கடந்த மாதம் 21 ஆம் தேதி ஏழைகளின் போப் பிரான்சிஸ் மறைவுக்கு பின் யார் அடுத்த போப் என்ற கேள்வி உலக அரங்கில் பிரதிபலித்து கொண்டிருந்தது .
வத்திக்கானில் உள்ள அனைத்து கர்தினால்களும் ஒன்று கூடி புதிய போப்பின் தேர்வை துவங்கியது
உலகத்தில் எங்குமே நடைபெறாத ஒரு இரகசிய வாக்கெடுப்பு தான் 'conclave' கர்தினால்கள் பாரம்பரிய மிக்க 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட போப் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் இந்த புதிய போப் ரகசிய தேர்வு நடைபெறுவது வழக்கம் .
உலகில் உள்ள என்பது வயதிற்கு கீழ் உள்ள 133 கர்தினால்கள் வத்திக்கானில் ஒன்று கூடினார்கள் .
இவர்கள் தான் புதிய போப்பை தேர்தெடுக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த தேர்தலில் நான்கு இந்திய கர்தினால்கள் போப்பை தேர்வு செய்ய தகுதியானவர்கள் .
கோவாவை சேர்ந்த பேராயர் பிலிப்பெ நெரி பெரேரா .
ஐராபாத்தை சேர்ந்த கார்டினால் அந்தோணி பூலா .
கேரளத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு மற்றும் பசிலியோஸ் கிளிமீஸ் .
6 ஆம் தேதி மாலை 3 மணிக்கு சிஸ்டைன் சேப்பல் சுற்றுப்பகுதி முழுவதும் தொலைத்தொடர்பு சிக்கனல்கள் துண்டிக்கப்பட்டன .
கார்டினல்கள் , வாடிகன் ஊழியர்கள் அனைவரும் தங்களின் செல்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களை ஒப்படைத்தனர் .
சிஸ்டைன் சேப்பல் வெளியுலகத்திற்கு தனிமை படுத்தப்பட்டது .
மாநாடு நடக்கும் சிஸ்டைன் ஆலயத்தில் அவசரத்திற்கு இரண்டு டாக்டர்கள் . கிச்சன் டைனிங் ஹாலில் சில ஊழியர்கள் மட்டும் இருந்தனர் .
எலக்ட்ரோனிக் ஜாமர்கள் பொறுத்த பட்டிருந்தது .
கான்க்ளேவ் நடந்த வளாகத்தில் .டிவி ,செய்தித்தாள்கள் அல்லது ரேடியோ எதுவுமே இருப்பதில்லை .
ஏகப்பட்ட ஜன்னல்கள் இருந்தும் எதுவுமே திறக்கப்பட அனுமதியில்லை .
புதிய போப் தேர்வு நடந்து முடியும் வரை முழு லாக் டவன் தான்
இந்த தேர்வு இறைவனால் நடத்தப்படுகிறது அரசியலால் அல்ல முழு அமைதியாக நடக்கும் தேர்வு என்கிறார் பேராயர் டி நிக்கலோ !.
சிஸ்டைன் சிற்றாலயத்தின் மேல் புதிய போப் தேர்வுக்கான செய்தியை வெளியிட பாரம்பரிய சிமினி பொருத்தப்பட்டது .
போப் தேர்வானால் வெள்ளை புகை வரும் .
தேர்வாகவில்லை என்றால் கரும் புகை வரும் .
போப் தேர்வின் 2003 வருட வரலாற்றில் மூடின கதவுகளினுள் தேர்வு நடந்து வெள்ளை புகை வருவது தேர்வின் அடையாளம் 1823 முதல் இந்த வழக்கம் கடைபிடிக்க படுகிறது .
பழைய வாக்கு சீட்டுகள் மற்றும் கர்தினால்கள் எழுதிய குறிப்பு பேப்பர்களை தீ பற்றவைத்து புகை ஏற்படுத்துகின்றனர் .
போப் தேர்வு ஆகவில்லை என்றால் கருப்பு புகை வரும் .
