இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது முதல் பிரச்சனைதான். பிரியும் போதே பல லட்சம் இந்துக்களை பலி கொடுத்து தான் பாகிஸ்தான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. முதலில் பாகிஸ்தானுக்கு சுதந்திரம் அதன் பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் தந்தது பிரிட்டிஷ் அரசு. பாகிஸ்தானின் முதல் பிரதமர் முகமது அலி ஜின்னா. அவர்தான் பிரச்சனையின் பிள்ளையார் சுழி. பாகிஸ்தானில் இருந்த வங்க மக்களை நீங்கள் வங்க மொழி பேச கூடாது உருது மொழி கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரச்சனை செய்தார். அப்போதிலிருந்தே பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் உருவாவதற்கு திட்டம் பேச்சளவில் ஆரம்பமானது.
பக்கத்து நாடான இந்தியா ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள மக்களாட்சி அமோகமாக நடத்திக் கொண்டிருப்பது பார்த்து கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. அங்கு பிரதமர்கள் என்பவர்கள் எப்போதும் ராணுவத்தின் கைப்பாவையாக தான் இருந்தார்கள் எதிர்த்துப் பேசினால் உடனே ராணுவ ஆட்சி தான். இன்று வரை அது தான் நடக்கிறது. பாகிஸ்தான் வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று சொல்பவர்கள் நிச்சயம் அரசியல் தலைவர்கள் இல்லை. அயூப்கான் ,ஜியாவுல் ஹக், ,பர்வேஷ் முஷரப் என்று ராணுவ தளபதிகள் தான்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு ஸ்டைல் தனி. அது முதலில் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அது எங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் கட்ச் பகுதி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லாமே அப்படி அபகரிக்கப்பட்டது தான். பாகிஸ்தான் இந்தியா பிரிவினை கூட எல்லை விஷயத்தில் நேரு சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் அப்போது இருந்தது. அவர் பாகிஸ்தானுக்கு சாதகமாக நடந்து என்று குற்றம் சாட்டப்பட்டது.
பாகிஸ்தானை பொறுத்தவரை பிரதமர்கள் கைது செய்யப்படுவது ராணுவ ஆட்சி, ஆட்சியை கைப்பற்றுவது இதெல்லாம் பழக்க வழக்கம் என்று ஆகிவிட்டது.
பாகிஸ்தானின் ஒரே கொள்கை இந்தியாவில் அமைதி இருக்கக் கூடாது. ஐ எஸ் ஐ எனப்படுகின்ற உளவு போகட்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்று மூன்று அதிகார மையங்கள் இருக்கும்.
ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதிகாரம் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. பாகிஸ்தானின் பொருளாதாரம் அன்றும் சரி இன்றும் சரி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கடன் வாங்கி தான் காலம் தள்ளுகிறார்கள்.
பாகிஸ்தான் நிதி ஆதாரம் பெரும்பாலும் பொதுமக்களுக்கு பயன்படாது தீவிரவாதிகளுக்கு ஆயுதம் வாங்க இன்ன பிற செலவுகளுக்கு தான் பயன்படுத்தப்படும். பாகிஸ்தான் மக்களே இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் பாகிஸ்தானில் அது கூட இல்லை இங்கு முஸ்லிம் மக்களே முஸ்லீம் மக்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானும் அணுகுண்டு வைத்திருக்கிறது. இதை சொல்லி சொல்லி தான் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இந்தியாவை மிரட்டும். கார்கில் யுத்தத்தின்போது இந்தியா ஒரு முழு யுத்தத்திற்கு போகிறது என்று பயந்த பாகிஸ்தான் இந்தியாவை அணுகுண்டால் தாக்குவோம் என்று மிரட்டியது. எங்களிடம் 140 அணுகுண்டுகள் இருக்கின்றது என்றும் சொன்னது. அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்காவின் ஜனாதிபதி அன்றைய பிரதமர் வாஜ்பாயை தொடர்பு கொண்டு போருக்கு செல்லாதீர்கள் அவர்கள் அணுகுண்டு மூலம் உங்களைத் தாக்க தயாராகி விட்டார்கள் என்று பயமுறுத்தினார்.
அப்போது வாஜ்பாய் கொஞ்சமும் பதட்டப்படாமல் அமெரிக்க ஜனாதிபதிக்கு பரவாயில்லை அவர்கள் தாக்கட்டும். எங்களுக்கு ஒரு நகரம் போனால் அடுத்த சில நிமிடங்களில் உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது என்று பதில் சொன்னார் வாஜ்பாய்.
அதன் பின் பாகிஸ்தான் மட்டும் அல்ல அமெரிக்காவும் பின்வாங்கியது.
பாரதிய ஜனதா அரசு எப்போதும் ஏனோ தானோ என்று மறைமுகத் தாக்குதல் எல்லாம் அடிக்காது. அது எப்போதும் சொல்லிவிட்டு அடிக்கும்.
இனியாவது பாகிஸ்தான் தன் வரலாற்றை தீவிரவாதம் தவிர்த்து மக்களுக்காக மாற்றி எழுதுமா ??
சந்தேகம் தான்.
Leave a comment
Upload