தொடர்கள்
Other
ஆபரேஷன் சிந்தூர் - ரிலையன்ஸில் ஜூனியர் செய்த தவறு - பால்கி

20250409223915949.jpg

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஆபரேஷன் சிந்தூர் வர்த்தக முத்திரை விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

20250409223939431.jpg

"ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பிரிவான ஜியோ ஸ்டுடியோஸ், முறையான அங்கீகாரம் இல்லாமல் ஒரு ஜுனியர் ஆசாமியால் ஆர்வக் கோளாறில் தவறுதலாக தாக்கல் செய்யப்பட்ட அதன் வர்த்தக முத்திரை விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுள்ளது," என்று அது தெளிவு படுத்தியுள்ளது.

இந்திய துணிச்சலின் சக்திவாய்ந்த சின்னமாகவும் தேசிய உணர்வின் ஒரு பகுதியாகவும் இருக்கும் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற சொற்றொடரை வர்த்தக முத்திரையாக மாற்றும் எண்ணம் இல்லை என்று ரிலையன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆடியோ மற்றும் வீடியோ உள்ளடக்கம் போன்ற பொழுதுபோக்கு தொடர்பான சேவைகளுக்கு இந்த சொற்றொடரைப் பயன்படுத்தக் கோரி, காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

இதில் கல்வி மற்றும் பயிற்சி சேவைகள், திரைப்படம் மற்றும் ஊடக தயாரிப்பு, நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள், டிஜிட்டல் உள்ளடக்க விநியோகம் மற்றும் வெளியீடு மற்றும் கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவை.

நல்ல வேளையாக மேலதிகாரிகளின் கவனத்திற்கு சென்று மனு திருமப் பெறப்பட்டது. இல்லையேல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதுள்ள நம்பகத்தனை குறைந்திருக்கும்.