கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அமைத்துள்ள நகரம் தான் சுல்தான் பத்தேரி .
திப்பு சுல்தான் ஒரு கோட்டையை கட்டியதால் தான் சுல்தான் பத்தேரி என்று அழைக்கப்பட்டுவருகிறது .
இந்த நகர் ஒரு ஹாப்பி பத்தேரி என்று அழைக்கப்படுகிறது .
ஏன் இந்த பெயர் என்று யோசிக்க வைத்து பத்தேரிக்கு ஒரு விசிட் சென்றோம் .
ஊட்டியில் இருந்து மூன்று மணிநேர பயணத்திற்கு பின் சுல்தான் பத்தேரியை அடைந்தோம் முதலில் நம்மை வரவேற்றது பிரமாண்ட தேவாலயம்
மிக அழகாகவும் பளிச் என்று சுத்தமாக இருந்தது .
பத்தேரி நகரை நெருங்க இது என்ன கேரளாவில் உள்ள ஒரு நகரா ? என்று யோசிக்க வைத்தது .
நகர் முழுவதும் ஒரு வலம் வர அவ்வளவு சுத்தம் எங்குமே குப்பையை பார்க்க முடியவில்லை .
சாலை ஓரத்தில் இருபக்கமும் நடைபாதை அதில் உள்ள தடுப்பு முழுவதும் பூச்செடி தொட்டிகள் தொங்கி கொண்டிருக்கின்றன .
எங்குமே பேப்பர்களோ பிளாஸ்டிக் குப்பை பார்க்கமுடியவில்லை .
எல்லா வணிக நிறுவனங்களுக்கு முன் டஸ்ட் பின் வைக்க பட்டிருக்கிறது .
ஒரு கால் நடைகள் கூட நகரில் பார்க்க முடியவில்லை .
பிச்சைகாரர்கள் மிஸ்ஸிங் .
கோயில் அருகில் மட்டும் ஒரு சிலரை பார்க்க முடிந்தது .
எங்குமே குப்பை வழிந்துகொண்டும் சிதறிக்கொண்டும் , தூர்நாற்றம் வீசிக்கொண்டு இருப்பதை பார்க்கவே முடியவில்லை .
உள்ளூர் வாசிகளை சந்தித்து பேசினோம் ,
விக்காஸ் கூறும்போது ,
" எங்க ஊர் மிக சுத்தமாக இருப்பதற்கு காரணம் முனிசிபல் ஆபிஸ் அதிகாரிகளும் ஊழியர்களும் தான் .
2015 ஆம் வருடம் இருந்த நகர மன்ற தலைவர் சகாதேவன் தான் சுல்தான் பத்தேரியை க்ளீன் சிட்டியாக மாற்றினார் .
தற்போதுள்ள சேர்மன் இன்னும் சூப்பராக மாற்றிக்கொண்டிருக்கிறார் ".
நம்மை பார்த்து ஹல்லோ சொன்ன இந்து
" பத்தேரி கிளீனாக இருப்பதற்கு முக்கிய காரணம் எங்க ஊர் மக்கள் தான் .நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் .எங்க ஊர் இந்தியாவின் கிளீன் சிட்டி ".
" சுல்தான் பத்தேரி மிகவும் அழகாக இருப்பதற்கு எங்க நகராட்சி தான் காரணம் .எங்கு பார்தாலும் பூச்சட்டிகள் .
நகரின் மெயின் ஜுங்க்ஷனில் பூ மரம் சூப்பர் இது தான் ஹாப்பி பத்தரிப் நாங்கள் எங்க வீடு போல நகரை கிளீனாக வைத்து கொள்கிறோம்". என்கிறார் நௌபில் .
ஞாயிறு மறைக்கல்வி டீச்சர் ஹரிதா கூறுகிறார் ,
"சுத்தம் தான் எங்களின் முக்கிய வேலை .எங்க குழந்தைகளையும் நன்றாக ட்ரெயின் செய்துள்ளோம் வீட்டிலும் சரி ரோட்டிலும் சரி பள்ளிகளிலும் சரி குப்பை போடுவதை தவிர்த்துவிட்டோம் குழந்தைகள் பேப்பரை கிழிக்க மாட்டார்கள் மிட்டாய் பேப்பரை பாக்கெட்டில் போட்டு டஸ்ட் பின்னில் போடுவது பழகிப்போய்விட்டது .
எங்க நகராட்சியின் தூய்மை பணியாளர்களான கர்ண சேனா குழு இரவு மூன்று மணிக்கு நகரை சுத்தம் செய்கின்றனர் நாங்க தினமும் ஹாப்பி தான் ".
" நகரிலும் சரி எல்லா குடியிருப்பு தெருக்களிலும் குப்பையும் இல்லை கழிவு தண்ணீர் எதுவுமே இல்லாமல் நீட்டாக இருக்கிறது நகராட்சியின் தொடர் வேலைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு தருவதால் பத்தேரி ஹாப்பி சிட்டி ". என்கிறார் வின்சென்ட் வட்ட பரம்பில் .
