ஏங்க, நான் இங்கே செளகரியாமாக வந்து சேர்ந்துட்டேன்,என சித்ரா போன் செய்தாள் தன்கணவர் தில்லைக்கு,
நீங்கள் கவலைப்படாமல் இருங்கள், வேளா வேளைக்கு மருந்துசாப்பிடுங்கள், சாப்பாடு டிபன் அந்த மாமிகிட்டே செல்லியிருக்கேன், சாதம் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் எனும் அறிவுரை, இதோடு பத்து தடவைக்குமேல் சொல்லியிருப்பாள்.
தில்லை,பணியிலிருந்து ஓய்வுப்பெற்று ஆறுமாதமாகிறது. சித்ரா அமெரிக்காவில் இருக்கும் ஒரே மகள் பிரசவத்தின் உதவிக்காக சென்று இருக்கிறாள். முதன் முறையாக வானூர்தி பயணம் மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகளில் கணவரை பிரிந்து எங்கும் சித்ரா சென்றதில்லை.
காலம், சில நேரங்களில் இப்படியான முடிவுகளை பலசெய்திகளை, செயல்களை நடக்கவேண்டி அது செயல்படுத்திக் காட்டும்.
நான் பார்த்துக்கிறேன், நீ போன இடத்திலே தைரியமாக இருந்து மகளுக்கு வேண்டியதை செய்துகொடு என அன்பால் அடக்கினார்.
விசாலம்மாமிக்கு அதே தெருவில் இரண்டு வீடுகள் தள்ளிதான் அவள் வீடு, கணவரைஇழந்தவர், பட்சணங்கள் ஆர்டரின் பேரில் நன்றாக செய்து கொடுப்பார், ஆகையால் சித்ரா இவருக்கு குழம்பு ரசம், பொறியல், இரவுடிபன் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தாள்.
ஒருமாதம் கடந்திருந்தது, மாமிக்கு கொடுக்க பணம் எடுத்து வைத்து இருந்தார், தினமும் நாள் தவறாமல் கொடுத்து அனுப்பிய மாமியிடமிருந்து அன்று சாப்பாடு வராமல்போக, என்னவென்று பார்க்க அவர் வீட்டிற்கேபோனார்.
அங்கே படுத்தபடி இருந்த மாமி, கீழே விழுந்துட்டேன் சார், மெதுவா நடந்துவந்து இங்கே படுத்துட்டேன், அப்புறம் என்னாச்சு எனத் தெரியலை, என்னாலே எழுந்துக்கொள்ள முடியலை யாரையும் கூப்பிடக்கூடமுடியாத நிலை, போன் கூடஅடுப்படியிலே அடிச்சுண்டேஇருக்கு எடுக்க கூட எழ முடியலை என வலிபொறுக்க முடியாமல் கண்ணீர் வழியஅழுதுக்கொண்டே சொன்னவளைப் பரிதாபமாகப் பார்த்தார் தில்லை,
மாமி நான் ஆட்டோ எடுத்துகிட்டு வருகிறேன், டாக்டர்கிட்டே காண்பித்துவிடலாம் என்றார்.எழுந்து நிற்கவோ, நடக்கவோ, தூக்கவும், முடியாமல் ஆட்டோவில் ஏறும் முயற்சி தோல்வியடைந்தது.
பின் ஆம்புலன்ஸில் அழைத்துபோய் எலும்புமுறிவு சிகிச்சை மருத்துவரிடம் காண்பித்ததில், இனி மாமி நடக்க வாய்ப்பில்லை, அந்தமாதிரி அடிபட்டு இருப்பதுடன், இடுப்பில் எலும்புகள் நொறுங்கி உள்ளது, நீண்டநாள் பயிற்சி எடுத்தால் எழுந்து உட்காரலாம், நடக்கமுடியாது எனக்கூறிஅட்மிட் செய்தனர்.
