இந்து பெண்களின் சிந்தூரத்தை சிதைத்தனால் இந்த ராணுவ பதிலுக்கு ஆபரேஷன் சிந்தூர்னு வைத்திருக்கிறார்கள்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி, வகாஹ் எல்லை வாசல்கள் மூடல், இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி ஆணயிட்டது, பாகிஸ்தானுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுமதியோ இறக்குமதியோ கூடாது என்ற ஆணையிட்டது, தபால் போக்குவரத்து ரத்து செய்தது, . நிதி நடவடிக்கை பணிக்குழு (உலக பெரிய G7 நாடுகள் அமைத்த FATF)வில் முறையிட்டு பாகிஸ்தானை கரும்புள்ளி நாடென அறிவிக்க நடவடிக்கை எடுத்தது. இன்று இந்த தீவிரவாத ஆதரவு நாடான பாகிஸ்தானுக்கு உலக வங்கி 1.3 பில்லியன் டாலர் கடன் கொடுப்பதை ரத்து செய்ய முறையிடுவது போன்ற தாக்குதல்களை எடுத்து அந்நாட்டை பொருளாதார ரீதியில் திவாலாக்க நமது நாடு சரியான சட்ட ரீதியான , சொல்லப்போனால், காந்திய முறையில், முனைந்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஐந்து இடங்களும் பாகிஸ்தானுக்குள் நான்கு இடங்களிலும் இந்த தீவிரவாதிகளின் அடைக்கலப் பகுதிகள் குறி வைக்கப்பட்டன. இந்திய முப்படைகளின் கூட்டு முயற்சியால் 25 ஏவுகணைகள் கொண்டு இந்த இடங்கள் அக்கம் பக்கத்திலிருக்கும் பொதுமக்களுக்கு சேதாரம் இல்லாமல் தாக்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மடிந்துள்ளதாக செய்தி வந்துள்ளது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவம் தாக்கப்படவில்லை.
அந்த விளக்கமளிக்க இரண்டு ராணுவத்தில் பணிபுரியும் பெண் வீரர்களை அமைத்தது அரசின் ராஜதந்திரம்.
இது நிச்சயம் வரலாற்று புரட்சி.
இந்த பெண்களின் மீடியா ப்ரீஃபிங்கை தொடர்பு படுத்தி அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள நையாண்டி விளம்பரம் இதோ.
இந்த பெண்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன, வாழ்த்துகின்றன, பாரதம் இப்பெண்களால் பெருமை அடைகின்றது.
1999ல் ஆப்கானிஸ்தான் கந்தஹார் விமானதளத்தில், கடத்தப்பட்ட இந்திய விமான பயணிகளின் பணயமாக விடுவிக்கப்பட்ட இரு தீவிரவாதிகளின் பண்ணைகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. அந்த விமானம் கடத்தல் ஐடியாவின் மூளையான அப்துல் ரௌஃப்பும் இறந்தான். இத்தனை நாள் விட்டுவைத்ததே பெரிய விஷயம் தான்.
உலக அளவில் இந்தியாவைக் கண்டித்து எந்த நாடும் அறிக்கை விடவில்லை. இத்தனைக்கும் சீனாவும் துருக்கியும் ஏற்படவிருக்கும் தாக்குதலுக்குத் துணையாக இருக்கட்டுமே என்று பற்பல யுத்த தளவாடங்களை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொடுத்துவிட்டன. இன்று நடக்கும் ரஷ்யாவின் வெற்றி தினத்தையொட்டி நமது பிரதமரும் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் நாட்டில் இருக்கும் நிலமை கருதி ராணுவ அமைச்சகத்தின் துணை அமைச்சர் சஞ்சய் ஷேத் கலந்துகொண்டுள்ளார். படத்தில் அவர் ரஷ்ய துணை ராணுவ மந்திரியுடன்.
இதில் சீனாவின் ஜனாதிபதி சீ சின்பிங்க்கும் கலந்து கொண்டுள்ளார்,
Leave a comment
Upload