தொடர்கள்
கதை
அர்தாங்கினி - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20250403094416545.png

காவல் துறையில் போலீஸ் கான்ஸ்டபிளாக: நுழைந்து, ஏட்டு, சப் இன்ஸ்பெக்டர் அப்புறம் இன்ஸ்பெக்டர் ஆக வேலைப்பார்த்து அப்படி இப்படி என்று சம்பாதித்த பணம் கிட்ட தட்ட ஒரு கோடி வரை இருந்தது ராஜசேகரக்கு .

நல்ல வேளை எந்த பிரச்சனையும் இல்லாமல் நாளை காவல் துறையிலிருந்து ஓய்வு பெற போகிறார் ராஜசேகர்.

கிடைத்த ஓய்வு தொகை அத்துடன் இது வரை கிடைத்த கிம்பளம் எல்லாவற்றையும் வங்கியில் டெபாசிட் செய்ய நினைத்தார்.

75 லட்சத்தை நிலையான வைப்பு தொகையில் முதலீடு செய்து தன் மனைவி ராதாவை நாமினியாக தெரிவு செய்து இருந்தார்.

மீதி உள்ள தொகையை வைத்து

சேமிப்புக் கணக்கு துவங்கிய போது, ராதா சொன்னாள்” ஏங்க நம் இருவரின் பெயர்களில் ஒரு கூட்டுக் கணக்காக இருந்தால் நல்லதுன்னு பக்கத்து வாத்தியார் சொன்னாரு.நம்ம இரண்டு பேர்ல ஜாயின் அக்கவுண்டில். பணத்தை பிடுங்க இருவரில் ஒருவர் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று.

வெகுளி அதே சமயம் அதிகம் படிக்காத ராதாவின் ஐடியா சரியாக தோன்றவே அப்படியே கூட்டுக் கணக்கு துவங்கப்பட்டது.

ஒரு வாரத்தில்

ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பர் உட்பட அனைத்து கணக்கு விவரங்களையும்

ராதாவுக்கு ஒரு முறைக்கு இரு முறை சொல்லிக்கொடுத்தார்.

“அதே சமயம் நான் இல்லாத சமயம் போனை எடுத்து இதை லிங்க் பண்ணு, OTP சொல்லுங்க என்றால் பேசாமல் இரு. எந்த லிங்கையாவது கிளிக் பண்ணி இல்லை OTP சொன்னா அவ்வளவு தான் ஒட்டு மொத்த பணமும் போயிடும். ஜாக்கிரதை என்று எச்சரிக்கையும் செய்திருந்தார்.

“சரி சரி” என்று தலையை ஆட்டினாள் ராதா.

அன்று கிராமத்தில் தன் நிலத்தை விற்பதற்காக இரயில்வே ஸ்டேஷன் வந்தவருக்கு ,தன் மொபைலை கையில் கொண்டு வரவில்லை என்பதும், மொபைலை கிளம்பும் போது வீட்டில் வைத்து விட்டதும் ஞாபகத்துக்கு வரவே, நாலு நாளைக்கு மொபைல் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது, கிராமத்துக்கு இன்னொரு நாள் போய் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து அவசர அவரசரமாக வீடு திரும்பினார்.

“.என்னங்க உங்க போனை வைச்சுட்டு போயிட்டிங்க”

இன்னொரு விஷயம் நான் சொல்ல மறந்துட்டேன் உற்சாகமாக, அவரது மனைவி ராதா பதிலளித்தார்,

“என்ன ?

", வங்கியில் இருந்து ஒரு அழைப்பு வந்தது !"

:”நாங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கை பிரீமியம் கணக்கிற்கு மேம்படுத்தினால், உங்களுக்கு 2% அதிக வட்டி கிடைக்கும் .

இது சம்பந்தமா ஒங்களுக்கு OTP (கடவுச்சொல்) கேட்டு வரும்.உடனே சொல்லுங்கள் என்று அவர்கள் சொன்னார்கள் ..."

ராஜசேகரன் இதய துடிப்பு உயர்ந்தது. பீதியடைந்த குரலில் கேட்டார்,

"நீ அவர்களுக்கு OTP கொடுத்தீயா?

“ஆமாங்க”

ஐய்யோ போச்சு மொத்த பணமும் இந்நேரம் போயே போய்ருக்கும்…

“என்னங்க … சொல்றீங்க இது வங்கியில் இருந்து வந்த அழைப்பு, தானே அதிலும் 2% வட்டி கூட வரும் என்று சொல்லும் போது ? நான் எப்படி OTP சொல்லாமல் இருக்க முடியும்?"

அவர் சோபா மீது சரிந்தார்,

உடம்பில் வியர்வை மிகுந்து படபடப்பாக காணப்பட்டார்.....

“உனக்கு நிறைய தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டயே.ராதா?

ஏன் ராதா "நீ அவர்களுக்கு OTP எப்படி கொடுத்த?"

ஒரு அப்பாவி மற்றும் நம்பிக்கையான தோற்றத்துடன், ராதா சொல்ல ஆரம்பித்தாள்.,

" மெஸேஜில் வந்த OTP எண் 2244.

எனக்கு சட்டென ஒரு யோசனைத் தோன்றியது. இது நீங்களும் நானும் துவங்கிய ஆனால் ஒரு கூட்டுக் கணக்கு . அதற்கு வந்த , OTP - எண் 2244 அதில் பாதி 1122 தானே .எனவே என் பங்கை மட்டுமே கொடுத்தேன்."

ராதாவின் செயலையும் பேச்சையும் கண்டு அழுவதா சிரிப்பதா புரியவில்லை.

அவர் உடனடியாக தனது தொலைபேசியை எடுத்து கணக்கைச் சரிபார்த்தார்.

சரிபார்த்த பிறகு, அவர் நெற்றியில் இருந்து வியர்வையைத் துடைத்தார். ...

அவரது ஆச்சரியத்திற்கும் மகிழ்ச்சிக்கும், பரிசாக. கணக்கில் முழுத் தொகை இன்னும் பாதுகாப்பாக இருந்தது.

அவள் செய்கை பைத்தியக்கார தனமாக இருந்தாலும் த்ன்பணம் காப்பாற்றப்பட்டது கண்டு நெற்றியில். முத்தமிட்டு அவளை. ராதாவுக்கு ஒன்றும் புரியாமல் இருந்தாள்.

மனைவி என்பவள் அர்த்தாங்கினி (அதாவது சரி பாதி) என்று பொருள்.

சந்தேகமேயில்லை.