ஊட்டி குன்னூர் கோத்தகிரி நகர பகுதிகளில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் சர்வ சாதாரணமாகிவிட்டது !.
ஊட்டி நகரின் அருகில் மைசூர் சாலையில் உள்ள இந்து நகரில இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை .
அந்த தொழிற்சாலை மூடப்பட்ட வருடங்கள் ஓடிவிட்டன .
அந்த வளாகம் தற்போது காட்டு விலங்குகளின் ஹாஸ்டலாக மாறியுள்ளது .
சிறுத்தை , செந்நாய்கூட்டம் ,கடா மான் , புலி , கரடி என்று அனைத்தும் செட்டிலாகியுள்ளன .
முக்கியமாக புலி , சிறுத்தை கரடி ஊட்டி நகரில் சர்வ சாதாரணமாக விசிட் செய்வது தொடர்கிறது .
தற்போது ஒரு ஆச்சரியமான விசிட்டர் ஊட்டி நகரினுள் நுழைந்து கலக்கி கொண்டிருக்கிறார் .
எட்டு வயது மதிக்க தக்க ஒற்றை கொம்புள்ள யானை கடந்த திங்கள்கிழமை தமிழகத்தின் உயரமான சிகரமான தொட்டபெட்டா சிகரத்திற்கு கூலாக வந்துள்ளது .
கோத்தகிரியில் உள்ள பத்து கிராமங்கள் டீ எஸ்டேட்டுகளை கடந்து மலையேறி இந்த சிகரத்தில் உள்ள வன பகுதிக்கு யானை வந்தது என்பது நீலகிரி வரலாற்றில் பதிவாகாத விஷயம் .
யானையை பார்த்த வியாபாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் .
தொட்டபெட்டா சிகரத்தை விசிட் செய்த யானை எல்லோருக்கும் போக்கு காட்டி வனத்துறை உட்பட..... அப்படியே ஊட்டி நகரை எட்டி பார்த்து நுழைந்தவுடன் ஊட்டி வாசிகளுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது .
சுற்றுலாக்கள் அதிகம் நடமாடிவரும் நகரில் காட்டு யானை வந்தவுடன் வனத்துறையே ஆடிப்போய்விட்டது .
எப்படியாவது மயக்க ஊசி போட்டு பிடித்து விடலாம் என்று முன்னெடுத்த நடவடிக்கை தொடர்கிறது .
தொட்டபெட்டா டீ பேக்டரி வழியாக கோடப் மந்து குடியிருப்பு பகுதியினுள் நுழைய குடியிருப்பு வாசிகள் உறைந்துபோனார்கள் ..
குன்னூர் சாலையில் உள்ள ஆர் டி ஓ ஆபிஸ் வரை விசிட் செய்த யானையை விரட்டி மீண்டும் தொட்டபெட்டா சிகர காட்டுக்குள் துரத்தினார்கள் வனத்துறையினர் .
இந்த காட்டு யானை எப்படி இவ்வளவு உயரமான மலை சிகரத்திற்கு வந்தது என்பது அதிர்ச்சியான விஷயம் .
இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறும் போது ,
" நீலகிரி மாவட்டம் முழுவதும் வன விலங்குகளின் நடமாட்டம் என்பது இயற்கையாக அமைந்த ஒன்று .
தொட்டபெட்டா போன்ற உயரமான சிகரத்திற்கு யானை இது வரை வந்ததாக சரித்திரமில்லை .
தாழ்வான பகுதியில் தான் யானைகளின் நடமாட்டம் இருப்பதை பார்க்க முடியும் .
சமீப காலங்களில் யானை குடும்பத்தின் நடமாட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை அருகில் உள்ள வன பகுதி மற்றும் பர்லியார் குன்னூர் பகுதியில் முகாமிட்டு வருவது அதிர்ச்சியாக இருந்துவருகிறது .
தற்போது ஒரு சுட்டி பையன் யானை தொட்டபெட்டா சிகரத்திற்கு விசிட் செய்து ஊட்டி நகரினுள் வந்தது ஷாக்கிங் நியூஸ் !.
வழக்கமாக யானை கூட்டம் வளர்ந்த யானைகளை கூட்டத்தில் இருந்து துரத்திவிடுவது சகஜம் .
சில சுட்டி பையன்களை துரத்துவதும் உண்டு .
அப்படித்தான் இந்த சுட்டி யானையை துரத்த பட்டிருக்கலாம் .
நீலகிரி வன பகுதியில் யானை வளை பாதை அடைக்கப்பட்டுள்ளது .
முதுமலை வன பகுதியில் இருந்து பல்லுயிர் பெருக்கத்தினால் மலை அடிவாரத்தில் கூட்டமாக கடந்து வந்து கல்லார் வன பகுதி வழியாக வந்து மேட்டுப்பாளையம் வனப்பகுதி வழியாக திம்பம் வன பகுதியினுள் சென்று மீண்டும் முதுமலை வனத்திற்குள் சென்று விடுவது ஒரு சுழற்சி தற்போது அந்த சுழற்சி தடுக்கப்பட்டுள்ளது .
யானை வளையில் ரிசார்ட்டுகள் , சுற்றுலா தீம் பார்க் , தனியார் பள்ளி , வன கல்லூரி உள்ளதால் யானை கூட்டத்தின் பயணம் தடைபட்டு பர்லியார் , குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிக்கு வந்து அதற்கு ஏற்ற உணவும் கிடைக்காமல் அலைகிறது .
இன்று சிறிய யானை வந்துள்ளது நாளை பெரிய யானை கூட்டமே வரலாம் !.
தொட்டபெட்டா சிகரத்திற்கு இது நாள் வரை யானை வந்ததில்லை , மேலும் சோலூர் தேயிலை எஸ்டேட் பகுதிக்கு பெரிய யானை வந்துள்ளது .
பைக்காரா பகுதிக்கும் யானை வந்துள்ளது .
இந்த மலை சிகரத்திற்கு யானை வந்ததை வனத்துறை ஒரு முக்கிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது .
இதை அலட்சிய படுத்தினால் மிக பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடலாம் !
ஊட்டி எச் பி எப் தொழிற்சாலை வளாகத்தினுள் புலி , சிறுத்தை , செந்நாய் கூட்டம் ,புலி செட்டிலாகியுள்ளது .
காட்டெருமை சர்வசாதாரணமாக நடமாடி பலர் அடிபட்டு உயிர் தப்பியுள்ளனர் .
இப்படியே விட்டால் மனித விலங்கு மோதல் ஊட்டி நகரில் ஏற்படலாம் .
வனத்துறை என்னசெய்ய போகிறது" என்கிறார் சிவதாஸ் .
ஊட்டி ரயில் நிலைய வளாகம் புதர்களால் சூழப்பட்டு வருகிறது இப்படியே விட்டால் இந்த பகுதியும் வன விலங்கு புகலிடமாகலாம் .
Leave a comment
Upload