தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் துளிகள்-ஜாசன்

20250402192239304.jpeg

சூர்யகுமார் சாதனை

மும்பை இந்திய அணி வீரர் சூர்யகுமார் தொடர்ந்து 11 முறை 25க்கும் அதிகமான ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை இந்த ஐபிஎல் தொடரில் நிகழ்த்தி இருக்கிறார்.

முதல் இடத்தில் மும்பை அணி

மும்பை அணி ஆரம்பத்தில் முதலில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடுத்து ஒரு வெற்றி அதன் பிறகு இரண்டு தொடர் தோல்வி என்று இருந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு ஆறு போட்டியில் தொடர் வெற்றி பெற்று எப்படியும் இந்த முறை வெற்றி கோப்பை நமக்குத்தான் என்ற முடிவோடு இருக்கிறது.

ரோஹித் சாதனை

மும்பை அணிக்காக 6 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை ரோஹித் சாதித்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் தற்சமயம் ரோஹித் உள்ளார்.

வித்தியாசமான அறிவிப்பு

இந்த வாரம் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு ஆக்கபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒவ்வொரு சிக்ஸருக்கும் ஆறு வீடுகளில் சூரிய பேனல் மூலம் மின்சார இணைப்பு தர போவதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அடித்தள மக்களுக்கு உதவலாம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள் ராஜஸ்தான் ராயல் அணியினர்.

இதுவே முதல் முறை

ஐ பி எல் தொடரில் இதுவரை விளையாடிய 16 ஆண்டுகளில் தொடர்ந்து ரெண்டு முறை பிளே ஆப்க்கு தகுதி பெறாமல் சி எஸ் கே அணி வெளியேறுவது இதுவே முதல் முறை. அதேபோல் தொடர்ந்து நான்கு போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் தோற்றுப் போவதும் இதுவே முதல் முறை.