தொடர்கள்
அரசியல்
ஆபரேஷன் சிந்தூர் 4-விகடகவி நிருபர் குழு

20250409145756812.jpg

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை பற்றி இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்ட அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஒன்பது தீவிரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.

இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

முதலில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்த தாக்குதலுக்கான காரணத்தை சுருக்கமாக சொன்னார். பிறகு இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் வியோமிக்கா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது.

முதலில் எந்த தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவம் என்ன செய்தது விமானப்படை என்ன செய்தது என்று வீடியோ வெளியிட்டு விளக்கமாக சொன்னார்கள்.

இதனால் இந்த பெண் அதிகாரிகள் இன்று பேசும் பொருளாகி விட்டார்கள்.

உலகம் முழுவதும் இவர்கள் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள்.

யார் அந்த சோபியா குரோஷி மற்றும் வியோமிக்கா சிங் என்றும் பேச்சு வரத் தொடங்கியது.

1. சோபியா குரோஷி

கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். 1999-இல் குறுகிய சேவை ஆணையம் கிழ் ராணுவத்தில் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 17. அவரது ராணுவ ஆர்வத்துக்கு காரணம் அவரது குடும்பமே இராணுவ பின்னணி கொண்டது .இவரது கணவர் இயந்திர மயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். 2006-ஆம் ஆண்டு காங்கோவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கையில் பணியாற்றி இருக்கிறார். அங்கு ஆறு ஆண்டுகள் பணியில் ஈடுபட்டார்.

2016-ஆம் ஆண்டு லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி ஆசியன் பிளஸ் பன்னாட்டு களப் பயிற்சியான ஃ போர்ஸ் பதினெட்டில் இந்திய ராணுவ பயிற்சிப்பிரிவை வழி நடத்திய முதல் பெண் அதிகாரி என்று வரலாறு படைத்தார். அப்போது அவருக்கு வயது 35. அந்தப் பயிற்சியில் பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் பங்கேற்ற அதிகாரிகளில் ஒரே ஒரு பெண் அதிகாரி இவர்தான்.

2.வியோமிகா சிங்

'வியோமிக்கா' என்பதற்கு அர்த்தம் 'வானத்தில் வசிப்பவள் ' என்பதாகும். அந்தப் பெயரைக் பொருத்தமாக அவர் விமானப்படையில் இணைந்தார். விமானப்படையில் பெண்கள் அதிகம் பணியாற்றுவதில்லை என்பது நன்கு தெரிந்தும் விமானப்படையில் தான் தான் சேர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் இவர்.

2004 இல் குறுகிய சேவை ஆணையம் மூலம் இந்திய விமானப்படையில் இவர் நினைத்தது போல் இணைந்தார். இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் விமானியானார் இவர்.இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த விங் கமாண்டர்களில் ஒருவர் வியோமிகா சிங்.போர் விமானங்கள் இவருக்கு இயக்குவது அத்துபடி. அதில் சிறந்த அனுபவமும் இவருக்கு உண்டு. சீட்டா சேதக் போன்ற ராணுவ விமானங்களை இவர் மிக லாவகமாக கையாள்வார். இது வரை 2500 மணி நேரம் வானில் பறந்த அனுபவம் இவருக்கு உண்டு. 2021-இல் இமாச்சலப் பிரதேசத்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மணிராங் மலையில் ஏரி விமானப்படை பெண்கள் பிரிவின் ஒரு பகுதியாக இருந்தவர் வியோமிகாசிங் அவரது மன உறுதி அர்ப்பணிப்புதான் இன்று பேசும் பொருளாக அவரைக் கொண்டு சென்று இருக்கிறது.

20250410075704799.png