கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரகத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனி வரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
இளைய பெரியவா ஸ்ரீ ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
சென்ற வாரம் நமது விகடகவி இதழின் முகப்பை மட்டுமல்ல ஸநாதனைகள் அனைவரின் இல்லத்தையும் உள்ளத்தையும் அலங்கரித்தார் இளைய பெரியவா. உலகமே கொண்டாடிய வாரம் .
ஸ்ரீ ஆதி சங்கரர் , ஸ்ரீ மகா பெரியவா மறு அவதாரமாக நமக்கு கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சியான தருணம். கஞ்சி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்களுக்கு குரு கிடைத்தத்தில் பேரானந்தத்தில் உள்ளனர்.
சாந்தமாக, பவ்யமாக , சிஷ்யனாக, குருவாக திடீரென எப்படி மாரு ஜென்மம் நம் கண் முன்னே எடுக்க முடியும் என்ற கேள்விக்கு விடையாக அக்ஷய திதி நன்னாளில் நமக்கு கிடைத்தார் இளைய பெரியவா ஸ்ரீ ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி.
இந்த வரம் அவரின் சில தரிசனங்கள் உங்களுக்காக
Leave a comment
Upload