தொடர்கள்
அழகு
சீனாவில் ரோபோட்டுகள் ஓடிய அரை மராத்தான் - மாலா ஶ்ரீ

20250403095129886.jpeg

சீன நாட்டின் தலைநகர் பீஜிங்கில் அரைமாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதன்முறையாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தயாரான 21 மனித உருவ ரோபோக்களும் பங்கேற்றன. இவை அனைத்தும் வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் இருந்தன. இவற்றில் ஒருசில ரோபோக்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டாலும், பெரும்பாலான மனித வடிவிலான ரோபோக்கள் வேகமாக ஓடின. இது, பார்வையாளர்களிடம் புதுவித அனுபவத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

ரோபோக்களுக்கான தனிப்பாதையில், அவற்றுக்கு பேட்டரிகளை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இப்போட்டியில், எத்தியோப்பியாவை சேர்ந்த வீரர் எலியாஸ் டெஸ்டா 1 மணி, 2 நிமிடங்களில் ஓடி முதலிடம் பிடித்துள்ளார்.

20250403095150692.jpeg

இதில் மனித உருவ வடிவிலான ரோபோக்களில், டியான்காங் அணியை சேர்ந்த டியான்காங் அல்ட்ரா ரோபோ 2 மணி, 40 நிமிடங்களில் ஓடி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற ரோபோக்களின் வேகத்துக்கு மட்டுமின்றி, சிறந்த நடை வடிவமைப்பு, புதுமை வடிவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

அதெல்லாம் சரி ரோபோக்களுக்கும் மெடல் உண்டோ ???