தொடர்கள்
அரசியல்
விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் - 2

20250410083356456.jpg

பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 32 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே பாகிஸ்தான் ராணுவ தாக்குதலை எதிர்கொண்டு நடத்திய பதில் தாக்குதலின் போது வீர மரணம் அடைந்தார்கள். இதுவரை 12 இந்திய ட்ரோன்களை அழித்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.

இந்திய ராணுவம் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்திருக்கிறோம் என்கிறது.

ஆரம்பத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று மறுத்துக் கொண்டு இருந்த பாகிஸ்தான், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக ஆபரேஷன் செந்தூர் நடவடிக்கையால் இறந்து போன தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் போலீஸ், பாகிஸ்தான் தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தும் வீடியோ தற்சமயம் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா என்று கேள்வி கேட்டு இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையே கிட்டத்தட்ட யுத்தம் தொடங்கி விட்டது என்கிறது ராணுவ தரப்பு.

முதல் கட்டமாக பாகிஸ்தான் எல்லை ஓரம் உள்ள மாநிலங்களை உஷார் படுத்திருக்கிறது. தேவையில்லாமல் விளக்குகள் பயன்படுத்த வேண்டாம் ஜன்னல்களை திறந்து வைக்காதீர்கள் பால்கனியில் நிற்காதீர்கள் முடிந்து மட்டும் வெளியே வராதீர்கள். சைரன் ஒலி ஒலிக்கும் போதெல்லாம் எச்சரிக்கையாக இருங்கள் என்றெல்லாம் அறிவுரை வழங்கி இருக்கிறது இந்திய ராணுவம்.

இந்தியாவின் ஹிட்லிஸ்ட்டில் கடத்தல் கும்பல் தலைவன் தீவிரவாதிகளுக்கு உதவும் தாவுத் இப்ராஹிம் இருக்கிறார்.

ஆப்ரேஷன் செந்துருக்கு பிறகு பயந்து போனவர் தற்சமயம் பாகிஸ்தானில் இருந்து தப்பி வேறு எங்கோ மறைந்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

வேறு இரண்டு ரவுடிகள் ஷோட்டா ஷகில் மற்றும் முன்னா ஜிங்கா ஆகியோரும் பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தப்பி ஓடி இருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்குள் நள்ளிரவில் நுழைந்த ஏழு தீவிரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாபில் ஃபெரேஸ்பூர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி ஒருவரை திரும்பச் செல்லுமாறு எச்சரித்தும் கேட்காததால் அவரையும் எல்லை பாதுகாப்பு படை சுட்டு விட்டது.

இந்தியா பாகிஸ்தான் இடையே துப்பாக்கி சூடு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க உள்நாட்டிலேயே பாலுசிஸ்தான் விடுதலை அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது .கடந்த இரண்டு நாளில் மட்டும் 20 பாகிஸ்தான் ராணுவ வீரர்களை இந்த விடுதலை அமைப்பு சுட்டுக் கொன்ருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு தாலிபான் அரசின் ஆதரவு உண்டு`.

பாகிஸ்தான் ஏவுகணைகளை தொடர்ந்து வழி மறித்து இந்திய ராணுவம் செயலிழக்க செய்து வருகிறது. இதனால் பஞ்சாப் வயல் வெளிகளில் பாகிஸ்தான் ஏவுகணை சிதறல்கள் விழுந்து கிடக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறி வைத்து ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். ஏவுகணை தாக்குதல்களும் நடத்தியது

இது போதாது போர் விமானங்களையும் பயன்படுத்தியது.

இந்திய ராணுவம் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், எட்டு ஏவுகணைகள் மூன்று போர் விமானங்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக அழித்துவிட்டது.

இப்போதைக்கு இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாங்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எங்களுக்கு கடன் தாருங்கள் என்று நட்பு நாடுகளை கெஞ்சிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

ஆபரேஷன் செந்தூர் இரண்டாம் பாகம் விரைவில் என்ற பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.