ்தான் விவசாயிகள் சிந்து நதியை நம்பித்தான் இருக்கிறார்கள்.
2. இந்தியா பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள வாகா எல்லையில் அட்டாரி ஒருங்கிணைந்த சோதனை சாவடி உடனடியாக மூடப்படும். இந்த வழியாக உரிய ஒப்புதலுடன் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் மே முதல் தேதிக்குள் உடனடியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும். அவர்களுக்கு தரப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.
3. சார்க் விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்காக பயணிக்க இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலத்தில்வழங்கப்பட்ட SVES விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள எல்லா பாகிஸ்தானியர்களும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்.
4. டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும். அதேபோல் இந்தியாவும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து தனது பாதுகாப்பு, கடற்படை விமான ஆலோசகர்களை திரும்ப பெற உள்ளது
5. மே 1-ஆம் தேதிக்குள் பாகிஸ்தானின் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆக குறைக்கப்படும்.
இந்த ஐந்து முடிவுகளுமே பாகிஸ்தானை அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது. குறிப்பாக சிந்து நதி தண்ணீர் கிடையாது என்ற அறிவிப்பு பாகிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பதிலுக்கு பாகிஸ்தானும் எல்லை மூடல் விசா ரத்து என்று இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் கூடவே எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை உஷார் படுத்தியிருக்கிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்ற பயம் தான். அதே சமயம் இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு பெரிய அளவு ஆதரவு குரல் வரவில்லை என்பதும் பாகிஸ்தானுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தீவிரவாதிகளின் மீதான முதல் கட்ட நடவடிக்கையாக இந்த தாக்குதலில் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாதிகள் வீட்டை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் தொடர்புடைய அடில் ஷேக் என்பவரின் வீட்டை இந்திய ராணுவம் சுக்கு நூறக்கி விட்டது. மேலும் உள்ளூர் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் தேடுகிறது.
பாகிஸ்தான் மீது இந்தியாவில் போர் நடவடிக்கை இரண்டு வழியில் இருக்கும் என்கிறார்கள். அதில் முதல் வழி எல்லையை கடந்து தாக்குவது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவது.
இதன் மூலம் காஷ்மீரை முழுமையாக நமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் இரண்டாவது வழி நவீன ஏவுகணை மூலம் துல்லிய தாக்குதல். இப்போதைக்கு ஏவுகணை தாக்குதல் தான் சரியான நடவடிக்கை என்று ராணுவ தளபதிகள் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்களாம்.
இதற்கு காரணம் பாகிஸ்தானிடம் ஏவுகணை அழிப்பு தளவாடங்கள் போதிய அளவு இல்லை. இது நமக்கு சாதகம்.
நம்மிடம் உள்ள அதிநவீன சூப்பர் சோனி ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் திணறிப் போய்விடும்.
நாம் பிரமோஸ் ஏவுகனையும் பயன்படுத்தலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் ராணுவ அதிகாரிகள்.
Leave a comment
Upload