பிரதர் இம்மானுவேல் கூறும்போது ,
"கோயில்கள் , மசூதிகள் , தேவாலயங்களிலும் நகராட்சியின் கிளீன் கேம்பைனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் பத்தேரியும் ஹாப்பி நாங்களும் ஹாப்பி ".
சுல்தான் பத்தேரி நகராட்சி தலைவர் ரமேஷை அவரின் அலுவலகத்தில் சந்தித்தோம் ,
" சுல்தான் பத்தேரி நகராட்சி 2015 முதல் ஒரு புதிய பாதையை உருவாக்கியது என்றே கூறலாம் .அன்றைய நகர மன்ற தலைவர் சகாதேவன் தான் ' clean city flower city' என்று துவங்கினார் .அதன் வளர்ச்சியாக 2020 ஆம் வருடம் முதல் clean city flower city' என்பது ஹாப்பி பத்தேரி யாக மாறியது .
முழுமையாக எங்க நகராட்சி ஊழியர்கள் இந்த சுத்தம் பேணிக்காப்பதில் முழு மூச்சாக அர்ப்பணித்து செய்து வருகின்றனர் .
அதிகாலை 2 மணிக்கு துவங்கும் கிளீனிங் வொர்க் அதிகாலை 4 மணிக்கெல்லாம் சூப்பராக கிளீன் செய்துவிடுகிறார்கள் இது தினமும் நடந்து வருகிறது .
பான் பராக் மென்று துப்பினால் 500 ரூபாய் அபராதம் ஒருவர் கூட தற்போது அந்த வேலையை செய்வதில்லை .
பகலில் ஒரு டீம் மூன்று முறை கிளீன் செய்கிறர்கள்
வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து அதை பிரித்து மறு சுழட்சிக்கு அனுப்பிவைக்கிறோம் .
நகர் முழுவதும் சாலையில் இரு பக்கத்தில் உள்ள நடை பாதையில் ஆயிரம் பூச்சட்டிகள் வைத்து நகராட்சி ஊழியர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார்கள் .
எங்க ஊரில் தினமும் மலர்காட்சி தான் .
எங்க பத்தேரி நகராட்சியில் பிச்சைக்காரர்கள் சும்மா பிச்சை எடுத்து அலைய முடியாது .
அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம் அதற்கு ஏற்றார் போல சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அமர்ந்து பிச்சை எடுத்து கொள்ளலாம் பொது மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் .
எதிர் காலத்தில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகராக மாறும் .
மற்ற ஒரு விஷயம் எங்க நகராட்சி பசி இல்லாத நகராட்சி ...
அறுபது வயது கடந்த அனைவரும் எங்க நகராட்சி அலுவலகத்தினுள் உள்ள சிற்றுண்டி சாலையில் தினமும் வந்து ஒரு கடி மற்றும் காபி இலவசமாக உண்டு செல்லலாம் .
பொது கழிபீடமெல்லாம் சுத்தமாக இருக்கிறது .அங்கு பொதுமக்களின் பரிந்துரை மற்றும் அறிவுரை புத்தகம் வைக்கப்பட்டுள்ளது .
வாரத்தில் ஒரு நாள் அதை போய் படித்து தக்க சுத்தம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் .
எந்த சாலையிலும் கால்நடைகளின் நடமாட்டம் இல்லை .சாக்கடை அடைத்து நீர் வெளியேற்றத்திற்கு இடமில்லை .
நகராட்சியின் 35 வார்டுகளும் பளிச் தான் . மாவட்ட நிர்வாகம் , போலீஸ் ஒத்துழைப்புடன் போக்குவரத்து சட்டம் ஒழுங்கும் கிளீன் தான் எங்க பத்தேரியில் !.
மிக விரைவில் பிளாஸ்டிக் தடை , கழிவு சுத்திகரிப்பு ஆலைகள் வரப்போகின்றன .
கேரளா அரசின் ஏகப்பட்ட விருதுகள் குவிந்துள்ளன .
இந்தியாவே திரும்பி பார்க்கும் ஆச்சிரியமான நகராட்சி எங்க ஹாப்பி பத்தேரி .
இங்கு வந்து போகிறவர்களும் ரொம்பவே ஹாப்பி தான் என்கிறார் சேர்மன் ரமேஷ் கூலாக ...
அழகான சுல்தான் பத்தேரியை பார்த்து ரசித்து ஆச்சிரியப்பட்டு ஊட்டி திரும்பினோம்
ஊட்டியின் குண்டும் குழியும் சாலைகள் கழிவு நீர் ஓடைகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை பார்த்து தலைகுனிந்து நின்றோம் ...
Leave a comment
Upload