தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஜெர்மனியிலும் ஒரு கோவில் கட்டலாம் வாங்க - ராம், கார்த்திக் ராம்

20250410090636287.jpeg

சென்ற முறை ஜெர்மனிக்கு சென்ற போது சிவா விஷ்ணு ஆலயத்திற்கு ஒரு விசிட் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அது எர்லாங்கன் என்ற நகரத்தில் இருக்கும் ஒரு குட்டி கோவில்.

இருந்தாலும் பக்தர்கள் மிகுந்த சிரத்தையோடு வந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ஜெர்மனி போன்ற பரந்து விரிந்த நாட்டில் இன்னமும் பெரிய கோவில் இருக்கலாமே என்று நினைக்கையில் நண்பர் கார்த்தி, தலைவரே ஜெர்மனியில் கோவில் கட்ட பெரிய ஏற்பாடு நடந்து வருகிறது என்று சொன்னார்.

20250410090700594.jpeg

அப்படியே அந்த ஏற்பாடுகளில் முதன்மையானவராக ராகவன் தண்டபாணியை அறிமுகப்படுத்தினார்.

அவர் சொல்கையில் இந்த ஊரில் அனுமதி தான் கடினம் அதை எப்படியோ வாங்கி விட்டோம் இனி கோவில் கட்ட வேண்டியது தான் பாக்கி என்றார்.

சிவா-விஷ்ணு ஆலயமாக உருவாகப் போகும் இந்த கோவிலில் நீங்களும் பங்கு பெறலாம். சிறியதாகவோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற பெரியதாகவோ இந்த கோவிலில் நன்கொடை கொடுத்து பங்கு பெற இந்த சுருக்கமான காணொளியைப் பார்க்கையில் புரியும்.

கோவில் கட்டுவது என்பது ஒவ்வொரு இந்துவும் கனவு காணக்கூடிய விஷயம். அதற்கு பெரிய கொடுப்பினை வேண்டும். எல்லோராலும் முடியாத காரியம். அதற்காக இறைவனே நம்மை தேர்ந்தெடுத்தால் தான் உண்டு.

உங்களால் முடிந்த ஒரு சின்ன கல்லெடுத்து கொடுத்தால் கூட அதுவும் கோவில் கட்டும் கைங்கர்யம் தான்.

எப்படி பங்கு கொள்ளலாம் என்ற விபரங்கள் இங்கே..இருக்கிறது.

20250410090722424.jpeg

எப்படி கட்டவிருக்கிறார்கள் ??

எப்படித் தோன்றியது இந்த திட்டம் ??

எத்தனை செலவாகும் ???

உங்களால் என்ன செய்ய முடியும் ?? ஒரு குட்டி சன்னதியையே நீங்கள் விருப்பப்படி கட்டித் தர முடியுமா ??

அன்ன தானம் தினமும் நடத்த திட்டம் இருக்கிறதா ?? அப்படி இருந்தால் அதில் எப்படி பங்கெடுத்துக் கொள்வது ???

சற்று நீளமானாலும், முழுக் காணொளியைப் பார்க்க இங்கே கிளிக்கவும்.......

விரைவில் கோவில் எழ அந்த சிவாவும் விஷ்ணுவும் அருள் புரியட்டும்....!!!