தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் 18 : வாரம் 6 – பால்கி

2025040223513806.jpg

ஒரு வார காலம் கடந்தும் அந்த அரை இறுதி அணிகள் நான்கு பேர் யார் யார் என்று இன்னும் தெரியவில்லை.

ஆனால் இந்த ப்ளேய் ஆஃப் போட்டிகளில் தகுதி இல்லை என்ற முடிவான முதல்அணி சென்னை. 18 வருட ஐபிஎல்லின் வரலாற்றில் ஒரு வேதனையான சரித்திரம். எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன் என்ற நிலை தான் அது. காரணங்கள் பற்றி நான் இரண்டு வாரங்களுக்கு முன்னேயே எழுதிவிட்டேன். மாற்றம் ஒன்றே ஒரு மருந்து. அதை அந்த அணியின் நிர்வாகம் துணிந்து ஏற்றுக் கொள்ள முனையவேண்டும். 17 வருட சரித்திரத்தில் 10 முறை இறுதிக்குள் நுழைந்த அணி & ஐந்து முறை கோப்பையை வென்ற அணி. இந்த அணி தான் T20ன்சாம்பியன்ஸ் லீக் ஐ வென்றும் இருக்கிறது. இந்த அணியில் தான் கோச்சும் தலயும் அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருப்பவை. மாறி வரும், இன்றைய இளம் வயதினர் ஓவருக்கு 10 ரன்கள் என ஆவரேஜ் படு ஈசியா எடுக்கும் போது இந்த தொடரில் ஒரு முறை மட்டுமே அந்த 200 இலக்கைத் தாண்டியுள்ளனர். இருந்தும் வெற்றி அவர்களுக்கு வாய்க்கவில்லை.

20250402235249356.png

2026 தொடர் பற்றித் தான் அந்த குகையில் இப்போது பேச்சு.

முடியைத் தொட்ட அணி அடியையும் தொட்டுவிட்டது.

20250402235405861.jpg

தோனி, ஜடேஜா விலகுவார்கள். பெரிய தொகை ஆட்டக்காரர்கள் விடுவிக்கப்படலாம். ஏன் அஸ்வின் கூட அந்த லிஸ்ட்டில் இருக்கலாம். ஏழு மேட்ச்களில் வெறும் ஐந்தே விக்கெட்டுகள் தான். சராசரி வயதே 35 க்கு கிட்ட இருப்பது நல்லதல்ல ஒரு அணிக்கு.

20250402235613228.jpg

ஒவ்வொரு வாரமும் சென்னை அணியை எழுதாமல் இருக்க முடிவதில்லை. ஆனால் என்ன, அணியின் வீழ்ச்சியை விளக்குவது போலேயே அமைந்துவிடுகிறது.

20250402235449152.png

ராஜஸ்தான் கூட சென்னை அணி கூட ப்ளே ஆஃப் தொகுதியிலிருந்து வெளியேறிவிட்டது. இப்படி சரியாக ஆடாமலேயே வெளியேறியது ஒரு பக்கம் இருக்க, கொல்கத்தாவும் ஹைதராபாத்தும் அந்த திசையில் தான் இருக்கிறார்கள். ஆக மீதமுள்ள ஆறில் மும்பையும் பெங்களூரும் அடுத்த தொகுதிக்கு தகுதி பெற நிறைய வாய்ப்புள்ளது.

பஞ்சாப், குஜராத், டெல்லி லக்னௌ அணிகளில் யார் அந்த இருவர் என வரும் வாரத்தில் கடுமையான போட்டி இருக்கும். ஏதாவது ஏடா கூடமாக நடந்து ஒதுக்கப்பட்ட கொல்கத்தா, ஹைதராபாத் கருங்குதிரைகளாக வர அதோ அந்த தூரத்தில் தெரிகிறது.

இந்த வாரத்தில் தொடரின் கொல்கத்தா Vs பஞ்சாப் அணிகளுக்கிடையேயான 44 ஆவது மேட்ச் மழை வந்து நின்று போன மேட்ச் ஆனது.

தொடரின் 47ஆவது மேட்ச் ராஜஸ்தான் Vs குஜராத். அந்த மேட்சின் ஹைலைட் பற்றி தனியாகவே “ஸூர்யவண்ஷியின் வைபவம்” என்று தனியாகவே கட்டுரை அமைந்துள்ளது. அப்படிப்பட்ட சாகசம், தனி ஆவர்தனம் அமைத்து அதற்குண்டான கௌரவம் தரவேண்டாமா என்ன?

இந்த வார முடிவில்

18 விக்கெட்டுகளை பெற்றிருக்கும் பெங்களூருவின் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பர்ப்ள் கேப்.

மும்பை இண்டியன்ஸின் சூர்யகுமார் யாதவ் 475 ரன்கள் குவித்ததால் ஆரஞ்ச் கேப்பை ரோஹித் ஷர்மா அணிவித்து கொண்டாடினார். மனுஷனின் ஸ்ட்ரைக் ரேட் 172.

தொடருவோம் அடுத்த வாரமும்.