புதிய போப் தேர்வானவுடன் பொட்டாஷியம் கோலரேட் , லாக்டோஸ் மற்றும் ரோசின் பயன் படுத்தி வெள்ளை புகை உருவாகுகிறார்கள் .
இந்த தேர்வில் முதலில் கரும் புகை வெளிவந்து புதிய போப் தேர்வாகவில்லை என்ற சிக்னல் காட்டியது .
மீண்டும் தேர்வு நடைபெற்று 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெள்ளை புகை வந்து உலகை மகிழ்விக்க செய்தது .
இந்த போப் தேர்வில் ஒன்பது கர்தினால்களின் பெயர் அடிபட்டது .
அதில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ கொக்கிம் டகிலே புதிய போப்பாக தேர்வாகுவர் என்று சமூக ஊடகங்களில் பட்டி மன்றமே நடைபெற்றது .
எதுவமே நம் கையில் இல்லை என்பது போல வியாழக்கிழமை இரவு இந்திய நேரப்படி 9.30 மணிக்கு வெள்ளை புகை தென்பட்டு புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் .
உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்க அறுபது நிமிடத்திற்கு பின் கர்தினால் டோமினிக் மெம்பெர்ட் பால் கனியில் தோன்றி "புதிய போப்பை இறைவன் தேர்வு செய்துள்ளார் அவர் அமெரிக்காவை சேர்ந்த கார்டினால் ராபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் அவர் தன் பெயரை பதினான்காம் லியோ என்று மாற்றிக்கொண்டார் " என்று அறிவித்தவுடன் உலகே வியக்கவைக்க புதிய முதல் அமெரிக்க போப் மக்கள் மத்தியில் தோன்றினார் .
அனைவரையும் பார்த்து கையசைத்து " உலகம் முழுவதும் அமைதி , துன்பப்படுவோர்களுக்கு பாலமாகவும் உதவி செய்து போப் பிரான்சிசின் பாதையை பின்பற்றுவேன் " என்று கூறினார் .
69 வயது இளம் முதல் அமெரிக்க போப் .
சிக்காகோவில் பிறந்து வளர்ந்து தென் அமெரிக்காவில் தன் துறவற பணியை துவங்கினார் .
பெரு நாட்டில் பிஷப்பாக பணிபுரிந்து சிறந்த சேவை செய்தவர் .
போப் பிரான்சிசின் மதிப்பிற்குரிய கர்தினால் இவர் .
புனித அகஸ்தினார் துறவற சபையை சேர்ந்த போப் இவர் .
சிறந்த தலைமை பொறுப்பை வகித்தவர் புதிய போப் 14 காம் லியோ உலகில் உள்ள அனைத்து பிஷப்களை தேர்வு செய்பவர் இவரே !.
"பெரு நாட்டில் மக்களுடன் தான் பணியாற்றியது மறக்கமுடியாதது ஒன்று என் துறவற வாழ்க்கை வளர்ந்தது அங்கு தான் " என்கிறார் போப் லியோ .
13 ஆம் லியோ போப் 1878 முதல் 1903 ஆம் ஆண்டு வரை தன் பதவி முழுவதும் ஏழை மற்றும் தொழிலார்களின் நலன் வளர்ச்சிக்காக உழைத்தவர் அவரின் தியாகத்தை உணர்ந்து அவரின் பெயரை நான் சூட்டிக்கொண்டேன் " என்று கூறுகிறார் .
புதிய போப் ஒரு டென்னிஸ் வீரர் .
நிறைய பயணம் மேற்கொண்டு புதிய இடம் மக்களை சந்திப்பதில் ஆர்வமும் உண்டு என்கிறார்.
போப் பிரான்சிஸ் பாதையில் பயணிக்க போகிறேன் என்று கூறுகிறார் 14 ஆம் லியோ போப் !.
புதிய போப் 14 ஆம் லியோ தமிழத்தில் உள்ள பொள்ளாச்சி புனித அகஸ்தினார் பள்ளிக்கு விசிட் செய்துள்ளார் .
Leave a comment
Upload