ஒருவாரம் கடந்தது, கூடவே இருந்து கவனித்து, உணவகத்தில் இருந்து சாப்பாட்டை வாங்கிகொடுத்து, தானும்சாப்பிட்டதில் உங்களுக்கு உதவிச் செய்ய சொல்லிச் சென்றார் உங்கள் மனைவி ஆனால் எனக்கும் சேர்த்து நீங்கள் செய்யும்படி ஆய்டுத்தே என வர்ந்தினால் மாமி.
மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றார் தில்லை.
, சித்ராவிடம் இதையெல்லாம் கூறினால்அவளும் கவலைப்படுவாள், என மறைத்து தனித்து இரவெல்லாம் தூக்கம்வராமல் யோசித்து போது இரவு தீர்க்கமான முடிவை எடுத்தார் தில்லை.
ஆம், அதுதான் சரியானதீர்வாக இருக்கும், நாமே ஏன்அதை செய்யக்கூடாது என்ற யோசனை வலுத்தது,
என்ன ? பணம்செலவாகும், ஆகட்டுமே, நம்மிடம் உள்ளதைக் கொண்டுசெய்வோம், ஓய்வூதியம்வருகிறது, நம்மைப் போல்அனைவருக்குமான ஒருதீர்வாக இருக்கட்டுமே என யோசித்தவர்,
அங்கு நர்ஸிங் பணியில் இருந்தவரை அனுகி் என்ன சம்பளம் தருகிறார்கள் என்று விசாரித்தார், மாதம் ஆறாயிரம் என்றதும், அதையே நான் தருகிறேன், தங்கும் இடத்தோடு என்ற தில்லைதன் திட்டத்தை கூறினார்.
நர்ஸும் சந்தோஷமாக, நானும் கணவனால் கைவிடப்பட்டவள்தான்,
நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதீர்கள் என தில்லைக்கு தைரியம் கொடுத்தாள். உணவகத்திற்குச் சென்றவர், அங்கே சமையல் பணியில் இருந்த பழக்கமான நண்பர் ஒருவரை அனுகி தனது திட்டத்தைக்கூற அதற்கென்ன? நான் வந்து சமைத்து தருகிறேன் என்றார்.
இப்படியாக மாமிவீட்டில், மாமியும்,நர்ஸும், தங்கிட,
இவர் வீட்டில் மேலும் நான்கு கட்டில்கள் வாங்கிப்போட்டு நாளிதழில் விளம்பரம் செய்தார்
உடலுக்கு முடியாமலும், ஆதரவு இல்லாமல் இருப்பவர்களும் எங்களை அனுகலாம் என்றதும் மேலும் இருவர் வந்துசேர, அவரது இல்லத்தில் சமைத்து, மாமிக்கும்,மற்றவர்களுக்கும் வழங்கி ஆரம்பித்த அந்த சேவையானது, சித்ரா இந்தியாவிற்கு வந்த பின், மாமி படுக்கை நோய்வந்து காலமாகிட, அவரின் வீட்டையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்துவிட்டு சென்றதால், இரண்டு வீட்டையும் சேர்த்து இன்று இருபது பேருக்கு மேல் தங்கி இருக்கின்றனர்,
தில்லையின் இந்தசேவைக்கு அவரது மனைவி சித்ராவும் உறுதுனையாக இருப்பது போல, அந்தநர்ஸும், சமையல்காரரும் இன்றுவரை இருந்து தங்கள் பணிகளை எந்த பிரதிபலனும் பாராமல் செய்துக் கொண்டிருக்கின்றனர்.
இரக்கமுள்ள மனம் இருந்தால்போதும், தேவையானபணம் தானேவந்து சேரும்,
குளத்துநீர், வான்மழை,பழுத்தமரம் இவையெல்லாம் பிரதிபலன் பாராமல் உதவுகிறதோ, அதுபோல ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள், வறுமை நிலை அடையமாட்டார்கள், அப்படியே அடைந்தாலும் அதை பெருமையாகவே கருதி குறள் வழி வாழ்வார்கள் என்பதற்கு இந்த கதையும் ஒரு சாட்சி.
Leave a comment
Upload